252. அறிவும், அறிவீனமும்.

 

அறிவும், அறிவீனமும்.

 

றிவெனுமுயர் நிலையடையவும்
அறிந்தாய்ந்து ஆழவுணர்ந்திடவும்
அறியவுள்ளது பல் நிலைகளாம்.
அறிந்து தெளிந்தனுபவம் கூட்டலும்
அறிவுப்பள்ளியிலடையும் நிலையாம்.

றிவைக் கொடுத்தனுபவித்தலுயர்வு!
அறியாதவனறியா இன்பமிது!
அறிவுக்குள்ளேயமிர்தம் காணாதவன்
அறிவையென்றும் இழுக்கென்றிருப்பான்.
அறிவையறியாதிருத்தல் அந்தகாரம்.

றிவுடை மனது பாரமற்றது, அழுக்கற்றது.
அறிவும் பண்பும் மனிதனுக்கு அரணது.
அறிவாளனுக்கு மொழியுற்ற நண்பன்.
அறிவொளி வாழ்வின் கலங்கரை விளக்காம்.
அறியாதுலகில் மயக்கமடைவோர் பலர்!

றிவினாலுலகைத் தட்டுதல், எழுப்புதலும்
அறிவற்றவனால் முடியாத தொன்றாகும்.
அறிவிற்கீடு எதுவுமே இல்லையாம்.
அறிவுடை யுள்ளத்திற் கழிவென்பதில்லை.
அறிவேயுண்மை அறிவே உயர்வு.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-10-2012.

 

                        

 
 

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. drpkandaswamyphd
  அக் 31, 2012 @ 22:29:12

  ரசித்தேன்

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 31, 2012 @ 22:36:59

   மிக்க நன்றி ஐயா கருத்திற்கு.
   மிக மகிழ்ந்தேன்.
   இங்கு 23.33 புதன் நடு இரவு.
   அங்கு விடிய 3-4 மணியிருக்கும்.
   எழுந்திட்டீர்களா?
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. பழனிவேல்
  நவ் 01, 2012 @ 04:28:25

  “அறிவைக் கொடுத்தனுபவித்தலுயர்வு!
  அறியாதவனறியா இன்பமிது!
  அறிவுக்குள்ளேயமிர்தம் காணாதவன்
  அறிவையென்றும் இழுக்கென்றிருப்பான்.”

  அபாரம்… அற்புதம்… அழகு…
  “அறிவும், அறிவீனமும்” அழகுடன் சொன்னீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 03, 2012 @ 20:36:03

   ”..அபாரம்… அற்புதம்… அழகு…
   “அறிவும், அறிவீனமும்” அழகுடன் சொன்னீர்கள்…”

   மிக்க நன்றி சகோதரா.வரவு, கருத்திற்கு.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 3. ranjani135
  நவ் 01, 2012 @ 05:15:50

  அறிவும், அறிவீனமும் என்ற சொற்களை வைத்துக் கொண்டு ஓர் சொற் சிலம்பம் ஆடிவிட்டீர்கள்.

  அருமை, அருமை சகோதரி!

  பாராட்டுக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 03, 2012 @ 20:39:46

   ”..அறிவும், அறிவீனமும் என்ற சொற்களை வைத்துக் கொண்டு ஓர் சொற் சிலம்பம் ஆடிவிட்டீர்கள்.

   அருமை, அருமை சகோதரி!..”

   நீங்கள் சிலம்பாட்டம் என்கிறீர்கள் நான் சொல் விளையாட்டு என்றே கூறுவது வழக்கம்.
   மிக்க நன்றி சகோதரி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. கோவை கவி
  நவ் 01, 2012 @ 06:09:50

  SRAVANI commented through email:-

  ”…உண்மை தான் அறிவொன்றே திருப்தி தரும் .
  அழகான , அறிவான , அருமையான கவி…”
  l

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 01, 2012 @ 07:37:05

  அறிந்தேன்… ரசித்தேன்… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 6. ரெவெரி
  நவ் 01, 2012 @ 18:10:13

  அழகுடன் சொன்னீர்கள் சகோதரி…

  மறுமொழி

 7. rathnavelnatarajan
  நவ் 02, 2012 @ 13:25:00

  அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. விச்சு
  நவ் 03, 2012 @ 08:02:26

  அறிவுடையோருக்கான கவிதை. நன்று.

  மறுமொழி

 9. கோவை கவி
  நவ் 01, 2017 @ 10:36:47

  Sundrakumar Thanuja:- SUPEr
  1 November 2012 at 07:20 ·

  Syed Ali Abdulkader ம்ம்ம் …அருமை அருமை சகோ
  1 November 2012 at 07:21 ·

  Ganesalingam Arumugam:- அழகான வரிகள். இனிய காலை வணக்கம் வேதா.
  1 November 2012 at 07:23 ·

  Sundrakumar Thanuja:- SUPER.
  1 November 2012 at 07:23 ·

  Vetha Langathilakam :- காலை வணக்கம் sakothara ..Thank you.. Have a nice day….
  1 November 2012 at 07:37 ·

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- “அறியாதவனறியா இன்பமிது!
  அறிவுக்குள்ளேயமிர்தம் காணாதவன்
  அறிவையென்றும் இழுக்கென்றிருப்பான்.
  …அறிவையறியாதிருத்தல் அந்தகாரம்!” ****** “அறி” என்ற அடியைக் கொண்டு மிக அற்புதமாக ஒரு கவி ஓவியம் செதுக்கப் பட்டிருக்கிறது!! வாழ்த்துக்கள் அம்மா!!
  1 November 2012 at 08:29 ·

  N.Rathna Vel :- அழகு கவிதை. நன்றி.
  1 November 2012 at 10:09 ·

  Sujatha Anton :- கவிதை அருமை….
  1 November 2012 at 10:26 ·

  மறுமொழி

 10. கோவை கவி
  நவ் 01, 2017 @ 10:38:35

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan நல்ல கவிதை “..அறிவினாலுலகைத் தட்டுதல், எழுப்புதலும்
  அறிவற்றவனால் முடியாத தொன்றாகும்…” Nice
  1 November 2012 at 17:27 ·

  Abira Raj :- அறிவுடை மனது பாரமற்றது, அழுக்கற்றது.

  அறிவும் பண்பும் மனிதனுக்கு அரணது.

  அறிவாளனுக்கு மொழியுற்ற நண்பன்.

  அறிவொளி வாழ்வின் கலங்கரை விளக்காம்.

  அறியாதுலகில் மயக்கமடைவோர் பலர்!.அருமை அக்கா
  1 November 2012 at 20:53 ·

  Verona Sharmila:- கவிதை அருமை.
  5 November 2012 at 15:06 ·

  Gowry Nesan :- அறி என்ற அடியின் மூலம் பல விடயங்களை எமக்கு அறியத் தந்த உங்களையும் உங்கள் அறிவுத் திறனையும் பாராட்டுகிறேன்! மிக்க நன்றி!
  14 November 2012 at 12:38 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: