38. திலகமிட்டு விடு!

 

திலகமிட்டு விடு!

ஆண்:-
ஒரு மொழி எனக்குன் மறுமொழி மலர்வாய்!
ஒரு நாழிகைப் பொழுதெனும்முன் திருமுகம் காட்டேன்!
மதுரசமே! மாங்கனியே! மதுர இதழ் திறவேன்!
முந்திய நாளின் வினாவிற்கு முழுமை மறுமொழி தாராய்!
                                  (ஒரு மொழி)
பெண்:-
குறுநிலவோ! நீ முழுநிலவோ! எந்தன்
உருவினுக்கொளியூட்டும் கருவூலமோ! கலங்கரைவிளக்கோ!
கமழும் முல்லைக் கொடியின் கீழ் கருத்துக் கேட்கும் சுந்தரனே!
மறுத்துப் பேசா நிலையாலே மகிழ்ந்த பதிலாயுணராயோ! (குறுநிலவோ!)

ஆண்:-
கண்மணியுன் கமல அழகு, கண்டு தடுமாறும் மனது
விண்டுரைக்க வழியேது! கண்டு நீ ஓடும் போது!
நில்! நிலையாக என் நெஞ்சில் நிற்பவளே நிர்மலப் பெண்ணெ!
நீயோட முடியாதே நான் தாலியொன்று தந்தால்   (ஒரு மொழி)

பெண்:-
கண்ணின் கருமணிக் கதிர்கள், இன்னும் சொல்வதென்ன!
எண்ணு முன்னே விழியம்புகள் என்னைத் துளைப்பதென்ன!
காளையுன் பாளைச் சிரிப்பு ஆளை மாய்க்கிறதே!
வேளையின்றி உன்னையெண்ணியென் வளையலும் கழன்றிடுதே!
                                  (குறுநிலவே)
ஆண்:-
கற்றைக் குழலில் விரல் நுழைத்து சுற்றிச் சுருட்டுமென் ஆசை
வெற்று வேட்டாய் போவதோ வேல் விழியாளே கூறாய்! (ஒரு மொழி)

பெண்:-
முற்றும் தெரிந்த ஞானியாய் நீ நெற்றியில் திலகமிட்டு விடு!
குற்றமின்றி நானுமுன்னோடு குளிர்ந்து மகிழ்ந்து ஆடலாமே! (குறுநிலவோ!)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-10-12.

 

                                             

 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Venkat
  அக் 24, 2012 @ 00:08:35

  சிறப்பான ஆக்கம். பாராட்டுகள்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  அக் 24, 2012 @ 04:10:56

  அருமை… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. பழனிவேல்
  அக் 24, 2012 @ 04:35:19

  “கண்மணியுன் கமல அழகு,
  கண்டு தடுமாறும் மனது
  விண்டுரைக்க வழியேது!
  கண்டு நீ ஓடும் போது!
  நில்!
  நிலையாக என் நெஞ்சில் நிற்பவளே நிர்மலப் பெண்ணெ!
  நீயோட முடியாதே நான் தாலியொன்று தந்தால்”

  நினைத்து, நினைத்து சிரித்தேன்…

  [நல்ல தமிழ் பாடல்] மிக மிக அழகு…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2012 @ 17:29:08

   ”…நில்!
   நிலையாக என் நெஞ்சில் நிற்பவளே நிர்மலப் பெண்ணெ!
   நீயோட முடியாதே நான் தாலியொன்று தந்தால்”

   நினைத்து, நினைத்து சிரித்தேன்…

   [நல்ல தமிழ் பாடல்] மிக மிக அழகு…”

   good! கவிதையால் மகிழ்வது நன்று தானே!.
   மகிழ்வடைந்தேன் நானும் ஒரு புன்சிரிப்புடன்.
   நன்றி சகோதரா. இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 4. ramani
  அக் 24, 2012 @ 05:23:18

  அழகிய ஓவியமே அருமையாக
  கற்பனையைத் தூண்டி இருக்கக் கூடும் என்றாலும்
  கவிதைக்கான ஓவியமாக மிகச் சரியாக அமைந்தது போல்
  உள்ளது.மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2012 @ 17:31:45

   ”..கவிதைக்கான ஓவியமாக மிகச் சரியாக அமைந்தது போல்
   உள்ளது.மனம் தொட்ட பதிவு..”

   முதலே கவிதை எழுதிவிட்டு நல்ல படம் தேடியபடி இருந்தேன்.
   விகடனில் கண்டதும் சுட்டேன்.
   கருத்திற்கு நன்றி .மகிழ்ச்சி. இறையாசி றிறையட்டும்.

   மறுமொழி

 5. ரெவெரி
  அக் 24, 2012 @ 14:16:45

  நலமா? சிறப்பான ஆக்கம்…

  தமிழ் மணம் has been fixed now….You should be able to use it now sis…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2012 @ 19:31:31

   நலம். மிக்க நன்றி. பிறகு காலையில் பார்த்து எனது ஆக்கம் தமிழ்மணத்தில் இணைத்தேன்.
   மிக்க நன்றி ரெவேரி. இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. sasikala
  அக் 25, 2012 @ 06:07:24

  அழகிய ஓவியம் கண்டு அங்கவே மெய்மறந்து நின்றுவிட்டேன். எனக்கும் அதே சந்தேகம் ஓவியம்பார்த்து வரி வந்ததா ? வரிகளுக்குப் பின் ஓவியம் வந்ததா ?

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 25, 2012 @ 19:34:28

   ”..எனக்கும் அதே சந்தேகம் ஓவியம்பார்த்து வரி வந்ததா ? வரிகளுக்குப் பின் ஓவியம் வந்ததா ?..”

   எந்த சந்தேகமும் வேண்டாம்.
   கவிதை முதலில் எழுதப்பட்டது.
   படத்திற்குக் காத்திருக்க விகடன் படம்
   கருத்தைக் கவர்ந்தது.
   கருத்திற்கு நன்றி சசிகலா.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 7. jaghamani
  அக் 25, 2012 @ 07:19:24

  நிலவாய் ஒளிரும் ஆக்கம் … பாராட்டுக்கள்..

  மறுமொழி

 8. ranjani135
  அக் 25, 2012 @ 10:59:17

  காதல் கல்யாணமாக மலர வேண்டும் என்ற பெண்ணின் ஆசையை தமிழ் வார்த்தைகளால் கவிதையாக எழுதி விட்டீர்கள்.

  எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

  படிக்கப் படிக்க அமிழ்தமாக இருக்கிறது உங்கள் கவிதை!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 27, 2012 @ 16:19:22

   ”…காதல் கல்யாணமாக மலர வேண்டும் என்ற பெண்ணின் ஆசையை தமிழ் வார்த்தைகளால் கவிதையாக எழுதி விட்டீர்கள்.

   எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியவில்லை.

   படிக்கப் படிக்க அமிழ்தமாக இருக்கிறது உங்கள் கவிதை!..”

   மிக நன்றி சகோதரி.
   இறையாசி நிறையட்டும்

   மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  அக் 25, 2012 @ 15:34:52

  பண்பு பாரம்பரியம்
  இவற்றுடன் காதல்
  அருமையான ஆக்கம்.

  மறுமொழி

 10. rathnavelnatarajan
  அக் 26, 2012 @ 11:09:20

  அருமை.
  நன்றி.

  மறுமொழி

 11. கோவை கவி
  அக் 23, 2017 @ 09:23:02

  Raji Krish:- இனிமையான இதமான இனிய பூக்களுடன் மலரும் காலை வணக்கம்
  * வாழ்க்கை என்பது வளைவுகள் நிரம்பிய வசந்த பாதை..
  இன்பமும் துன்பமும் நிறைந்தது
  நாம் வாழ்நாள் இருக்கும் வரை
  இன்பம் இனிதே நிறைந்து வாழ்வோமாக.. அன்பின் செல்வங்களே.♥♥.
  24 October 2012 at 05:30 ·

  Raji Krish:- Enakku piditha arumaiya varigal vetha… vaallthukkal.))
  24 October 2012 at 05:31 ·

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- “கண்ணின் கருமணிக் கதிர்கள், இன்னும் சொல்வதென்ன!
  எண்ணு முன்னே விழியம்புகள் என்னைத் துளைப்பதென்ன!
  காளையுன் பாளைச் சிரிப்பு ஆளை மாய்க்கிறதே!

  வேளையின்றி உன்னையெண்ணியென் வளையலும் கழன்றிடுதே!”

  ***** அழகிய… மிகவும் அற்புதமான படைப்பு!! வாழ்த்துக்கள் அம்மா!!
  24 October 2012 at 06:58 ·

  N.Rathna Vel :- அருமை. வாழ்த்துகள்.
  24 October 2012 at 17:01 ·

  மறுமொழி

 12. கோவை கவி
  அக் 23, 2017 @ 09:26:24

  Vi Ji :- அழகான படைப்பு .. தோழி.வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்….
  25 October 2012 at 04:02
  Abira Raj :- கண்ணின் கருமணிக் கதிர்கள், இன்னும் சொல்வதென்ன!

  எண்ணு முன்னே விழியம்புகள் என்னைத் துளைப்பதென்ன!…See more
  25 October 2012 at 20:41 ·

  Aangarai Bairavi :- Unarvu mikka varigal anna! Nalla seidhiyei naalu nanbargalukku pagirvadhu nalla kunam.sri anna! Ungal palame adhudhaan nandri anna!
  28 October 2012 at 07:47 ·

  Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரி,
  அருமையான பகிர்வு
  வாழ்த்துக்கள்…அன்புடன்
  சக்தி
  9 November 2012 at 10:50 ·

  Ahila Puhal :- அருமை
  21 February at 18:31

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: