18. நவராத்திரி

 

சாவித்திரி தாயே!

 

(ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்)

அறுபத்து நான்கு கலைகளையும் எமக்கு

சிறுகச் சிறுகப் புகுத்தும் சாவித்திரி தாயே!

இறுகப் பிடிக்கிறேன் உன்பாதமென்றும்

மறுக்காது உன்னருள் தருவாயம்மா!

 

நவராத்திரி   

 

வாழ்வின் முறுவலின் ஆதாரங்கள்
ஆழ்ந்த தத்துவம் நிறை இராத்திரிகள்.
ஆன்ற கலைகளை ஆராதிக்கும் இரவுகள்
மூன்று தெய்வங்களைப் போற்றும் இரவுகள்.

ன்பது இராத்திரிகள் ஒளிரும் சுபராத்திரிகள்
மகாசக்திகளின் தத்துவம் நிறை இராத்திரிகள்.
முக்தி தரும் தேவியரிடம் ஆக்க நிலை வேண்டி
ஒருமித்து நாம் வணங்கும் நவராத்திரிகள்.

வீரத்தின் அதிபதி துர்க்கையை
வீரியம் வேண்டி வணங்குகிறார்.
செல்வத்தின் அதிபதி இலக்குமியை
செல்வம் வேண்டிச் சேவிக்கிறார்.

ல்வியின் அதிபதி சரசுவதியைக்
கல்வியை வேண்டி வணங்குகிறார்.
கருமமாய் வணங்கும் புனித இராத்திரிகள்.
விசய தசமியுடன் விடைபெறுகின்றன.

வித்துவங்களின் இணைவின் ஆரம்பத்தில்
தத்துவமான மனவியல்  வழியாரம்பம்
விசயதசமியன்று தான் வித்தியாரம்பம்
வியாபித்து எங்கும் வெற்றிவாகை சூடும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-10-2002.

(ரி.ஆர்.ரி தமிழ்அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப் பட்டது.

Germany MANN magacine published this poem in 3-10-2004)

In Anthimaalai web site :_    http://anthimaalai.blogspot.com/2011/10/2.html

 

 

                                           

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. துளசி கோபால்
  அக் 14, 2012 @ 23:10:17

  நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

  மறுமொழி

 2. Maniraj
  அக் 15, 2012 @ 01:40:48

  அருமையான ஆக்கம் .. நவ்ராத்திரி வாழ்த்துகள்…

  மறுமொழி

 3. Meha Nathan
  அக் 15, 2012 @ 02:22:26

  நன்றி,கோவை கவி அவர்களுக்கு..

  மறுமொழி

 4. Ganesalingam.
  அக் 15, 2012 @ 06:47:03

  அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள். ….

  மறுமொழி

 5. sasikala
  அக் 15, 2012 @ 06:57:05

  நவராத்திரி சிறப்பு சிறப்பாகவே இருக்குங்க.

  மறுமொழி

 6. பழனிவேல்
  அக் 15, 2012 @ 12:44:23

  அழகு…

  ஒளியுடன் வாழ்வோம்…!
  ஒளிமயமாய் மாறுவோம்…!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2012 @ 19:35:55

   ”…அழகு…

   ஒளியுடன் வாழ்வோம்…!
   ஒளிமயமாய் மாறுவோம்…!…”

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் பழனிவேல் உமது கருத்திற்கு..
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. திண்டுக்கல் தனபாலன்
  அக் 15, 2012 @ 12:53:41

  சிறப்பான கவிதைக்கு நன்றி சகோதரி…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 8. Rathy GOBALASINGHAM
  அக் 15, 2012 @ 13:14:21

  Congratulation.

  மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  அக் 15, 2012 @ 13:40:26

  வித்துவங்களின் இணைவின்
  தத்துவங்களின் பொருளில் அருமையான கவிதை
  நவராத்ரி வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 17, 2012 @ 19:39:25

   ”..வித்துவங்களின் இணைவின்
   தத்துவங்களின் பொருளில் அருமையான கவிதை
   நவராத்ரி வாழ்த்துகள்…”

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் ஐயா.
   தங்களிற்கும் நவராத்திரி வாழ்த்து.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 10. harisingh
  அக் 15, 2012 @ 14:40:59

  நவராத்ரி வாழ்த்துகள்

  மறுமொழி

 11. rathnavelnatarajan
  அக் 16, 2012 @ 15:50:48

  அருமை.
  நன்றி.

  மறுமொழி

 12. ranjani135
  அக் 25, 2012 @ 10:55:08

  அன்பு வேதா,
  நவராத்திரி முடிந்து உங்கள் நவராத்திரிக் கவிதையை வாசிக்க வந்துள்ளேன். மன்னிக்கவும்.

  மிக அழகான வார்த்தைகளால் மூன்று தேவியரையும் துதி பாடியிருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 13. கோவை கவி
  அக் 16, 2015 @ 09:04:34

  You, விஜயகுமார் வேல்முருகன், Kalanithy Jeevakumaran, Prema Rajaratnam and 7 others like this.
  Comments

  Velavan Athavan :- கூற்றுடை மறையாய் காற்றுடை வெளியிலும்
  கல்வி செல்வம் வீரம் என எமை ஆழும் அன்னையர்க்கு ஒன்பது இரவுகளும் இறையடி பாடி இன்புறும் இத் திருநாளே நவிராத்திரியாகம் என பண்பொடு பதிவு தந்தீர்கள் வேதாக்கா மகிழ்ச்சி
  Unlike · Reply · 1 · October 14 at 9:39pm

  Vetha Langathilakam :- mikka makilchchy – nanry Sujen……

  மறுமொழி

 14. கோவை கவி
  மார்ச் 22, 2019 @ 12:11:57

  Vetha Langathilakam :- சாவித்திரி – கலைமகள்….
  2013
  Vetha Langathilakam :- மிக்க நன்றி சகோதரா!.இனிய இரவு வணக்கம்….
  2013
  Genga Stanley :- nalla varikal vetha.
  2013
  சிறீ சிறீஸ்கந்தராசா:– ஓன்பது இராத்திரிகள் ஒளிரும் சுபராத்திரிகள்
  மகாசக்திகளின் தத்துவம் நிறை இராத்திரிகள்.
  முக்தி தரும் தேவியரிடம் ஆக்க நிலை வேண்டி

  ஒருமித்து நாம் வணங்கும் நவராத்திரிகள்.
  **** வாழ்த்துக்கள் அம்மா! அந்த படைப்பை இங்கேயும் பகிர்ந்து கொள்ளுங்கள்.. நன்றி!!
  2013
  Vetha Langathilakam :- இதோ அதையும் பகிர்ந்துள்ளேன்….
  2013
  சிறீ சிறீஸ்கந்தராசா :- மிகவும் நன்றி அம்மா!! வலைப்பூக்களிலும் பார்க்க முகநூலில் பதிவு செய்வதால் அதிகமான வாசகர்களை சென்றடையும் என நம்புகிறேன்!!
  2013
  Abira Raj :- ஓன்பது இராத்திரிகள் ஒளிரும் சுபராத்திரிகள்
  மகாசக்திகளின் தத்துவம் நிறை இராத்திரிகள்.
  முக்தி தரும் தேவியரிடம் ஆக்க நிலை வேண்டி
  ஒருமித்து நாம் வணங்கும் நவராத்திரிகள்.////பகிர்வுக்கு மிக்க நன்றி
  2013
  Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி வேதா, சாவித்திரி தேவிக்கு உளமார்த்தமான ஒரு பா தொடுத்துச் சாத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
  2013

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: