4. பயணம். மலேசியா. 11

(தயார் நிலையில் படகு)

4. பயணம்.  மலேசியா.  11

1401ம் ஆண்டில் ஸ்ரீ விஜய இராச்சியமென்ற சுமத்திராவை விட்டு வெளியேறிய இந்து அரசன் பரமேஸ்வரா சிங்கப்பூரை வந்தடைந்தான் அங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்ற போது மலாக்காவைக் கண்டு பிடித்தானாம். முஜபகிட் (யாவா நடுப்பகுதி) தாக்குதலின் போது, போர் நடந்த போது தப்பி ஓடி வந்து ஒளிந்த போது தான் இது கண்டு பிடிக்கப் பட்டது.

பரமேஸ்வரா ஒரு மரநிழலில் ஒதுங்கி வாழ்ந்தானாம். அந்த மரத்தின் பெயரே மலாக்கா (melaka ). வேட்டையாடி இளைப்பாற ஒரு மர நிழலில் பரமேஸ்வரா ஒதுங்கினான். இவனது வேட்டை நாய் சருகுமானுடன் சண்டை பிடித்தது. தன்னைப் பாதுகாக்க சருகு மான் வேட்டை நாயை அருகிலிருந்த ஆற்றில் தள்ளி விட்டது. நாய் ஆற்றில் மல்லாக்க விழுந்தது. பெலவான் பலவீனமானவனைத் தாக்குவான் என்ற உண்மையை இதிலிருந்த அறிந்தான். சருகுமானின் தைரியம் இவனைக் கவர்ந்தது. அந்த இடத்து இயற்கை அமைப்பும் அவனைக் கவர்ந்தது. தனக்கு பாதுகாப்பாக இருந்த இடத்து மரப் பெயர் மலாக்கா. நாய் மல்லாக்க விழுந்தது. இவ்விடத்திற்கு மலாக்கா என்ற பெயரை வைத்தான், என்ற ஒரு கதையும் உள்ளது.

தன்னைப் பலப்படுத்தும் அவசியத்தை உணர்ந்தான். ஒரு இராச்சியத்தைக் கட்டி அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்பட்டான்.

15ம் நூற்றாண்டில் இது மலே மக்களின் மீன்பிடி நகரமாக இருந்ததாம். பரமேஸ்வரா இதை மிகப் பெரிய தேசியத் தறைமுகமாக்கினான். அரேபியா, சீனா, இந்தியா, ஐரோப்பாவூடாக பட்டு, பலசரக்கு வாசனைத் திரவியங்கள், தங்கம், பீங்கான் ஏற்றுமதி இறக்குமதி ஆகியது.

1414ல் பரமேஸ்வரா இறந்தான். இவன் இந்துவானாலும் பின்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவினான். மலாக்காவின் முதன் முதல் சுல்தான் இவனே.

இது மலாக்கா பற்றிய சிறு தகவல்.

மலேசியாவின் 3வது நிலை மாவட்டம் இது.  உலக கப்பல் துறையாகி, கப்பல்கள் இளைப்பாற, சந்தைப் பரப்பு என்று உதவுகிறது.

நாம் முதலில் கடல் சார்ந்த காட்சிச் சாலையாக போர்த்துக்கீசியக் கப்பல் மெலாக்காக் கரையில் தாழ்ந்த கப்பல் ஒன்றைப் பார்த்தோம்.

மலாக்கா கிழக்கின் பேரரசாக இருந்த சரித்திர காலப் பொன்னான நினைவாக இது உள்ளது. மக்கள் ஏறி உள்ளே சென்றும் பார்க்கிறார்கள்.

பின்னர் மலாக்கா ஆற்றில் (இது பழைய பட்டினத்தினூடாகக் குறுகலாக ஓடும் ஆறு). முன்பு சிகரெட் ஓப்பியெம் ஏற்றி இறக்க பிரிட்டிஷ்சார் திறந்த பாதையாம். இன்று பழைய நினைவு, சுற்றுலாத்துறையாக உள்ளது.

(இந்த வழியாக வந்தே படகில் ஏறுகிறோம்.)

நாமிதில் பயணித்தோம்.( Melaka river cruise   )பெரியவர்களுக்கு 20 றிங்ஙெட் அனுமதிக் கட்டணம்.முக்கால் மணி நேரத்திற்கும் மேலான நேரம். எடுக்கிறது. எங்கு வேண்டுமானாலும் இறங்கி அடுத்த படகில் ஏறி வரலாம். காலை 9.00 திலிருந்து மாலை 11.30 வரை சுற்றலாம்.

(பல படகுகள் நிற்கும் காட்சி.)

கையில் அனுமதிச் சீட்டு வைத்திருக்க வேண்டும். கிழக்கின் வெனிஸ் (venice of east    )என்று கூறப்படுகிறது.

இப்படகில் திருமணம் கூட நடப்பதுண்டாம்.

ஒவ்வொரு இடத்திலும் மேம்பாலத்திற்குப் பெயர் உண்டு.

மிகுதியை அடுத்த 12ல் பார்ப்போம்.

 

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
– 10-2012.

                                                                                                        

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Vetha.Elangathilakam.
  அக் 12, 2012 @ 20:54:12

  பயணக் கட்டுரைத் தாமதத்திற்கு நேயர்கள் மன்னிக்க வேண்டும். படங்கள் வலையேற்ற முடியாத நிலையால் காத்திருந்து இன்று வலையேற்றினேன். படங்கள் அனைத்தும் என்னால் எடுக்கப் பட்டது.

  மறுமொழி

 2. drpkandaswamyphd
  அக் 12, 2012 @ 22:36:50

  பயணத்தை நன்கு ரசித்தேன்.

  மறுமொழி

 3. rathnavelnatarajan
  அக் 12, 2012 @ 23:36:45

  அருமையான பதிவு.
  நன்றி.

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  அக் 13, 2012 @ 02:08:58

  மலாக்கா பற்றிய சிறு தகவல் – அறியாத தகவல்…

  படங்களுடன் பல தகவல்கள்…

  நன்றி…

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 13, 2012 @ 07:30:37

   ”…மலாக்கா பற்றிய சிறு தகவல் – அறியாத தகவல்…”

   இன்னும் அராபியச் சொல்லிலும் கருத்து உண்டு தனபாலன்.
   நான் எல்லாம் எழுதவில்லை.
   உமது கருத்திடலிற்கு மிக்க நன்றியும், மகிழ்வுமடைந்தேன்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 5. ramani
  அக் 13, 2012 @ 04:22:36

  பெயருக்கான காரணம் இதுவரை அறியாதது
  பகிர்வுக்கு நன்றி.படங்களும் விளக்கிச் செல்லும் விதமும்
  உள்ளம் கொள்ளை கொண்டது
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 13, 2012 @ 07:40:00

   ”..பெயருக்கான காரணம் இதுவரை அறியாதது…”

   மேலே சகோதரர் தனபாலனுக்கு எழுதியுள்ளேன். பல தகவல்கள் உணடு. இது பயணம் பற்றியது என்பதால் சிறு தொகுப்பு தந்தேன்.
   மிக்க நன்றி தங்கள் கருத்திடலிற்கு.
   மகிழ்ந்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. JOKER
  அக் 13, 2012 @ 08:23:33

  http://dooritwilldo.blogspot.in/
  மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கு,
  நீண்ட நாட்கள் தங்களின் வலை தளத்திற்கும்,என் வலை தளத்திற்கும், வர இயலாமை.
  காரணம் பல.
  ஒரு முக்கியமான நீண்ட நாள் சந்தேகம்.
  என் மனதில் ஒரு தமிழ் உறவு வார்த்தைக்கு.
  பலரிடம் பலநாள் என் கேள்வியை கேட்டேன்.
  பதில் என் மனதிற்கு திருப்தியளிக்கவில்லை.
  தங்களிடம் என் கேள்வியை சமர்பிக்கிறேன்.
  அண்ணன் மனைவியை அண்ணி என்கிறோம்.
  அதே போல் கொழுந்தியாள்,நங்கையாள்,மச்சாண்டார் என பல உறவு வார்த்தைகள்.
  அண்ணனிடம் “அண்ணா அண்ணி கூறினார்” என்போம்.
  தம்பியிடம் “தம்பி தங்கச்சி கூறினார் ” என்றா சொல்ல முடியும்.
  தம்பி மனைவியை தங்கை என்று பலரும் சொல்கிறார்கள்.
  என் மனதில் உள்ள சந்தேகம் தம்பி மனைவிக்கு தங்கை என சரியான தமிழ் உறவு வார்த்தை கிடையாது,
  வேறு ஏதோ நல்ல தமிழ் இலக்கிய வார்த்தை உள்ளது.அது என்ன? என அறிய மிகவும் ஆவல்.
  விளக்கம் தருவீர்களா?
  JOKER

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 14, 2012 @ 06:36:13

   தங்கையும், தங்கச்சியும் ஒன்று. மற்றவை பற்றி மெயில் போடுகிறேன்.
   கருத்துரை தந்ததற்கு மிக்க நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. Vetha.Elangathilakam.
  அக் 13, 2012 @ 09:06:02

  அன்பு தோழி, MD Rizwan Rizwan likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள்- FB.

  You and Guna Thamizh like this..
  Vetha ELangathilakam:-
  Thank you….and god bless you sir….

  மறுமொழி

 8. meha nathan
  அக் 13, 2012 @ 11:11:40

  நல்லதொரு பயண கட்டுரை,நாவல் படித்தது போன்ற புத்துணர்வு,எங்களையும் கட்டுரைதுணை கொண்டு அழைத்து சென்ற உங்களுக்கு எனது நன்றிகள்..

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 13, 2012 @ 11:30:26

   ”…நல்லதொரு பயண கட்டுரை,நாவல் படித்தது போன்ற புத்துணர்வு,எங்களையும் கட்டுரைதுணை கொண்டு அழைத்து…..”

   மிக நன்றி சகோதரரே தங்கள் கருத்து மிக மகிழ்வு தந்தது.
   இது 4வது பயணக் கட்டுரை. பொருளடக்கத்தில் பார்த்தால் விளங்கும்.
   விரும்பினால் வாசித்து கருத்திடலாம்.
   மிக மிக நன்றி தங்கள் வரவு, கருத்திற்கு.
   இறை ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 9. b.ganesh
  அக் 13, 2012 @ 12:13:37

  பரமேஸ்வரன் பற்றியும் மலாக்கா பெயர் வந்த விதம் பற்றியும் அறிந்து கொண்டது மிக மகிழ்வாக இருந்தது. படங்களும் (வழக்கம் போல்) மிக நன்று.

  மறுமொழி

  • Vetha.Elangathilakam.
   அக் 13, 2012 @ 12:43:30

   நீண்ட இடைவேளைக்குப் பின்பு தங்கள் வரவிற்கு நன்றி.
   கருத்திடலிற்கும் மகிழ்வும், நன்றியும்.
   மலாக்கா அராபிய சொல்லிலிருந்து வந்தது என்றும் உள்ளது. என்றும் அதன் கருத்து meeting point என்ற மாதிரியும் இருந்தது. போல நினைவு. சரியாக உறுதியாக இதைக் கூறத் தெரியவில்லை.
   ஆயினும் மேலே Aakkaththil கூறியவை சரி.

   தங்களிற்கு தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 10. sujatha anton
  அக் 13, 2012 @ 22:00:38

  மலாக்கா பற்றிய தகவல்களும், புகைப்படங்களும் அருமை…..பயணக்கட்டுரை தொடரட்டும்.

  மறுமொழி

 11. வே.நடனசபாபதி
  அக் 20, 2012 @ 02:17:58

  மலாக்காவை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு பதிவைப் படித்தபோது ஏற்பட்டது. தொடர்கிறேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: