260. அன்னை ரசிப்பாள்.

pullangkulal

அன்னை ரசிப்பாள்.

புல்லாங்குழலிசையின் பல்லாங்குழியாட்டம்

வில்லங்கமற்றது, பொல்லாங்கழிக்கும்.

வல்லாங்கு நன்மையாய் சல்லாபமிடும்.

மெல்லிசை மனதோடு லல்லல்லா ஆடும்.

மூங்கிலில் ஊடுருவி ஓங்கி மூசும்

தீங்கில்லாக் காற்றோசை பூங்கணைவீசும்.

பாங்குடன் மனப்பாரம் நீக்கி வீசும்.

ஓல்லாங்கில் இன்பம் ஓங்கிடவும் மூசும்.

ல்லாசக் காற்றூதும் கில்லாடி உதடும்

தில்லானா விரல்களின் சல்லாப நர்த்தனமும்

புல்லரிக்கச் செய்து உல்லாச இசையுதிர்க்கும்.

அல்லாடும் நெஞ்சு வல்லமையடையும்.

யிரில் பூவுதிர்த்துப் பயிர் வளர்க்கும்.

உயிர் மூப்பை ஒயிலாகத் தூரத்தள்ளும்.

துயிலிற்கு மாத்திரையாகி மயிற்பீலியாய்த் தடவும்.

துயர் சினம் துடைக்கும் மந்திர இசை.

ன்னலமுத இசை கண்ணன் கைப்பொருள்.

என்னமாய்க் கோபியரை வண்ணமாய் மயக்கியது.

என் அன்னையும் மயங்கி ரசிப்பாள்.

அன்னணம் நானும் மயங்கி ரசிப்பேன்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

17-12-2012.

(ல்லாங்கில் – பொருந்தும் வகையில்./ வல்லாங்கு – இயன்ற அளவில்./ மூசும் – மொய்க்கும். /அன்னணம் – அவ்விதமே)

                                     Bar-Lines

 

 

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. seeralan
  டிசம்பர் 17, 2012 @ 22:41:46

  உயிரில் பூவுதிர்த்துப் பயிர் வளர்க்கும்.

  உயிர் மூப்பை ஒயிலாகத் தூரத்தள்ளும்.,,,,,,,,எடுத்துக்காட்ட எல்லாவரிகளும் போட்டி போடுகின்றன அருமையான வரிகள் தமிழ் தடை இன்றி மணக்கிறது வாழ்த்துக்கள் சகோ

  மறுமொழி

 2. கோமதிஅரசு
  டிசம்பர் 18, 2012 @ 04:55:16

  இசையால் மனோவியாதிகளை தீர்க்கலாம் என்கிறார்கள்.
  புல்லாங்குழல் இசையில் உயிரினம் மயங்கியதை கண்ணன் உணர்த்திவிட்டான். அதை மறுபடியும் கவிதையில் அழகாய் சொல்லிவிட்டீர்கள். இசையால் உயிர் வாழும். உங்கள் கவிமழையை ரசித்தேன்.

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 18, 2012 @ 08:16:14

  ”–இசையால் உயிர் வாழும். உங்கள் கவிமழையை ரசித்தேன்…”

  மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரி
  ஆண்டவனருள் நிறையட்டும்

  மறுமொழி

 4. கவியாழி கண்ணதாசன்
  டிசம்பர் 18, 2012 @ 11:07:09

  நல்ல வார்த்தை ஜாலமும் நேர்த்தியும் உள்ளது

  மறுமொழி

 5. T.N.MURALIDHARAN
  டிசம்பர் 19, 2012 @ 02:39:15

  //என் அன்னையும் மயங்கி ரசிப்பாள்.
  அன்னணம் நானும் மயங்கி ரசிப்பேன்.//
  எல்லோரும் ரசிக்கலாம்.

  மறுமொழி

 6. பழனிவேல்
  டிசம்பர் 21, 2012 @ 04:18:21

  “உல்லாசக் காற்றூதும் கில்லாடி உதடும்
  தில்லானா விரல்களின் சல்லாப நர்த்தனமும்
  புல்லரிக்கச் செய்து உல்லாச இசையுதிர்க்கும்.”

  அழகாய் சொன்னீர்கள்…அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 23, 2012 @ 14:17:34

   ”..“உல்லாசக் காற்றூதும் கில்லாடி உதடும்
   தில்லானா விரல்களின் சல்லாப நர்த்தனமும்
   புல்லரிக்கச் செய்து உல்லாச இசையுதிர்க்கும்.”..”

   எனக்கும் இவ்வரிகள் பிடிக்கும்.
   நன்றி சகோதரா கருத்திடலிற்கு. இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. sasikala
  டிசம்பர் 21, 2012 @ 08:56:53

  கன்னலமுத இசை கண்ணன் கைப்பொருள்.

  என்னமாய்க் கோபியரை வண்ணமாய் மயக்கியது.
  தங்கள் வரிகளைப்போல கண்ணன் புல்லாங்குழல் இசையும் ரசிக்கவே வைக்கிறது.

  தாங்கள் பதிவிடுவது எனக்கு தெரிவதில்லை ஆதலால் வரத்தாமதாம் மன்னிக்கவும்.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 23, 2012 @ 14:21:18

   நன்றி சசி கருத்திடலிற்கு. இறையாசி நிறையட்டும்.

   நான் கருத்திடுபவர்கள் வலையைக் கிளிக் பண்ணிப் பார்ப்பேன் புது ஆக்கமானால் கருத்திட்டுத் திரும்புவேன்.
   அல்லது தமிழ் மணம் திறப்பேன். அங்கும் சிலவேளை காணலாம்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: