37. கவிதை பாருங்கள்(photo,poem)

உள்ளக் கமலத்தில் உறைபவளே
வெள்ளைத் தாமரை வீணையாளே!
கொள்ளையாயுன்னருளை உலகிற்கு
அள்ளிருள் (கும்மிருட்டு) நீங்கத் தருவாயே!

கலை கல்விக்கு அளப்பரிய
விலையற்ற இராசாங்கம் கொண்டவளே
அலையிடும் உள்ளம் காத்திரமாய்
நிலையிட கலைகள் நிறைப்பாயே!

சரசுவதித் தாயே! உன்
அரசாம் வித்துவப் பகுதி
முரசு கொட்ட என்னுள்ளே
பரவசமாய்ப் பதிய அருள்வாயே!

இலட்சமீகரத்திற்கு அலைமகள்
இலக்கணமான தெய்வீகம்
இலங்கும் மூவிரவு.

இலக்கிற்காய் இலக்கிடுவார்

இலட்சம் மனிதர்
இலட்சுமி கடாட்சத்திற்கு.

இலட்சணமாய் இசைந்து
இலட்சியம் நிறைவேற
இலக்குமியை இறைஞ்சுவோம்.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-10-2012.

                                    

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவிஞா் கி.பாரதிதாசன்
  அக் 20, 2012 @ 22:57:07

  வணக்கம்

  கலைமகள் தாயை வேண்டி
  கனிந்துள கவிதை கண்டேன்!
  அலைமகள் தாயை வேண்டி
  அளித்துள கவிதை கண்டேன்!
  வலைமகள் மகிழும் வண்ணம்
  வடித்துள கவிதை கண்டேன்!
  தலைமகள் என்றே போற்ற
  தமிழினில் வேதா வாழ்க!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 21, 2012 @ 20:22:34

   தமிழ்த் தலைமகன் வடித்த சுத்த
   தமிழ் கவிதை கண்டு மகிழ்ந்து
   தலை வணங்குகிறேன் ஆசிரியரே.
   ததும்பிடும் நன்றி உமக்கே.
   தமிழ் தெய்வத்தின் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. ramani
  அக் 20, 2012 @ 23:23:14

  சிறப்புப் பதிவு மிக மிகச் சிறப்பு
  கவிதை படியுங்கள் எனச் சொல்லாது
  பாருங்கள் என சொன்னது மிகவும் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 21, 2012 @ 20:25:21

   ”..சிறப்புப் பதிவு மிக மிகச் சிறப்பு
   கவிதை படியுங்கள் எனச் சொல்லாது
   பாருங்கள் என சொன்னது மிகவும் கவர்ந்தது..”

   அது எனக்கொரு பைத்தியம் படத்துள் எழுத…
   அது தான்.
   மிக்க நன்றி சகோதரா.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  அக் 21, 2012 @ 01:27:06

  அழகான படங்கள்!அழகான கவிதை வணக்கம்.

  மறுமொழி

 4. maathevi
  அக் 21, 2012 @ 03:29:02

  நவராத்திரி விழாக்காலம் சக்தியைப்போற்றித் துதிக்கும் சிறப்பான கவிதை.

  விழாக்கால வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  அக் 21, 2012 @ 07:39:19

  அருமை… அருமை…

  விஜயதசமி வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 6. abdulkadersyedali
  அக் 21, 2012 @ 11:34:44

  நல்ல கவிதை சகோ

  மறுமொழி

 7. கோவை கவி
  அக் 21, 2012 @ 15:18:37

  Sujeevan Sujee likes this..in TAMILWOMAN Prabalini Prabakaran.
  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா and காதல் ராஜா like this..in முப்பொழுதும் உன் நினைவுகள்.
  Sundrakumar Kanagasundram and Kanagasundram Sundrakumar like this..in THE WAY TO HEAVENஆன்மீகபாதையும் நல்வழியும்.
  Sundrakumar Kanagasundram:-
  Good Morning.THANK YOU.
  Sundrakumar Kanagasundram:-
  NICE.
  Johnson William in TAMILWOMAN Prabalini Prabakaran.:-
  nice
  Vetha ELangathilakam:-
  Thank you sakothara Johnson William.God bless you….

  Vetha ELangathilakam:-
  Thank you so much and God bless you all…
  அன்பு தோழி, Mari Muthu C and Hari Singh like this..in முப்பொழுதும் உன் நினைவுகள்.
  Jai Ganesh likes this..in Ganesh songs/GANESALINGAM ARUMUGAM&R.P.OM.
  வசந்தா சந்திரன் likes this…in Pillayar Kovil – Herning, Denmark.
  நாயகி கிருஷ்ணா and Anbin Malar like this…..in கவிதை குழுமம் – Kavithai Kulumam.

  மறுமொழி

 8. Meha Nathan
  அக் 22, 2012 @ 05:03:41

  ஐயா லட்சமியை எங்கள் இல்லத்திற்கு கொண்டு வந்து விட்டீர்கள் ந்ன்றி..

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 22, 2012 @ 06:32:29

   ”..ஐயா லட்சமியை எங்கள் இல்லத்திற்கு கொண்டு வந்து விட்டீர்கள் ந்ன்றி..”

   மிக்க நன்றி சகோதரா.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 9. AROUNA SELVAME
  அக் 22, 2012 @ 21:06:15

  கல்விக்கும் செல்வத்திற்கும்
  அருமையான அழகான கவிதை.

  வணங்கி வாழ்த்துகிறேன்.

  அன்புடன்
  அருணா செல்வம் (பெண்)

  மறுமொழி

 10. kowsy
  அக் 23, 2012 @ 18:22:11

  சிறப்புநாளில் சிறப்பான கவிதை தந்தமைக்கு நன்றி. சக்தி அருள் கிட்டட்டும் சகல செல்வங்களும் கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்

  மறுமொழி

 11. பழனிவேல்
  அக் 24, 2012 @ 04:31:39

  “இலக்கிற்காய் இலக்கிடுவார்

  இலட்சம் மனிதர்
  இலட்சுமி கடாட்சத்திற்கு.

  இலட்சணமாய் இசைந்து
  இலட்சியம் நிறைவேற
  இலக்குமியை இறைஞ்சுவோம்.”

  அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 31, 2012 @ 07:47:34

   ”…இலக்கிற்காய் இலக்கிடுவார்

   இலட்சம் மனிதர்
   இலட்சுமி கடாட்சத்திற்கு.

   இலட்சணமாய் இசைந்து
   இலட்சியம் நிறைவேற
   இலக்குமியை இறைஞ்சுவோம்.”

   அழகு…”

   மிக்க நன்றியும் மகிழ்வும் பழனி சகோதரா. .
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 12. jaghamani
  அக் 29, 2012 @ 09:14:21

  இலட்சமீகர கவிதைக்கு வாழ்த்துகள்..

  மறுமொழி

 13. rathnavelnatarajan
  நவ் 03, 2012 @ 10:54:04

  அருமையான கவிதை.
  நன்றி.

  மறுமொழி

 14. கோவை கவி
  மார்ச் 22, 2019 @ 12:17:13

  Mari Muthu:- இலட்சுமியை வணங்குவோம்…
  2013

  Sakthi Sakthithasan :- இலக்குமிக்குரிய வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்
  2013

  மறுமொழி

 15. கோவை கவி
  மார்ச் 22, 2019 @ 15:06:30

  N.Rathna Vel :- சரியான சரியான கவிதை. மகிழ்ச்சி. வாழ்த்துகள். நன்றி.
  2013
  சிறீ சிறீஸ்கந்தராசா:- “சரசுவதித் தாயே! உன்
  அரசாம் வித்துவப் பகுதி
  முரசு கொட்ட என்னுள்ளே

  பரவசமாய்ப் பதிய அருள்வாயே!”
  **** வாழ்த்துக்கள் அம்மா!! எல்லா நலனும் பெற்று வாழ்க வளமுடன்!!
  2013
  G Saravana Kumar :- அருமை
  3013
  Aangarai Bairavi:- Kalaimagalum magizhndhiruppal ennodu.
  2013
  Verona Sharmila :- கலை கல்விக்கு அளப்பரிய
  விலையற்ற இராசாங்கம் கொண்டவளே .. அருமை.
  2013
  G Saravana Kumar:– Thank you (உங்க புறோபைஃல் படத்தில் நான் மயங்குகிறேன் (சூர்யா எனக்கும் பிடித்தவர்)..
  Vetha Langathilakam:- Aangarai Bairavi !..Thank you..என்ன ஒரு பெயர் சார்! ஆங்காரி பைரவி – (பிடிச்சிருக்கு.)….

  Abira Raj :- சரசுவதித் தாயே! உன்
  அரசாம் வித்துவப் பகுதி
  முரசு கொட்ட என்னுள்ளே
  பரவசமாய்ப் பதிய அருள்வாயே!
  2013
  Vetha Langathilakam:- Sharmila Dharmaseelan!… thank you!…என் தங்கை மகளுக்கும் Sharmila தான்…
  2013
  Vetha Langathilakam :- Abira Raj…thank you..
  2013
  Vetha Langathilakam :- Aangarai Bairavi …- எமது 3வது நூல் உணர்வுப் பூக்கள்- விமரிசனம் வார்ப்பு .கொம் இணையத் தளத்தில் தாங்கள் தானே எழுதியது?…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: