257. இன்னிசைச் சந்தம் பெருகட்டும்!

DSC01251

 

இன்னிசைச் சந்தம் பெருகட்டும்!

 

அணிவடமாய் வாழ்விலன்பை
அணிகோர்த்து அணியும்
அணியன் அருகில்

சுதந்திரமான வாழ்வுப் பயிற்சியில்
தந்திரங்கள் அரங்கேற முடியாத
சுதந்திர உணர்வு நங்கை.

இயற்கை சிறந்து தேயிலை
வயற் காட்டுப் பின்னணியில்
இயற்கைக் காட்சி இணைவு.

பச்சைப் பசுமை சுற்றிடவும்
இச்சைக் கனல் தொற்றிடவும்
உச்சச் சூழல் உயர்விடம்.

இன்னல் தீர்க்கும் வாழ்வின்
இன்னிசைச் சந்தம் பெருகி
வென்றிட பெருநன்னிலை நிறைக!

இயற்றமிழ் தடாகத்துள்
இயற்றிய வரிகள் மகளிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்து.

 

(சொற்களின் கருத்து:-
அணிவடமாய் – கழுத்திலணியும் மாலை
அணிகோர்த்து – அழகாகக் கோர்த்து
அணியன் – நெருங்கியவன்)

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-12.2012.

 

                                    11art

 

 

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  டிசம்பர் 09, 2012 @ 00:40:10

  புது வார்த்தைகளை போட்டு அதற்கு பொருளும் சொல்லறீங்க.நல்லா இருக்கு.தொடருங்கள்

  மறுமொழி

 2. ramani
  டிசம்பர் 09, 2012 @ 01:04:25

  இன்னிசை நிறைந்தோங்கும்
  அருமையான வாழ்த்துக் கவிதை
  தங்கள் பதிவுக்கு வந்தால்
  சிறந்த படைப்பை படித்த சுகமும்
  கூடுதலாக நல்ல இலக்கியச் சொற்கள் சிலவும்
  தெரிந்து கொள்ள முடிகிறது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 13, 2012 @ 20:43:52

   ”..தங்கள் பதிவுக்கு வந்தால்
   சிறந்த படைப்பை படித்த சுகமும்
   கூடுதலாக நல்ல இலக்கியச் சொற்கள் சிலவும்
   தெரிந்து கொள்ள முடிகிறது….”

   மிக்க நன்றி சகோதரா கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்

   மறுமொழி

 3. ranjani135
  டிசம்பர் 09, 2012 @ 06:48:56

  உங்கள் கவிதையுடன், எங்கள் வாழ்த்துக்களையும் உங்கள் மகளுக்குச் சொல்லுங்கள். இன்பம் பெருகட்டும் அவர்கள் வாழ்வில்!

  மறுமொழி

 4. கவிஞா் கி. பாரதிதாசன்
  டிசம்பர் 09, 2012 @ 23:16:02

  வணக்கம்!

  பிணிவடம் போட்டு நிற்கும்
  பிறமொழிச் சொல்லை நீக்கி
  அணிவடம் என்றே நல்ல
  அருந்தமிழ்ச் சொல்லைத் தந்தாய்!
  கனியிடம் சுவையைப் பெற்றுக்
  கவிதைகள் தீட்டும் வேதா!
  தனியிடம் பெறுவார் பாட்டில்!
  தண்டமிழ்ப் புலவா் ஏட்டில்!

  கவிஞா் கி. பாரதிதாசன் – பிரான்சு
  kambane2007@yahoo.fr

  மறுமொழி

 5. விச்சு
  டிசம்பர் 10, 2012 @ 13:15:20

  தமிழ் புகுந்து விளையாடுது…

  மறுமொழி

 6. seeralan
  டிசம்பர் 10, 2012 @ 22:30:31

  வாசிக்கையில் வாசனை வீசும் வாக்கியங்கள் அழகுதமிழில் அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரட்டும் …ஆமா யாருக்கு பிறந்தநாள் வாழ்த்து

  மறுமொழி

 7. rathnavel natarajan
  டிசம்பர் 11, 2012 @ 01:10:46

  அழ்கு கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. jaghamani
  டிசம்பர் 13, 2012 @ 12:46:07

  மகளிற்கு
  நிறைவான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

  மறுமொழி

 9. கோவை கவி
  டிசம்பர் 09, 2017 @ 10:51:58

  Natarajan Baskaran //அணியன் அருகில்
  சுதந்திரமான வாழ்வுப் பயிற்சியில்
  தந்திரங்கள் அரங்கேற முடியாத
  சுதந்திர உணர்வு நங்கை//.
  9 December 2012 at 00:18 ·

  Mari Muthu:- vazhthukkal…
  9 December 2012 at 04:13 ·

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- “இயற்கை சிறந்து தேயிலை
  வயற் காட்டுப் பின்னணியில்
  இயற்கைக் காட்சி இணைவு.

  பச்சைப் பசுமை சுற்றிடவும்
  இச்சைக் கனல் தொற்றிடவும்
  உச்சச் சூழல் உயர்விடம்!”.

  ***** அருமை அம்மா!! கவிதைக்கு காட்சிப்படம் மேலும் எழில் கூட்டுகிறது!! வாழ்த்துக்கள்!!
  9 December 2012 at 06:24 ·

  N.Rathna Vel:- அருமை. வாழ்த்துகள்.
  9 December 2012 at 08:26

  Kalaimahel Hidaya Risvi இன்னல் தீர்க்கும் வாழ்வின்
  இன்னிசைச் சந்தம் பெருகி
  வென்றிட பெருநன்னிலை நிறைக!
  இயற்றமிழ் தடாகத்துள்
  இயற்றிய வரிகள் மகளிற்கு
  இனிய பிறந்தநாள் வாழ்த்து.அருமை. வாழ்த்துகள்.வேதா. இலங்காதிலகம்…
  9 December 2012 at 08:47

  Sujatha Anton :- கவிநயத்தில் பிறந்தது அன்பு மகளின் பிறந்த நன்னாள்.!!!!
  இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள்!!!
  வாழ்க வளமுடன்.!!!
  9 December 2012 at 10:23

  Nadaa Sivarajah:- வாழ்த்துக்கள்… வாழ்க வளமுடன்….
  9 December 2012 at 11:20

  Seeralan Vee:- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
  9 December 2012 at 11:56

  Abira Raj :- இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அழகிய கவிதையில் அழகான வாழ்த்து அக்கா
  9 December 2012 at 13:19 ·

  Shankar G V:- இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! இனிய கவிதை!!
  9 December 2012 at 14:53 ·
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- அருமையான கவிதை
  10 December 2012 at 18:23 ·
  Verona Sharmila வாழ்த்துக்கள்… வாழ்க வளமுடன்….
  16 December 2012 at 06:29

  Vetha Langathilakam:- Thank you all of you!….
  16 December 2012 at 09:08

  Natarajan Mariappan //பச்சைப் பசுமை சுற்றிடவும்
  இச்சைக் கனல் தொற்றிடவும்
  உச்சச் சூழல் உயர்விடம்.

  இன்னல் தீர்க்கும் வாழ்வின்
  இன்னிசைச் சந்தம் பெருகி
  வென்றிட பெருநன்னிலை நிறைக!//

  இயற்றமிழ் தடாகத்துள்

  இயற்றிய வரிகள் மகளிற்கு

  இனிய பிறந்தநாள் வாழ்த்து
  23 December 2012 at 06:04

  Natarajan Mariappan:- நற்றமிழ் வரிகள் நலங்கு படிக்கும்
  சொற்றமிழ் சோலை!
  தொடரட்டும் உங்கள் சொற்காலம்!
  23 December 2012 at 06:08

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: