தொலைத்தவை எத்தனையோ 7.

                                                                                                                   7.

வளவு, நிலம் என்று அன்று வாழ்ந்த வாழ்வு இன்று எப்படியெல்லாம் மாறிவிட்டது. தாய் நிலத்தில் வாழ்ந்த வாழ்வைக் கனவிலே தான் காண முடிகிறது. (போகலாமே, பார்க்கலாமே என்கிறீர்களா!)

அங்கு வாழ்நிலையே மாறிவிட்டது.

கணனியில் பல படங்களைப் பார்க்கும் போது நினைவு பொங்கியெழுகிறது. ஏக்கம் பெருகுகிறது.

சமீபத்தில் இலுப்பம் பூவைப்பார்த்தேன். எத்தனை நினைவுகள்!….

நான் வாழ்ந்த வீட்டின் முன்புறத்தில் பக்கமாக பெரிய வளவு. அதில் பெரிய இலுப்பை மரங்கள் 2ம், சிறியதாக வேறும் இருந்தது.

இதில் பூக்கள் பூத்து விழும் போது, நிலத்தில் முத்து சிதறியதான அழகு.

கொட்டிக் கிடக்கும் அதனழகைப் பூரணமாக ரசிப்பதற்காகவே தம்பி தங்கைகளுடன் சேர்ந்து மரத்தின் கீழே சருகுகளைக் கூட்டி, கற்களைப் பொறுக்கி, பெரிய புற்களை வெட்டி, அழகாக்கி மாலையில் எதிரே அமர்ந்து ரசிப்போம். அதிகாலையிலும் பார்க்கும் போது மனமகிழ்வாக இருக்கும். நாமாக முன்னெடுக்கும் இந்த வேலைகளிற்கு அப்பா மறைமுகமாக ஆதரவு தருவார்.

உரித்துச் செதுக்கிய குட்டிக்குட்டித் (மினி மினித்) தேங்காய் –  முடியோடு இருப்பது போன்ற தோற்றம் கொண்டது இலுப்பைப் பூ.

இது மட்டுமா! இன்னம் பல….

இரவில் இலுப்பைப் பழம் பழுக்கும் காலங்களில்

இலுப்பை-காய்-thamil.co_.uk_

வெளவால்களின் கூச்சல் நிறையக் கேட்கும். தெரிந்த. சொந்தக் காரர் வெளவால் இறைச்சிக்காக இதை இரவில் சுடுவார்கள். பின்பு காலையில் நாங்கள் கீழே கிடக்கும் வெளவாலைப் பார்த்து ஆச்சரியப் படுவோம். யாரோ சுட்டிருப்பார்கள் என்று ஊகித்து இன்னார் இன்னார் என எங்களுக்குள் பேசுவோம். பின்பு நேரம் சிறிது செல்ல ”அண்ணை நாங்கள் தான் சுட்டோம் ” என்று கேட்டு எடுத்துச் செல்வார்கள்.
இது தவிர வெளவால்களால் தானென்று நினைக்கிறேன் ஓக்கிட்  பூக்கன்றுகள் இலுப்பை மரத்தில் ஒட்டி வளரும்.

bulbophyllum_night_flower_003orchidcutout

முன் வீட்டு டாக்டர் அருட்பிரகாசத்தின் சொந்தக்காரர்கள் வந்து எம்மிடம் கேட்டு கொக்கைத் தடியால் பிடுங்கிச் செல்வார்கள்.

vavvaal

(வெளவால் )
அவர்களிற்கு ஓம் சொல்லிப் பிடுங்கிச் செல்வது மன மகிழ்வாக இருக்கும். அடுத்து

அப்பா மண்வெட்டியை எடுத்துக் கொண்டு ”..பேபி (baby – my village name)வருகிறாயா கொச்சாட்டிக்கு? (பனை வளவிற்கு)” என்று கூப்பிட்டதும், அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பேன். ( எனக்கு 8 வயதிற்குள் தானிருக்கும்.)
”…ஏனப்பா?…” என்று கேட்டபடி போவேன்.
”…வாவேன்…” என்றபடி கூட்டிப் போவார்..

அங்கு போனதும் என்னை மறந்து புல்லுப் பூக்களை நான் பிடுங்கிச் சேகரிப்பேன். கரடு முரடற்ற, வழவழப்பான கற்களைச் சேர்த்துப் பொறுக்குவேன். ( அவை கொக்கான் வெட்டவும், வேறு விளையாட்டிற்கும் உதவும்).

இப்படி என்னை மறந்து நான் உலாவ மறு பக்கம் அப்பா இரட்டைக் கட்டில் போட்டது போல ஈரமண்ணை சேர்த்து அணைத்து  உயரமான பாத்தி ஒன்று செய்திட்டார்.

எப்படி இப்படி அப்பாவால் முடிகிறது! என என்னுள் நான் ஆச்சரியப்பட்டேன்.

அப்பா மெலிந்த தேக வாகு கொண்டவர்.

சில வேளைகளில் தான் அப்பா இப்படிச் செய்வார். 
மற்றும் வேளைகளில் சின்னப் பொடி வந்து கூலிக்குச் செய்து தரும். அப்போதும் சின்னப் பொடிக்கு தேனீர் கொடுக்க என்று நானும் வீட்டுப் பெரியவர்களுடன் கூடச் சென்று செய்யும் வேலைகளைப் பார்ப்பதுண்டு.

மிகுதியை  மறு அங்கத்தில் பார்ப்போம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-10-2012.

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. drpkandaswamyphd
  அக் 20, 2012 @ 01:46:55

  போன காலம் வரவே வராது. நினைவுகளை அசை போடவேண்டியதுதான்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2012 @ 09:43:21

   ”..போன காலம் வரவே வராது. நினைவுகளை அசை போடவேண்டியதுதான்…”

   கருத்திற்கு மிக்க நன்றி ஐயா.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  அக் 20, 2012 @ 01:49:22

  இனிய நினைவுகள்… ரசித்தேன்…

  இலுப்பைப் பூ – சூப்பர்ப்…

  தொடர்கிறேன்… நன்றி…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2012 @ 09:47:20

   ஆமாம் இலுப்பைப் பூ சரி. – இலுப்பம் பூ ஒரு வேளை பேச்சுத் தமிழாக இருக்கலாம்!
   கருத்திற்கு மிக்க நன்றி தனபாலன்..
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. வே.நடனசபாபதி
  அக் 20, 2012 @ 02:23:03

  தொலைத்தைவைகள் எத்தனையோ இருந்தாலும் நினைவுகளை தொலைக்காதவரை கவலை வேண்டாம். பதிவை இரசித்துப் படித்தேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2012 @ 10:02:55

   சகோதரா இப்போதும் முடியவில்லை அங்கு கருத்திட.
   தங்கள் வரவிற்கு மிக்க மிக்க நன்றி.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. S.Kanagasundram
  அக் 20, 2012 @ 04:32:55

  Which is your home country? Tamil Nadu,India,Malaysia or Singapore.You miss it.I am happy to read everything here.THANK YOU.

  மறுமொழி

 5. rathnavelnatarajan
  அக் 20, 2012 @ 07:49:15

  அருமை.
  நன்றி.

  மறுமொழி

 6. kowsy
  அக் 20, 2012 @ 07:53:46

  இளமைக்காலம் ஒரு இனிமையான காலம் இதனை அசை போடவே முடியும் . திரும்பவராது திருப்பிப் பார்க்க முடியும் . இழந்தவை இழந்தவை இவை எண்ணங்களில் நிறைந்தவை

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2012 @ 11:22:25

   பாலபருவக் காலமும் மிக இனிமையானது.
   எண்ணங்களில் நிறைந்தே பதிகிறேன்.
   கருத்திடலிற்கு மிக்க நன்றி.
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 7. sasikala
  அக் 20, 2012 @ 09:14:00

  மலரும் நினைவுகள் மனம் அதிலேயே லயித்துக்கிடக்கிறது. மீண்டும் அந்த இடங்களைக்காண்போமா ? என்ற ஏக்கம் மட்டுமே மிஞ்சுகிறது.

  மறுமொழி

 8. b.ganesh
  அக் 20, 2012 @ 10:43:57

  உங்களின் இளமைக்கால நினைவுகளை அசை போடுவது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. இருப்பினும் அந்த நாள் மீண்டும் வந்திடாதோ என்கிற உஙகள் ஏக்கம் மனதை சற்றே கனக்கச் செய்கிறது. உண்மைதான். அந்த வசந்தம் (வாழ்விலும் சரி. நாட்டிலும் சரி) திரும்ப வந்திடாது. பசுமையான நினைவுகளே துணை நமக்கு.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 20, 2012 @ 11:24:54

   ”…அந்த வசந்தம் (வாழ்விலும் சரி. நாட்டிலும் சரி) திரும்ப வந்திடாது. பசுமையான நினைவுகளே துணை நமக்கு…”

   ஆமாம் நீங்கள் சொல்வது சரி சகோதரா..
   கருத்திடலிற்கு மிக்க நன்றி.
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  அக் 20, 2012 @ 13:47:16

  நினைவுகளில் மூழ்கித்
  திளைப்பதின் ஆனந்தம்
  நிகழும் காலத்து மகிழ்வுகளை விட
  ஆயிரம் மடங்கு அதிகம்
  மகிழ வைத்த பதிவு

  மறுமொழி

 10. maathevi
  அக் 21, 2012 @ 03:31:59

  கிராமத்து நினைவுகள் என்றும் இனிமையானவை. தொடருங்கள்….

  மறுமொழி

 11. sujatha anton
  அக் 21, 2012 @ 05:42:11

  பிறந்த மண்ணின் வாழ்க்கை ஞாபகங்களை தாலாட்டுகின்றது.

  மறுமொழி

 12. பழனிவேல்
  அக் 24, 2012 @ 04:29:53

  “வளவு, நிலம் என்று அன்று வாழ்ந்த வாழ்வு இன்று எப்படியெல்லாம் மாறிவிட்டது.
  தாய் நிலத்தில் வாழ்ந்த வாழ்வைக் கனவிலே தான் காண முடிகிறது.
  (போகலாமே, பார்க்கலாமே என்கிறீர்களா!)
  அங்கு வாழ்நிலையே மாறிவிட்டது.”

  இந்த வரிகளின் வலி மிகவும் அதிகம்.
  ஆம் உண்மை தான்,

  “தொலைத்தவை எத்தனையோ “

  மறுமொழி

 13. jaghamani
  அக் 29, 2012 @ 09:17:08

  அங்கு போனதும் என்னை மறந்து புல்லுப் பூக்களை நான் பிடுங்கிச் சேகரிப்பேன்.
  கரடு முரடற்ற, வழவழப்பான கற்களைச் சேர்த்துப் பொறுக்குவேன்.

  எத்தனை இனிமைகளை இழந்திருக்கிறோம்..!!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: