256. மார்கழியே!….

 

Pongal-6 

மார்கழியே!….

 

பார் களி கொள்ள சீரடியெடுக்கும்
மார்கழி மகளே! கார்த்திகைக் கடுத்தவளே!
ஊர் ஆராதிக்கும் பாரதி ஆறுமுகநாவலர்
கர்ப்பத்தால் உலகுதித்த பேருடை மார்கழியே!

ளியுடை வழி சொல்! தமிழர்
களிகொள்ள, விழி மலர!
வழியும் கண்ணீர் முற்றாக அழி!
தெளி அமைதியை! திருவுடை மார்கழியே!

ர்வமாய் என்னகம் எதிர் கொள்ளும்
சீர்மிகு பிறந்த நாட்கள் ஏந்தியும்
தேராக வரும் பரவச மார்கழியே!
பார் போற்றப் பெயர் பொறித்திடு!

கார் மூடிப்பகல் தேய்ந்து குறுகி,
சோர்வு விரக்தியும் சிலருக்கு ஏந்துகிறாய்.
கோடை மறைய வருவதால் உன்னைப்
பீடை மார்கழி என்பாரோ சொல்!

பிரகாசிக்கும் பனி ஆடை போர்த்தும் மார்கழியே!
திருவெம்பாவை, கிறிஸ்துமஸ், பாவை நோன்பென
திருவிழாக்காணும் மார்கழியே! தமிழினம்
சுவாசிக்கச் சமாதானக் கதவு திறக்குமா!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
3-12.2005.

 

                                   Nyt billede

 

Advertisements

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Peruntha Pia Ramalingam
  டிசம்பர் 01, 2012 @ 23:44:58

  Smukt skrevet, aunty

  மறுமொழி

 2. மகேந்திரன்
  டிசம்பர் 02, 2012 @ 02:17:24

  மாதங்களில் வசந்தமாம்
  மார்கழி மகளுக்கு
  முன்கூட்டிய வரவேற்பு
  மிக அருமை வேதாம்மா….

  மறுமொழி

 3. ranjani135
  டிசம்பர் 02, 2012 @ 07:19:18

  மார்கழி மாதத்திற்கு நீங்கள் கவிதை மூலம் சொல்லியிருக்கும் முகமன் மிகவும் நன்றாக இருக்கிறது.
  உங்கள் ஆசைப்படியே, அமைதியை கொண்டு வந்து, கண்ணீரை முற்றாக அழிக்கட்டும் இந்த மார்கழி!

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 04, 2012 @ 21:00:18

   ”..மார்கழி மாதத்திற்கு நீங்கள் கவிதை மூலம் சொல்லியிருக்கும் முகமன் மிகவும் நன்றாக இருக்கிறது.
   உங்கள் ஆசைப்படியே, அமைதியை கொண்டு வந்து, கண்ணீரை முற்றாக அழிக்கட்டும் இந்த மார்கழி!…

   மிக்க நன்றி சகோதரி.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 02, 2012 @ 09:16:22

  நல்ல வரிகள்… நடக்கட்டும்…

  மறுமொழி

 5. sasikala
  டிசம்பர் 02, 2012 @ 11:26:56

  சமாதானக் கதவு திறக்கவே நானும் ஆசைப்படுகிறேன்.

  மறுமொழி

 6. malathi
  டிசம்பர் 02, 2012 @ 12:30:14

  ஒளியுடை வழி சொல்! தமிழர்
  களிகொள்ள, விழி மலர!
  வழியும் கண்ணீர் முற்றாக அழி!
  தெளி அமைதியை! திருவுடை மார்கழியே!//நல்ல வரிகள்…

  மறுமொழி

 7. Dr.M.K.Muruganandan
  டிசம்பர் 02, 2012 @ 14:56:13

  மார்கழியின் மறுபக்கம் இந்த வரிகளில்
  அழகாக விழுந்திருக்கிறது. ரசித்தேன்

  “….கார் மூடிப்பகல் தேய்ந்து குறுகி,
  சோர்வு விரக்தியும் சிலருக்கு ஏந்துகிறாய்.
  கோடை மறைய வருவதால் உன்னைப்
  பீடை மார்கழி என்பாரோ …”

  மறுமொழி

 8. குட்டன்
  டிசம்பர் 03, 2012 @ 12:45:41

  கண்ணனே சொன்னான்”மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று”

  மறுமொழி

 9. Mrs.Mano Saminathan
  டிசம்பர் 04, 2012 @ 17:51:50

  முன்கூட்டியே மார்கழி மகளுக்கு அருமையான வரவேற்பு அழகிய கவிதையாய்!

  மறுமொழி

 10. கவிஞா் கி. பாரதிதாசன்
  டிசம்பர் 05, 2012 @ 18:46:20

  வணக்கம்!

  பீடையிலே மார்கழியைத் தள்ளி வைத்துப்
  பிரித்துநமை ஆண்டிடவே செய்த வேலை!
  ஓடையிலே குளித்ததுபோல் குளிரும் மாதம்!
  ஒப்பில்லா மலா்கண்ணன் மகிழும் மாதம்!
  கோடையிலே நிழலருமை புரியும் தோழி!
  கூா்மதிக்கே உலகுண்மை தெரியும் என்பேன்!
  வாடையிலே நமை..மயக்கும் தாழை போன்று
  வந்தாடும் மார்கழியை வாழ்த்திப் பாடு !

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: