4. பயணம் மலேசியா. 12

மலேசியாவின் பிரபல பழம் டுறியான் (durian)

4. பயணம் மலேசியா. 12

மலாக்கா போகும் வழியில் மலேசியாவின் மிகப் பிரபலமான டுறியான் (durian   ) பழத்தை ருசி பாருங்கள் என்று பாதையோரக் கடையில் நிறுத்தினார் சாரதி. வாகனத்தில் வைத்து விற்பனை நடந்தது. பார்வைக்குப் பெரிய சீதாப் பழம் போல தோற்றம். ஒரு கிலோ பழம் 15 றிங்ஙெட். அதை வாங்கி 5 பேரும் பிரித்துச் சாப்பிட்டோம். அவர்களே எல்லாம் வெட்டித் தந்தனர்.  சுவையாகவே இருந்தது.

மலாக்கா ஆற்றில் படகுப் பவனி.
சுமார் 10க்கும் மேற் பட்ட மேம்பாலங்கள்,
வித விதமான பெயர்கள். ஸ்பைஸ் கார்டின் (spice garden ), த பைறட் பார்க் (The pirate  park ), பழைய பேருந்துத் தரிப்புப் பாலம் (old bus station bridge), யாவா கிராமம் (Jawa village), வாட்டர் மில் (water mill) லக்சுமணன் தெரு, என்று பல பெயர்கள் உள்ள பாலத்திற்கூடாக படகு பயணிக்கும்.

மலாக்கா சரித்திரம், அந்தந்த இடத்தின் சிறப்பு என்று ஒரு ஒலிப் பதிவு நாடா ஓடியபடி உள்ளது. இது துறைமுகம், இது மீன் கடை, இது அழகு நிலையம் என்று கூறியபடி வருகிறது.

படகுப் பவனி முடிய பக்கத்துக் கடை வீதிக்கு வந்தோம்.

அலங்கரித்த சைக்கிள் றிக்சாக்கள் வரிசையாக நின்று எம்மை வா..வா என பிடுங்கியபடி உள்ளனர். 20 றிங்ஙெட்டுக்கு மலாக்கா பட்டணத்தை சுற்றிக் காட்டுவார்கள். இதை நாம் மிகவாகக் கணக்கெடுக்க வில்லை.

ஆனால் மகளும் துணைவரும் போய் வந்தனர்.

நான் இப்போ மிகவும் வருந்துகிறேன் ஏன் இதில் போய் சுற்றிப் பார்க்காது தவற விட்டோம் என்று. மகள் எம்மோடு மிகவும் வாதாடினாள், மனத்தாபப்பட்டாள் வாருங்கள் என்று.
அதாவது பரமேஸ்வரா ஒதுங்கி இருந்த மரம், வேறும் பல சரித்திர முக்கியத்துவமான இடங்களெல்லாம் பார்த்து வந்துள்ளனர்.

  எனவே சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த றிக்சா சுற்றுப் பயணம் மிக முக்கியத்துவமானது.
அனைவரும் அனுபவித்து முக்கிய இடங்களைப் பார்க்க வேண்டியது.

இதற்கு மேலும் அங்கு நின்றால் மிக இருட்டி விடும் என்று அன்றைய உலாவை முடித்து நமது தங்கும் வாடி வீட்டிற்குத் திரும்பினோம்.

போகும் வழியில் மலேசிய பிரபலமான குளிர் பானம் ” சென்டுல் ” (sendol )

ருசித்துப் பாருங்கள் என்று  நிறுத்தினார். ஐஸ், தேங்காய்ப் பால், மண்ணிறச் சீனி, ஜெலி கலந்த கலவை. எனக்குப் பிடிக்கவில்லை. சாரதி விழுந்து விழுந்து ருசித்தார்.

சரியாக இரவு ஒன்பது மணிக்கு அறைக்கு வந்தோம்.

அடுத்த நாள்……

மிகுதியை அங்கம் 13ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.  
ஓகுஸ், டென்மார்க்.
26-10-2012.

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  அக் 27, 2012 @ 02:01:02

  படங்கள் அனைத்தும் அருமை… இனிய பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி…

  அதென்ன durian…. – பலாப்பழம் போல் இவ்வளவு பெரிதாக இருக்கிறது… எங்கள் ஊரில் மிகவும் சின்னதாக (நெல்லிக்காய் அளவு) சிவப்பு கலரில் இருக்கும்… (மங்குஸ்தான் பழம்…?) ஆச்சரியமாக இருந்தது…

  நன்றி…

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 27, 2012 @ 06:56:54

   சகோதரா தனபாலன் மங்குஸ்தான் பழம் சின்னது. அன்னமுன்னாப் பழம் சின்னது. சீதாப்பழம் பெரிது . கிட்டத்தட்ட அதே சாதி எனலாம். ஒரு சுளை சாப்பிடவே போதும் போல இருந்தது. அளவில் பெரிதாக இருந்தது. சிலபேருக்கு இதன்மணம் பிடிக்காது. நாம் ஒன்று (சிறிதளவு) சாப்பிட்டதால் அதன் பேதம் தெரியவில்லை.
   கருத்திற்கு நன்றி.

   மறுமொழி

 2. ranjani135
  அக் 27, 2012 @ 04:58:50

  என்னை கவர்ந்ததுவும் அந்தப் பழம்தான். உள்ளே எப்படி இருக்கும்?
  அடுத்தமுறை அதை படம் எடுத்துப் போடுங்கள் வேதா.

  ரிக்ஷா பயணம் போயிருந்தால் அதையும் உங்கள் அனுபவம் மூலம் படித்திருக்கலாமே என்று தோன்றியது.

  பயண அனுபவம் சுகமாக இருந்தது.

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 27, 2012 @ 07:02:14

   ரஞ்சனி! நான் பழத்தின் உட்பகுதியைப் படம் எடுக்கவில்லை. உங்கள் விருப்பத்தைக் கூகிள் உதவியால் நிறைவேற்றியுள்ளேன்.
   கீழே போடர் படத்தை நீக்கி டுறியான் பழ உட்பகுதியைப் போட்டுள்ளேன். மேலே தனபாலனுக்கு எழுதியதையும் வாசியுங்கள்.
   மிக்க நன்றி சகோதரி கருத்திடலிற்கு.

   மறுமொழி

 3. jaghamani
  அக் 27, 2012 @ 16:01:02

  அருமையான பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

 4. sujatha anton
  அக் 27, 2012 @ 19:51:02

  பயணத்துடன் புகைப்படங்களும் ரசிக்கவைக்கின்றது. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 28, 2012 @ 09:55:31

  நாயகி கிருஷ்ணா likes this..in கவிதை குழுமம் – Kavithai Kulumam
  மு. சுவாமிநாதன்:-
  . வாழ்த்துக்கள்..அங்கு போகும் நண்பர்களிடம் சொல்வேன்!

  மறுமொழி

 6. கோவை கவி
  அக் 29, 2012 @ 07:20:43

  வாவ் , எவ்வளவு அருமையாக உள்ளன அந்த
  அலங்கரித்த ரிக்ஷாக்கள். தவற விட்டு விட்டீர்களே .
  புகைப்படங்களும் பயண வர்ணனையும்
  அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்க
  வைத்து விட்டது.

  regards,
  sravani.

  மறுமொழி

 7. rathnavelnatarajan
  நவ் 03, 2012 @ 01:12:04

  அருமையான பதிவு.
  நன்றி.

  மறுமொழி

 8. கோவை கவி
  நவ் 04, 2012 @ 08:01:23

  ”…தங்களது பயணக் கட்டுரைகளை படித்துக்கொண்டிருக்கிறேன்.
  பா மாலிகை அனைத்தையும் வாசித்து விட்டேன்.
  சந்தம் உங்கள் எழுத்தில் அருமையாய் இருக்கின்றது.
  நிறைய நோட்ஸ் எடுத்துள்ளேன்.
  வல்லமை.காம் மற்றும் முத்துக்கமலம்.காம் தளத்தில் எனது சிறுகதைகளும் கவிதைகளும் நிறைய உள்ளன.
  முடிந்தால் வாசித்துப் பார்க்கவும்.
  முகில் தினகரன்…”’

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 04, 2012 @ 08:04:53

   சகோதரா! பார்க்கிறேன்.
   நான் கூகிளில் உமது பெயரிட்டுத் தேடவே இருந்தேன். மிக்க நன்றி.பயணக் கதையில் உமது பதிலை எடிட் செய்து இட்டுள்ளேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: