258. குளிரியல் கோட்பாடு.

12-12-12-BIGBLOCK

 

ஆறிரண்டாண்டு பாண்டவர் காடேகினார்.
ஆறிரண்டு மாதங்கள் வருடமானது.
ஆறிரண்டு – ஆறிரண்டு – இரண்டாயிரத்து
ஆறிரண்டு.   புதுமையான திகதி.

 

வேறு

 

குளிரியல் கோட்பாடு.

 

குளிர் பனியென்று மொழியலாம்
எளிதில் உணர்வதேது அனுபவிக்காது!
கொட்டும் வெண்பனி அழகு!
கொட்டிய இலைகளற்ற மரமழகு!
வழுக்கிடும் குழந்தைகள் கும்மாளம்
வழுக்கிடும் முதியவர் திண்டாட்டம்.
             வாழ்ந்தேயாக வேண்டும் குளிர்
             நாட்களை நெட்டித் தள்ளி
பறவைகளும் கோடை நோக்கி
பறக்கும் பிற நாட்டிற்கு
மனிதனும் விடுமுறை யெடுத்து
மறைகிறான் கோடை தேடி
மாறாதவர் உழைத்து மாள்வார்.
மாறாதது கோடைக்காயேங்கும் மனம்..

              இன்னலற்று வாழ உட்காற்றை
              சன்னலூடு மாற்ற வேண்டும்.
உகந்ததென்று படுக்கையறையில்
உயர்த்தினால்  வெப்பமானியை
உக்கிரமாய் தொண்டை வரளும்.
உடலை வெப்பமாய் பேணினால்
கடலாகப் புகும் நோயையும்
கட்டுப்படுத்தலாம்! குளிரை நுகரலாம்!

சுறுசுறுப்பு உடலில் குளிரின்
விறுவிறுப்பு கொஞ்சம் குறையும்.
ஆரோக்கிய உணவும் – ஓடி
ஆடும் அங்க அசைவும்
கூடும் உடற் பயிற்சியும்
பாடும் சுகவாழ்வுக் கீதம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-12-2012.

 

                             1105194cn0jtifmaz

 

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ARUNA SELVAME
  டிசம்பர் 12, 2012 @ 21:07:00

  ஆறிரண்டு பாடலும் அருமை.
  குளிரியல் கோட்பாடும் அருமை…
  குளிரை நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.
  அருமை.. அருமை.. கோவைக்கவி அவர்களே!

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 12, 2012 @ 21:17:22

   அருணா! மிக்க நன்றி. இறையாசி நிறையட்டும்.
   இப்போ தான் வலையேற்றுகிறேன். முகநூலில் அழகான படம் போட்டேன் அது இங்கு ஏற்ற முடியாமல் உள்ளது. இங்கு உக்கல்(ஊர் பாசையில்) படம் போட்டுள்ளேன்.

   மறுமொழி

 2. ramani
  டிசம்பர் 12, 2012 @ 22:52:00

  சுறுசுறுப்பு உடலில் குளிரின்
  விறுவிறுப்பு கொஞ்சம் குறையும்.
  ஆரோக்கிய உணவும் – ஓடி
  ஆடும் அங்க அசைவும்
  கூடும் உடற் பயிற்சியும்
  பாடும் சுகவாழ்வுக் கீதம்.//

  நாங்களும் மார்கழிக்குத்
  தயாராகிக் கொண்டுள்ளோம்
  அதனை வரவேற்கும் விதமாக
  கட்டியம் கூறிப் போகும் பதிவு
  மனதை குளிர்விக்கிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 13, 2012 @ 21:01:22

   ”..நாங்களும் மார்கழிக்குத்
   தயாராகிக் கொண்டுள்ளோம்
   அதனை வரவேற்கும் விதமாக
   கட்டியம் கூறிப் போகும் பதிவு
   மனதை குளிர்விக்கிறது..”

   தங்கள் இனிய கருத்திடலிற்கு மகிழ்வும் நன்றியும்.
   ஆண்டவனருள் நிறையட்டும்

   மறுமொழி

 3. கோமதிஅரசு
  டிசம்பர் 13, 2012 @ 01:18:35

  சுறுசுறுப்பு உடலில் குளிரின்
  விறுவிறுப்பு கொஞ்சம் குறையும்.
  ஆரோக்கிய உணவும் – ஓடி
  ஆடும் அங்க அசைவும்
  கூடும் உடற் பயிற்சியும்
  பாடும் சுகவாழ்வுக் கீதம்.//

  குளிர் சமையத்தில் நடமாடிக் கொண்டு இருந்தால் குளிர் தெரியாது.
  போர்வையில் முடங்கினால் அவ்வளவுதான் குளிர் வாட்டிவிடும்.
  குளிரின் தாக்கத்தை மறந்து அதன் கஷ்டங்களை அழகாய் கவி வடித்த உங்களுக்கு பாராட்டு.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 13, 2012 @ 21:04:46

   தங்கள் இனிய கருத்திடலிற்கு மகிழ்வும் நன்றியும்.
   ஆண்டவனருள் நிறையட்டும்.
   புதிய கணனி வாங்கியும் தங்கள் வலை ஆடுகிறது. கூகிள் குரோம் – பயர் பொக்ஸ் எல்லாம்போட்டுப் பார்த்தாயிற்று எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை.

   மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  டிசம்பர் 13, 2012 @ 03:12:49

  //பறவைகளும் கோடை நோக்கி
  பறக்கும் பிற நாட்டிற்கு
  மனிதனும் விடுமுறை யெடுத்து
  மறைகிறான் கோடை தேடி
  மாறாதவர் உழைத்து மாள்வார்.
  மாறாதது கோடைக்காயேங்கும் மனம்..//

  உண்மைதான்! கவிதை மிக அழகு

  மறுமொழி

 5. பழனிவேல்
  டிசம்பர் 13, 2012 @ 04:06:22

  “குளிர் பனியென்று மொழியலாம்
  எளிதில் உணர்வதேது அனுபவிக்காது!”

  முதல் வரிகளிலேயே முத்திரை பதித்து விட்டீர்கள்.

  அதை விட தலைப்பு (குளிரியல் கோட்பாடு) மிக மிக அருமை.
  அதற்கென்றே இருமுறை வாசித்து நேசித்தேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 13, 2012 @ 21:08:15

   ”..முதல் வரிகளிலேயே முத்திரை பதித்து விட்டீர்கள்.

   அதை விட தலைப்பு (குளிரியல் கோட்பாடு) மிக மிக அருமை.
   அதற்கென்றே இருமுறை வாசித்து நேசித்தேன்…”

   பழனியின் இனிய கருத்திடலிற்கு மகிழ்வும் நன்றியும்.
   ஆண்டவனருள் நிறையட்டும்

   மறுமொழி

 6. jaghamani
  டிசம்பர் 13, 2012 @ 12:45:12

  ஆரோக்கிய உணவும் – ஓடி
  ஆடும் அங்க அசைவும்
  கூடும் உடற் பயிற்சியும்
  பாடும் சுகவாழ்வுக் கீதம்.

  சுகமான நிறைவான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்

  மறுமொழி

 7. rathnavelnatarajan
  டிசம்பர் 13, 2012 @ 14:39:08

  அருமை. வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. ranjani135
  டிசம்பர் 13, 2012 @ 14:50:42

  குளிர் காலத்தை வரவேற்று, எப்படி எதிர் கொள்வது என்றும் கவிதையிலே சொல்லி விட்டீர்கள், சகோதரி.
  சுறுசுறுப்பு உடல் வேண்டும்!

  மறுமொழி

 9. Ramadhas Muthuswamy
  டிசம்பர் 16, 2012 @ 02:20:27

  கவிதை மிகவும் அருமை!
  //வழுக்கிடும் குழந்தைகள் கும்மாளம்
  வழுக்கிடும் முதியவர் திண்டாட்டம்.//
  வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: