4. பயணம் மலேசியா 13.

national monument 

 

4. பயணம் மலேசியா 13.

 

மலேசியா போக முதலே கூகிளில் மேய்ந்து ஓரளவு எதை எதைப் பார்ப்புது என்று  ஒரு பட்டியல் போட்டிருந்தோம். அதன்படி தேசிய நினைவுச் சின்னமான( national monument   ) போராளிகள் நினைவுச் சின்னம் பார்க்கப் புறப்பட்டோம்.

45 நிமிடமளவு வாகன ஓட்டம் மருமகள் சாந்தி தனது வாகனத்திலேயே கூட்டிச் சென்றார் – மகனோடுமாகச் சென்றோம்.

உள்ளே செல்லும் பாதை..

சுதந்திரப் போரில் இறந்தவர்கள் – யப்பான் முற்றுகை  இரண்டாம் உலகப் போருடன், மற்றும் உள்ளகப் பிரச்சனைகளாக  1948 -1960 காலப்பகுதியில் 11 ஆயிரம் பேர் இறந்தனராம். இவர்கள் நினைவாகக் கட்டப்பட்டது.

முதல் படத்துப் படிகளால் ஏறிச் செல்ல இந்த வெளியுடன்  இந்தக் கட்டிடம்.

உலகத்திலேயே உயரமான குழுநிலை உருவச்சிலைகள், வெண்கலத்தில் செய்யப்பட்டது. 15 மீட்டர் உயரம் (49.21அடி) 7 ஆயுதம் ஏந்திய போர்வீரர் நிற்பது போல. (வரைகலை designed by Australian sculptor Felix de Weldon . இவரே யு.எஸ்.ஏ யில் உள்ள  war memorial   க்கும் பொறுப்பானவர்.    )

இதனருகிலேயே நினைவுத் தூபியும் உள்ளது.
மலேசியப் பிரதம மந்திரிதுங்கு அப்துல் ரக்மான் 1960ல் ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்ற போது வேஜீனியாவில கட்டப்பட்ட போர் நினைவுச் சின்னத்தைப் பார்த்து அதில் மனம் கவரப்பட்டு லேக் கார்டெனுக்கு (lake garden) எதிர்ப்புறமாக 1966ல் இந்த உருவச் சிலைகளைக்கட்டி முடித்தனர்.

வருடத்தில் ஆடி 31ல் போராளிகள் நாள் ( warrior’s day   ) என்று அன்று பிரதம மந்திரி மிலிட்டரி தலைவர்கள், போலிசார் இறந்த வீரர்களிற்காக மாலையிட்டு மரியாதை செய்வார்கள்.

ஒவ்வொரு புறக் காட்சி.

இதன் எதிர் புறமாக லேக் கார்டின் உள்ளது. இதன் ஆதிப் பெயர் பப்ளிக் கார்டின். பின்னரே இந்தப் பெயரை 2011 ஆனி மாதத்தில் வைத்தனர்.
மிகப்பரந்த இடப்பரப்பை நிரப்பும்  இப் பிரதேசத்தில் வண்ணத்திப்பூச்சி, மான், ஒர்க்கிட் மலர்கள் என தனித் தனியாகப் பிரத்தியேகப் பிரிவுகள் உள்ளது. நாம் இதனூடாக வாகனத்தில் ஓடியே வந்தோம் உள்ளே சென்று பார்க்கவில்லை.

நீங்கள் லேக் கார்டின் என்று கூகிளில் படப் பகுதியை அழுத்தினால் பிரமாதமான படங்களைக் காணலாம். வியப்புடையது.

இங்கு உணவுடன் சென்று அமர்ந்து முழு நாளையே கழிக்கலாம். சாந்தி தனது சகோதரிகளின் பிள்ளைகளைக் கூட்டி வந்து நாளைக் கழிப்பதாகக் கூறினார்.
நமது கண்டி மலைப்பிரதேசம் போல மிக குளுகுளுவாக இருந்தது.

அங்கம் 14 ல்  வேறு பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-11-2012

தெருவைக் கடந்து வாகனத் தரிப்பிடம் செலலுகிறோம்.

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. drpkandaswamyphd
  நவ் 10, 2012 @ 00:01:00

  ரசித்தேன்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 10, 2012 @ 01:49:23

  படங்கள் அருமை… நீங்கள் சொன்னதை கூகிளில் பார்க்கிறேன்…

  நன்றி…

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 09:39:53

   ”..படங்கள் அருமை… நீங்கள் சொன்னதை கூகிளில் பார்க்கிறேன்…”

   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு..
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. maathevi
  நவ் 10, 2012 @ 03:19:00

  பல தகவல்களுடன் கண்டுகோண்டோம்.

  மறுமொழி

 4. b.ganesh
  நவ் 10, 2012 @ 04:45:25

  வழமைபோல் எளிமையான அருமையான விவரிப்பில் தெளிவான படங்களுன் ரசித்துப் படித்தேன். அடுத்த அங்கத்துக்காய் காத்திருப்பு.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 09:43:19

   ”..வழமைபோல் எளிமையான அருமையான விவரிப்பில் தெளிவான படங்களுன் ரசித்துப் படித்தேன். அடுத்த அங்கத்துக்காய் காத்திருப்பு…..”

   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு..
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. jaghamani
  நவ் 10, 2012 @ 05:57:00

  பயணப் பகிர்வுகள் மனதை நிறைத்தன .. பாராட்டுக்கள்..

  மறுமொழி

 6. sujatha anton
  நவ் 10, 2012 @ 13:58:23

  ரசிக்ககூடிய பயணமும் புகைப்படங்களும் வாழ்த்துக்கள் தொடரவும்…..

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 09:44:38

   ”..ரசிக்ககூடிய பயணமும் புகைப்படங்களும் வாழ்த்துக்கள் தொடரவும்…..”

   மிக்க நன்றி சுஜாதா உமது கருத்திற்கு..
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. மகேந்திரன்
  நவ் 10, 2012 @ 18:37:47

  அழகான நாட்கள்..
  மனம் கவரும் புகைப்படங்கள்..
  பகிர்வுக்கு நன்றி அம்மா.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 11:43:50

   ”…அழகான நாட்கள்..
   மனம் கவரும் புகைப்படங்கள்….”

   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு..
   இறையாசி நிறையட்டும்

   மறுமொழி

 8. ramani
  நவ் 11, 2012 @ 13:46:19

  கண்டறியாதன தங்கள் தயவால்
  அருமையாகக் கண்டு களித்தோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 11, 2012 @ 20:11:20

   ”..கண்டறியாதன தங்கள் தயவால்
   அருமையாகக் கண்டு களித்தோம்..”
   மிக்க நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு..
   இறையாசி நிறையட்டும்.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
   இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

   மறுமொழி

 9. ரெவெரி
  நவ் 12, 2012 @ 13:34:35

  மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்…

  மறுமொழி

 10. madurai tamil guy
  நவ் 12, 2012 @ 15:11:13

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  “தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்”
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 14, 2012 @ 21:17:21

   மிக்க நன்றி அன்புறவே.
   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
   உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: