தொலைத்தவை எத்தனையோ. 8.

   8.

பனைவளவில் அப்பா உயரமான பாத்தி செய்த பின்னர் கடகம் ஒன்று கொண்டு வந்து, ” வா பனங்கொட்டைகள் பொறுக்குவோம்”.. என்று> சுற்றியுள்ள பனைகளின் கீழ் கொட்டைகளைப்

பொறுக்கிக் கடகத்தில் போட்டோம்.

படத்தில் நீங்கள் பார்க்கும் கடகம் சாதாரணமாக் வீட்டில் சபையில் உணவு பரிமாறும் போது இதில் சோறு, பப்படம் , பலகாரங்கள் வைத்துப் பரிமாறுவார்கள். பனை மட்டை நாரில் செய்த கடகத்தை, குப்பை அள்ளவோ, பனங்கொட்டை பொறுக்கவோ பாவிப்பார்கள். அப்பா கொண்டு வந்தது நாரில் பின்னிய கடகமே.

இதில் நீங்கள் பார்ப்பது பனம் பழம். இதனுள் கொட்டையே

நிலத்தில் ஊன்றப்பட்டது.

ஆச்சி அப்பு வீட்டு மாடுகளை இங்கு மேயக் கட்டினால் பனம் பழங்களைப் பிரித்து நக்கிச் சாப்பிடும். பழத்திலிருந்து வேறான கொட்டைகள் வெயிலுக்குக் காய்ந்து  கொட்டைகள் மீந்திருக்கும்.

அப்பா செய்த மண் மேட்டில் இந்தக் கொட்டைகளை ஒரு அடி இடைவெளியில் புதைப்பார். நான் பார்த்தபடி ”ஏனப்பா இது? ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? ” என்பேன்.

”..இவை மழை, வெயில் பட்டு முளை விட்டு வளரும். நாங்கள் இதை வேற இடத்திலும் நட முடியும். வேற ஆட்களுக்கும் கொடுக்கலாம்”.. என்பார்.

இங்கு
.

…மரம் நடும் உணர்வு,
  இயற்கை பேணல்
என்பன,

செயல்களால் பிள்ளைகளுக்குப் பெற்றோரால் ஊட்டப் படுகிறது.
இதன் பின்னர் அடிக்கடி அப்பாவோடு போய் இதைப் பார்ப்போம். சில முளை விடும். சில கொட்டைகள் பூஞ்சணம் (பூரான்)ஆகி விடும்.

பூரானைக் கோடரியால் பிளந்தால் உள்ளே சுவையான வெள்ளை நிறப் பூரான் மிக ருசியானது. வீட்டிற்கு.   வேலைக்கு வரும் ஆட்களிடம் கேட்டு வெட்டிச் சாப்பிடுவோம்.

இது மட்டுமல்ல – கிணற்றடியில் நாம் குளித்து, கழுவும் நீர் சிறிது தூரம் வாய்க்காலில் ஓடி பின்னர் பரவலாக வளவினுள் பாயும். எப்போதும் ஈரலிப்பான பகுதியாக இருக்கும்.  இங்கு காய்ந்த முழுத் தேங்காய்களை (செத்தல் தேங்காயை) குழியில் புதைப்பார். இது தனக்கு மட்டுமல்ல, கூப்பிடும் தூரத்தில் உள்ள ஆச்சி வீட்டுக் கிணற்றடியிலும் சென்று புதைப்பார்.

 தென்னங்கன்று

எப்போதும் தென்னங் கன்றுகள் தயார் நிலையில் என் தலைக்கு மேல் வளர்ந்திருக்கும். நாம் உள்ளே புகுந்து சோலை போலத் தடவுவோம். தென்னை ஓலைகளாகப் பிரியாது ஒட்டியபடி இருக்கும். மிகவும் குளிர்மையாகவும் அந்த இடம் இருக்கும்.

எப்படி இவைகளை மறப்பது!

பசும் நினைவாகப் படம் விரிகிறது எப்போதும்.

இன்று காணிகள் கைமாறி, யார் யாரோ குடியேறி, வீடுகளும் இடிந்தும், புதிதுகள் கட்டப்பட்டும்…
உண்மையில் இவை தொலைந்து போன சொர்க்கங்களன்றி வேறு என்ன!..!!!!…..

(17-10-2012 ஆனந்த விகடனின்  ”காடுகளின் காதலன்” எனும் ஆக்கமும் தீக்குச்சி பற்ற வைத்தது போல என்னுள் சுடரிட்டதன் விளைவே இந்தப்பதிவு.)

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-11-2012.

 

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  நவ் 03, 2012 @ 23:19:23

  நிச்சயமாக தொலைந்து போன
  சொர்க்கங்கள்
  படங்களூம் சொல்லிச் சென்ற விதம்
  எம்முள்ளும் வஸந்த கால நினைவுகளை
  விதைத்துப் போனது
  மனம் கொள்ளை கொண்ட பதிவு
  நடை அற்புதம்
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 04, 2012 @ 11:15:45

   ”..நிச்சயமாக தொலைந்து போன
   சொர்க்கங்கள்
   படங்களூம் சொல்லிச் சென்ற விதம்
   எம்முள்ளும் வஸந்த கால நினைவுகளை
   விதைத்துப் போனது..”

   மிக்க நன்றி சகோதரா வருகைக்கும், கருத்திற்கும்.
   மிகமகிழ்ந்தேன்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 2. RAMVI
  நவ் 04, 2012 @ 02:03:38

  அதெல்லாம் ஒரு காலம்.. இதுதான் உண்மை வேதா.நல்ல பதிவு.

  மறுமொழி

 3. Venkat
  நவ் 04, 2012 @ 02:03:47

  அதெல்லாம் ஒரு காலம்!

  இது ஒன்றே போதும்! இனிய நினைவுகள்….

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 04, 2012 @ 02:22:30

  இனிய நினைவுகள்… ஆனால் சிறப்பான நினைவுகள்… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 07, 2012 @ 21:40:47

   ”..இனிய நினைவுகள்… ஆனால் சிறப்பான நினைவுகள்… ”

   நன்றி சகோதரா கருத்திடலிற்கு. மகிழ்வு.
   ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்..

   மறுமொழி

 5. Tamil Kalanchiyam
  நவ் 04, 2012 @ 03:22:07

  நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  – தமிழ் களஞ்சியம்

  மறுமொழி

 6. வேல்முருகன்
  நவ் 04, 2012 @ 07:51:02

  நா னும் அந்தகால நினைவுகளுக்கு சென்று விட்டேன்

  என் வளத்தம்மை தோசை சுட்டு போட்ட அரிசிப் பெட்டி
  பனைநார் கட்டில்
  காட்டில் பதனி இறக்கி கருப்பட்டி செய்த காலம்
  கிணற்றில் நீரிறைக்க பனையொலையில் வாளி

  ஆம் எல்லாம்
  அந்தகாலம்

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 07, 2012 @ 22:07:15

   ”…என் வளத்தம்மை தோசை சுட்டு போட்ட அரிசிப் பெட்டி
   பனைநார் கட்டில்
   காட்டில் பதனி இறக்கி கருப்பட்டி செய்த காலம்
   கிணற்றில் நீரிறைக்க பனையொலையில் வாளி

   ஆம் எல்லாம்
   அந்தகாலம்…”

   சகோதரா கருத்திடலிற்கு மிக்க நன்றியும், மகிழ்வும்..
   .

   மறுமொழி

 7. sasikala
  நவ் 04, 2012 @ 09:52:01

  நா னும் அந்தகால நினைவுகளுக்கு சென்று விட்டேன். மனம் கொள்ளை கொண்ட பதிவு.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 07, 2012 @ 22:09:06

   ”..நா னும் அந்தகால நினைவுகளுக்கு சென்று விட்டேன். மனம் கொள்ளை கொண்ட பதிவு…”

   மிக்க நன்றியும், மகிழ்வும்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. sujatha anton
  நவ் 04, 2012 @ 10:08:24

  ஆக்கம் அருமை. அரியபெரிய தகவல்கள். நம்மை விட்டுவிலகவில்லை. அதாவது விட்டுச்சென்றவை அல்ல. கற்றுக்கொடுத்தவை. இன்று எழுதக்கற்றுக்கொடுத்தவை முன்னோர்களின் எடுத்துக்காட்டுகள். வரவேற்கப்படவேண்டியவை.
  நினைவில் நிறுத்தியமை பாராட்டுக்குரியது.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 07, 2012 @ 22:10:41

   ”..முன்னோர்களின் எடுத்துக்காட்டுகள். வரவேற்கப்படவேண்டியவை..”

   மிக்க நன்றியும், மகிழ்வும் சுஜாதா.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 9. கோவை கவி
  நவ் 04, 2012 @ 14:21:20

  சங்கர் சசி கலா, Vishnu Rajan, Sundrakumar Kanagasundram ,Tharini po,Anaesthetic Practitioner at Anaesthesia & Critical Care
  .. Navaneethan Navaratnam Works at LOGISTIC DEPARTMENT AT NATIONAL AUSTRALIA BANK
  …. like this..in ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

  மறுமொழி

 10. angelin
  நவ் 04, 2012 @ 15:48:04

  இனிமையான நினைவுகளைபகிர்ந்ததற்கு நன்றிக்கா .சிலசிறு பிராய நினைவுகள் பசுமரத்தாணி போல எங்களுக்கும் பதிந்திருக்கு ……அதில் ஒன்று தென்னக்கன்று நடுவது

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 07, 2012 @ 22:12:04

   ”..இனிமையான நினைவுகளைபகிர்ந்ததற்கு நன்றிக்கா .சிலசிறு பிராய நினைவுகள் பசுமரத்தாணி போல எங்களுக்கும் பதிந்திருக்கு ……அதில் ஒன்று தென்னக்கன்று நடுவது…”

   மிக்க நன்றியும், மகிழ்வும் ஏஞ்சலின்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. பழனிவேல்
  நவ் 15, 2012 @ 13:17:10

  “பனம் பழம்”

  பணங்களை தேடி,
  பழமையை மூடி,
  பகட்டாய் ஓடி,
  பயன்களை மறந்த ,
  பழங்களில் ஒன்று,
  பனம் பழம்.

  அழகாய் சொன்னீர்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 19, 2012 @ 21:25:10

   நல்ல அருமையான குட்டிக்கவிதை வரிகள் எழுதி
   கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி. நன்றி.
   இறையாசி நிறையட்டும் பழனிவேல்.

   மறுமொழி

 12. s sakthivel
  நவ் 19, 2012 @ 05:59:00

  இந்தப் பனை மரங்களைப் பார்க்கத்தான் எவ்வளவு இழந்து விட்டோம் என்று புரிகிறது.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 19, 2012 @ 21:15:46

   உண்மை தான் இப்படிக் காணவே முடியாதே இப்போது!..
   கனவு தான் காணலாம். அல்லது என்னைப் போல கற்பனை பண்ணலாம்.
   மிக்க நன்றி உறவே கருத்திடல், வரவிற்கு. ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 13. கிரேஸ்
  ஜூலை 01, 2013 @ 03:49:53

  ஆமாம் தொலைத்தது பலவற்றை..நல்ல பதிவு.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: