4. வெல்லமே வெற்றி….

 

வெல்லமே வெற்றி….

 

பேசிடும் கருப்பொருளில்
வீசிடும் ஒளிக்கற்றை.
ஆசியுடை நடுப்புள்ளி
தேசிகன்(அழகன்) நீயன்றோ!

னம் செழித்ததுவே
மனம் சூனியமாகாதே
புனலாய்க் குருதியையே
தனமாய்ப் பெருக்குகிறாயே!

கிளை பரப்புமுறவின்
முளை இவன்! பலாச்
சுளை! பால் முகக்
களை களையகற்றும்.

குடும்ப அதிகாரத்தில்
படு காத்திரமாக
எடுக்கிறாய் செங்கோல்.
பாடுபொருள் நீயன்றோ!

ன் சிரிப்போ
தேன்! உதிர்க்கிறாய்
பொன்! அன்பொழுகும்
சின்ன நிலாவே வெற்றி.

ன்னகையும் வேண்டாம்
இன்னிசையாமுன் புன்னகை
நன்னகைத் தங்கம்
ஓன்றே போதும்!

ந்தாவிளக்கே! எம்
நந்தவன நறவமே! (மணம்)
விந்தையடா நீயெமக்கு.
விந்தியமலைத் தேனடா!

வாழ்வுவானின் விண்மீன்!
வாழ்வுக் கலங்கரைவிளக்கு!
வாழ்வுப் பௌர்ணமி நிலா!
வாழ்க! வளமோடு நீடு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-10-2012.

 

 
 

Advertisements

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. dinapathivu
  அக் 30, 2012 @ 00:06:29

  மிக அருமையான பதிவு
  வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
  உங்கள் வரவை விரும்புகிறது.
  தினபதிவு திரட்டி

  மறுமொழி

 2. ranjani135
  அக் 30, 2012 @ 00:52:12

  அன்பு வேதா.
  ,
  உங்கள் வெற்றி வெல்லத்திற்கு எங்கள் ஆசிகளையும் தெரிவியுங்கள்.
  நீடூழி வாழட்டும் உங்கள் அன்புடனும் அருமைத் தமிழுடனும்!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 30, 2012 @ 20:07:19

   அன்பின் ரஞ்சனி மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   படம் பக்கப் பாட்டிற்கு உள்ளது.
   நேராகப் பார்க்க இன்னும் அழகு.
   ஆனால் முடியவில்லை.
   பக்கமாகவே எடுத்தள்ளேன் .அது தான்.

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  அக் 30, 2012 @ 02:39:34

  அழகு… அருமை… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. Dr.M.K.Muruganandan
  அக் 30, 2012 @ 07:19:56

  நல்ல கவிதை
  “என்னகையும் வேண்டாம்
  இன்னிசையாமுன் புன்னகை” சுவையான வரிகள்
  அழகான புகைப்படம்
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 30, 2012 @ 20:10:30

   ”..நல்ல கவிதை
   “என்னகையும் வேண்டாம்
   இன்னிசையாமுன் புன்னகை” சுவையான வரிகள்
   அழகான புகைப்படம்…”

   மிக்க நன்றி டாக்டர் தங்கள் கருத்திற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. jaghamani
  அக் 30, 2012 @ 08:44:11

  கிளை பரப்புமுறவின்
  முளை இவன்! பலாச்
  சுளை! பால் முகக்
  களை களையகற்றும்.

  வெல்லமாய் தித்தித்து
  வெள்ளமாய் பெருகும் அன்பான புன்னகைக்கு வாழ்த்துகள் !

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 31, 2012 @ 20:52:17

   ”..கிளை பரப்புமுறவின்
   முளை இவன்! பலாச்
   சுளை! பால் முகக்
   களை களையகற்றும்.

   வெல்லமாய் தித்தித்து
   வெள்ளமாய் பெருகும் அன்பான புன்னகைக்கு வாழ்த்துகள் !..”

   மிக்க நன்றி சகோதரி கருத்திடலிற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. Vanampaadi Ravi
  அக் 30, 2012 @ 12:02:17

  அருமையான கவி! மழலைக்கு சூட்டிய வாழ்த்துகள் மிக மிக நன்று. என்வாழ்த்துகள்2வருக்கும்!

  ________________________________

  மறுமொழி

 7. Vathiri C Raveendran
  அக் 30, 2012 @ 12:03:28

  அருமையான கவி!
  மழலைக்கு சூட்டிய
  வாழ்த்துகள்
  மிக மிக நன்று.
  என்வாழ்த்துகள்2வருக்கும்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 31, 2012 @ 20:50:53

   ”…அருமையான கவி!
   மழலைக்கு சூட்டிய
   வாழ்த்துகள்
   மிக மிக நன்று…”

   மிக்க நன்றி சகோதரா. கருத்திடலிற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. Meha Nathan
  அக் 30, 2012 @ 14:16:53

  நன்றி,நல்ல கவிதை படைத்தமைக்கு..

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 30, 2012 @ 17:36:25

  IN FB:-
  Rama Lingam likes this..in முப்பொழுதும் உன் நினைவுகள்.
  Vignesh Rajan likes this in கவிதை குழுமம் – Kavithai Kulumam.
  தோழி பிரஷா likes this…in கவித்தென்றல்

  மறுமொழி

 10. கவிஞா் கி, பாரதிதாசன்
  அக் 30, 2012 @ 19:26:31

  வணக்கம்!!

  வாழ்த்துக்கள்!

  தொடா்ந்து எழுதுங்கள். கவிக்கலை கை கூடும்!

  கவிதை எழுதுவதில் சில நுட்பங்கள்

  வானமே என்ற எதுகைக்கு
  மனம், புனல், தனம், போன்றவை எதுகையாக வாரா!

  முதல் எழுத்து நெடிலாக இருந்தால் மற்ற எதுகைகளுக்கு முன்னும்
  நெடிலே வரவேண்டும், குறிலாக இருந்தால் குறிலே வரவேண்டும்

  வானமே! வளா்வாழ்வே!
  கானமே! கவிச்சுவையே!
  மானமே! புகழ்மாண்பே!
  மீனமே! மலா்வனமே!

  முன் எழுத்து நெடிலாகவே வந்திருப்பதை உணா்க !

  மனமே நிறைந்ததுவே!
  வனமே மலா்ந்ததுவே!
  தனமே செழித்ததுவே!
  இனமே தழைத்ததுவே!

  முன் எழுத்துக் குறிலாக அமைந்திருப்பதைத் தெளிக!

  உன்னெழில் கவிதையிலே
  என்னுயிர் பதிந்ததனால்
  இன்றமிழ் மரபுகளை
  நன்றுற உரைத்தனனே!

  வரும் தைத்திங்கள் என் வலையில்
  மரபுக் கவிதை இலக்கணத்தை எழுதவுள்ளேன்!
  தொடா்ந்து படித்துப் பயன்பெறவும்.

  நட்புடன்

  கவிஞா் கி.பாரதிதாசன்
  29.10.2012

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 31, 2012 @ 21:28:42

   ஆகா! என்ன பாக்கியம்!
   ஓகோவென மரபினையும்
   வாகாகச் சொல்லியது தமிழின்
   தாகமன்றோ! நன்றி ஆசிரியரே!

   நுணுக்கங்கள் உள்வாங்கி
   சிணுக்கமின்றி திருத்தம் தாங்கி
   அணுக்கிக் கவியினுள் செருகினேன்.
   பணியாம் ஆசிரியத்திற்கு நன்றி.

   பயனடையத் தொடருவேன்
   நன்றி..நன்றி.

   மறுமொழி

 11. Angelin
  அக் 30, 2012 @ 19:35:25

  அக்கா !!! அருமை அருமை ,சின்ன செல்வத்தை ரசித்து ரசித்து எழுதியிருக்கும் கவிதை அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 31, 2012 @ 20:55:01

   ”…அக்கா !!! அருமை அருமை ,சின்ன செல்வத்தை ரசித்து ரசித்து எழுதியிருக்கும் கவிதை அருமை..”

   மிக்க நன்றி சகோதரி கருத்திடலிற்கு
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 12. rathnavelnatarajan
  அக் 31, 2012 @ 16:30:54

  அழகு கவி.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 13. பழனிவேல்
  நவ் 01, 2012 @ 04:15:43

  “என்னகையும் வேண்டாம்
  இன்னிசையாமுன் புன்னகை
  நன்னகைத் தங்கம்
  ஓன்றே போதும்!”

  அழகு… அற்புதம்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: