255. பா விதை விதைக்கிறேன்!

 

 

 

பா விதை விதைக்கிறேன்!

 

ழுத்துப் பூக்கள்
விழுத்தும் சுகந்தத்தில்
கழுத்தில் மாலையால்
அழுத்தும் கௌரவத்தில்
இழுத்துச் செல்கிறது
எழுத்து ஊர்வலமென்னை.

தனுள் புகுதலோ
அதன் தொழிற்பாடோ
மதன் லேகியமே!
ஆதன்(ஆன்மா) அமைதியாகும்
ஆதாயமும் உண்டு
ஆதாரத் தமிழால்.

 ழையும் காற்றில்
குழையும் ரம்மியத்தில்
உழைக்கும்  தைரியப்பூ!
ஏழையாகாத இதயம்.
மழையாகும் ஆனந்தம்
கீழைத்திசையாய் ஒளிரும்!

ளமான உயிர்க்கரையில்
அளப்பரிய ஆனந்தப்பூ
தளமென் தமிழ்வலை!
குளப்பாதீரென் தமிழிராகம்!
இளப்பமாய் நீரெண்ணினால்
இளக்காரம் உமக்கே!

பூவிதையாய் தமிழில்
பாவிதை விதைக்கிறேன்.
விவிதமான(பலவிதமான) நிவேதனம்(ஒப்புவித்தல்)
பவித்திரமான சேவிதமாக(தொண்டு)
பாவுகிறேன் நானிதை.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-11-2012.

 

                           

 

Advertisements

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவிஞா் கிஃ பாரதிதாசன்
  நவ் 27, 2012 @ 23:48:44

  வணக்கம்!

  பூவிதை போன்றே சந்தப்
  பாவிதை துாவும் வேதா!
  மாவிதை! புவியே உய்யும்
  மதிவிதை! தமிழின் சொத்து!
  காவிதை போன்றே நாளும்
  கவிவிதை காக்கும் நானும்
  ஆ..விதை! விதை!என் றுன்னை
  அன்புடன் வேண்டு கின்றேன்!

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 28, 2012 @ 20:19:03

   மிக்க நன்றி ஆசிரியரே.
   தக்கபடி கவி வரியால்
   சொக்கிடும் தமிழ் தந்தீர்!
   தக்கபடி எழுதினேனோவென்று
   விக்கித்து நிற்கிறேன் ஆசிரியரே!
   விக்கின வரிகளானால் திருத்துங்கள்.
   அக்கணமே அறிந்து தெளிவேன்.
   நன்றி…நன்றி…..இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. ramani
  நவ் 28, 2012 @ 00:34:03

  நீங்கள் விதைக்கிற பா விதைகள் அனைத்தும்
  வீரியமிக்கவைகளாய் இருப்பதால்தான்
  இத்தனை அழகாய் விளைந்து வியக்கவைக்கிறது
  மனம் கவர்ந்த படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. Venkat S
  நவ் 28, 2012 @ 00:35:28

  நீங்கள் விதைக்கிற பா விதைகள் அனைத்தும் வீரியமிக்கவைகளாய் இருப்பதால்தான் இத்தனை அழகாய் விளைந்து வியக்கவைக்கிறது மனம் கவர்ந்த படைப்பு தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 28, 2012 @ 09:26:37

  வித்தியாசமான அழகான வரிகள் சகோதரி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. காரஞ்சன்(சேஷ்)
  நவ் 28, 2012 @ 15:44:04

  பூவிதையாய் தமிழில்
  பாவிதை விதைக்கிறேன்.
  விவிதமான(பலவிதமான) நிவேதனம்(ஒப்புவித்தல்)
  பவித்திரமான சேவிதமாக(தொண்டு)
  பாவுகிறேன் நானிதை.//
  அருமை! நன்றி!

  மறுமொழி

 6. sasikala
  நவ் 29, 2012 @ 08:33:23

  தங்கள் வரிகள் ஒவ்வொன்றும் வியக்கவே செய்கிறது. நன்றிங்க.

  மறுமொழி

 7. பழனிவேல்
  நவ் 30, 2012 @ 04:58:37

  உழைக்கும் தைரியப்பூ!
  ஏழையாகாத இதயம்.
  மழையாகும் ஆனந்தம்
  கீழைத்திசையாய் ஒளிரும்!”

  அழகு… அதிலும்

  “உழைக்கும் தைரியப்பூ!
  ஏழையாகாத இதயம்.
  மழையாகும் ஆனந்தம்” – மிக அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 02, 2012 @ 09:54:04

   ”…அழகு… அதிலும்

   “உழைக்கும் தைரியப்பூ!
   ஏழையாகாத இதயம்.
   மழையாகும் ஆனந்தம்” – மிக அருமை…”

   உண்மை சகோதரா பழனி, நானே எழுதிவிட்டு நானே ரசிப்பேன் எனது வரிகளை.
   நன்றாக அமைந்திருக்கே என்று என்னை நானே மெச்சி,
   இது போதாது, இன்னும் வியக்க எழுது!..
   .எழுத வேண்டும் என்று கட்டளை போடுவேன்.
   இதுதலைக்கனம் அல்ல!
   மிக்க நன்றி பழனி கருத்திடலிற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. தமிழ்
  டிசம்பர் 02, 2012 @ 04:37:41

  நல்ல கவிதை!
  எதுகையில் மிரட்டும் வார்த்தைக் களஞ்சியம்!
  அடைப்புக் குறிகளில் விளக்கம் தருவது சற்றே கவிதைக்கு தடங்கல் செய்வதாய் உணர்கிறேன்…
  வாழ்த்துகள்
  அன்பன்,
  தமிழ்

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 02, 2012 @ 09:47:49

   உண்மை தான் தமிழ் எனக்கும் கருத்து அடைப்புக் குறிக்குள் போடுவது நெருடலாகவே உள்ளது. பார்ப்போம் எதிர்காலத்தில்.
   மிக்க நன்றி கருத்திற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 9. mukil dinakaran
  டிசம்பர் 08, 2012 @ 06:57:57

  தங்கள் பா விதை வாசித்தேன்….சிறிது நேரம் அதனுள்ளேயே வசித்தேன்….பிறகு மெல்ல சுவாசித்தேன்…உங்கள் எழுத்தை என்னையறியாமல் நேசித்தேன்….எப்படி முடிகிறது இப்படி எழுத என யோசித்தேன்….சொல்லிக் கொடுப்பீர்களா…யாசிக்கிறேன்.
  முகில் தினகரன்
  கோயமுத்தூர்

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 08, 2012 @ 09:00:53

   முகில் மிக்க மகிழ்ச்சி!..நல்ல தரமான கவிதைகளை நிறைய வாசிக்கலாம்!.
   நல்ல கவிதையை வாசித்தால் மனதைத் தூண்டும்.
   பேனாவை எடு! எழுது! உன்னாலும் முடியும்! என்று தூண்டும்.
   அப்படி உணர்வு தரும் கவிதைகளைத் திரும்பத் திரும்ப வாசிப்பது பயன் தரும்.
   என் கவிதைகள் அப்படிப் பிறரைத் தூண்ட வேண்டும் என்பது எனது நோக்கம்.
   ஆணடவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. Venkat S
  ஜன 01, 2013 @ 01:44:49

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: