30. 50வது ஆச்சரிய வாழ்த்து.

நரேந்திரன் நடராஜா ஒரு
நல்ல நண்பரெம் அயலவர்.
நகைத்திட இவர் வியப்படைய
நாமும் ஒத்துளைத்தோம் இன்று.
ஐம்பது அகவை தொடும்
ஐக்கியமான நண்பருக்கின்று
ஐயுறவு படாத விருந்து.
ஐசுவரியங்கள் பெருக வாழட்டும்!
அமுத வாழ்வில் புவியில்
குமுதினியுடன் இணைந்து இல்லறத்தில்
குத்துவிளக்காய் ஒளிருகிறார் நால்வர்.
குழந்தைகளாய் வளர்ந்த ஆண்கள்.
”சுர்” என்று கோபமடைவார்
”சர்”என்று இறக்கிடுவார்.
பாசக்காரப்பயல் நாம்
பாசமுடன் மகிழ்கிறோம் அயலவரென்று.
மகிழ்வுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்து.

 

 

க.இலங்காதிலகம் (Vetha) – திலீபன்- லாவண்யா குடும்பம்

 

 

 

 

 

 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  நவ் 20, 2012 @ 22:34:21

  அழகான பிறந்தநாள் வாழ்த்து…
  உங்களுடன்
  என் வாழ்த்துக்களும்

  மறுமொழி

 2. ramani
  நவ் 20, 2012 @ 23:54:35

  எங்களது இனிய வாழ்த்துக்களையும்
  சகோதரருக்கும் அவரின் குடும்பத்தாரும்
  தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 21, 2012 @ 02:25:06

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. மஞ்சுபாஷிணி
  நவ் 21, 2012 @ 05:32:27

  பாராட்டுவது என்பதே சிறப்பான விஷயம்… அதிலும் மனம் ஒன்றி மனம் நிறைந்து வாழ்த்துவது என்பது தெய்வத்தின் ஆசிக்கு ஒப்பாகும்… அத்தகைய அருமையான அன்பான வாழ்த்துகளால் பிறந்தநாள் வாழ்த்து எழுதிய வேதாம்மாவுக்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்….

  தங்களின் நண்பருக்கும் மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வேதாம்மா….

  தாங்கள் நலமா?

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 21, 2012 @ 20:44:09

   மிக்க நன்றி மஞ்சுக் குஞ்சு.
   நல்ல வரிகள் எழுதப் பட்டுள்ளது
   உங்கள் வாழ்த்துகள் அவருக்குச் சேரும்.
   இறையாசி நிறையட்டும்.
   நான் மிக்க நலமே.. அவ்விதமே இறைவன் உங்களையும்,
   உங்களோடு சேர்ந்தோரையும் காப்பாராக!

   மறுமொழி

 5. sasikala
  நவ் 21, 2012 @ 12:27:45

  அழகான வாழ்த்துரை …
  இனிய பிறந்த நாள் வாழ்த்தை எங்கள் சார்பாகவும் தெரிவிக்கவும்.

  மறுமொழி

 6. வேல்முருகன்
  நவ் 21, 2012 @ 15:11:45

  தங்கள் வாழ்த்தோடு
  எங்கள் வாழ்த்தும்

  மறுமொழி

 7. jaghamani
  நவ் 21, 2012 @ 15:40:19

  மகிழ்வுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்து.

  மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  நவ் 21, 2012 @ 17:46:27

  இனிய பிறந்த நாள் வாழ்த்து.”சுர்” என்று கோபமடையும்
  ”சர்”என்று இறக்கிடும்.” அந்த இனிய நண்பருக்கு.

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 21, 2012 @ 21:00:57

   நன்றி ஐயா வாழ்த்திற்கு. ஆண்டவன் அருள் நிறையட்டும்.
   இத்துடன் சகோதரர் நரேந்திரன் கூறுகிறார்:-

   ”…என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…”

   மறுமொழி

 9. arounaselvamea
  நவ் 21, 2012 @ 22:34:05

  உங்களின் வாழ்த்துடன் என் வாழ்த்தையும் கூறுங்கள் கொவைக்கவி அவர்களே.

  மறுமொழி

 10. ranjani135
  நவ் 24, 2012 @ 11:21:41

  உங்கள் வாழ்த்துக்களுடன், எங்கள் வாழ்த்துக்களும் நிறையட்டும் நண்பருக்கு!

  மறுமொழி

 11. பழனிவேல்
  நவ் 26, 2012 @ 12:47:37

  தாமதத்திற்கு மன்னிக்கவும்!

  ”சுர்” என்று கோபமடைவார்
  ”சர்”என்று இறக்கிடுவார்.

  அழகான வாழ்த்து…

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 26, 2012 @ 20:22:28

   சகோதரா வந்து கருத்திடுவதே மிகப் பெறுமதியுடையது.
   இதில் தாமதம் என்ன! அதெல்லாம் ஏதுமில்லை!
   சகோதரா பழனிவேலின் கருத்திற்கு மகிழ்வும், மிக்க நன்றியும்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: