40. காந்தக் காதல்.

loveeee                                                                          Photo:-   Thank you A.vikatan.

காந்தக் காதல்.

வாலிப வாசலின் வனப்புத் தென்றல்

வாலிபக் காதலாம் வசந்தச் சுகந்தம்.

வாலிபம் தொலைந்தாலும் வாசனை வீசும்.

வாலாயமாகும் வசீகரக் காதல்.

ஆடா மனிதனையும் ஆட்டும் மந்திரம்.

காடாக்கி வாழ்வைக் களவாடும் எந்திரம்.

வாடாமல்லிகையாய் வாசமில்லாப் போலியுமாகும்.

தேடா சுகமாய் வாகையும் வீசும்.

இதயத்துள் சொல்லாமற் கொள்ளாமல் வருமாம்.

இதயத்துள் புகுந்திட்டாலிமை தூங்காதாம்.

இதயம் கொடுத்திதயம் மாற்றுமாம்.

இதயம் கவர் பண்டமாற்று காதலாம்.

காதலென்றும் கசக்குமென்பவன்

காதல் வாழ்வின் கருப்பொருள் கண்டால்,

காதலைக் காந்தமாய் கையிற் கொள்வான்.

காதலைக் கடவுளாய் கருதியேற்பான்.

பார்த்திட எண்ணினால் குலம், குணம்

பார்க்காது. மன்னர், மனிதர் பேதமற்றும்

பார்த்ததும் ரசனையின் விருப்பு நேசமாகும்.

பார்த்திட்ட கணமே காதல் கனியும்.

வானவில் லல்ல  வாழ்வின் காதல்.

வானத்து நிலவாய் வாழ்விலொளிரும்.

வானம், நிலா, இயற்கை போன்றது

வானமுள்ள வரை வாழும் காதல்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

9-7-2012.

(எந்திரம்- மந்திர சக்கரம்)

                                                                   bar line

32 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ramani
    டிசம்பர் 21, 2012 @ 02:25:55

    This poem published in kaatruvelli ethal

    காந்தக் காதல்
    தலைப்பே வசீகரம்
    அதனை மிஞ்சும் அருமையான விளக்கக் கவிதை
    காதலால் நேரும் இரு நிலைகளையும் சொல்லிப் போனது
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி

  2. கோமதிஅரசு
    டிசம்பர் 21, 2012 @ 03:59:30

    வானம், நிலா, இயற்கை போன்றது

    வானமுள்ள வரை வாழும் காதல்.//

    வானம் உள்ளவரை மாறாத காதல் வாழ்க!.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  3. Maniraj
    டிசம்பர் 21, 2012 @ 04:06:45

    வனப்புத் தென்றல் வீசும் அருமையான கவிதை ..!

    மறுமொழி

  4. பழனிவேல்
    டிசம்பர் 21, 2012 @ 04:11:15

    “காதலென்றும் கசக்குமென்பவன்
    காதல் வாழ்வின் கருப்பொருள் கண்டால்,
    காதலைக் காந்தமாய் கையிற் கொள்வான்.
    காதலைக் கடவுளாய் கருதியேற்பான்.”

    ஆகா… எத்தனை அழகு.
    காதலை காதலிக்கும் கவிதை மிக அருமை.

    மறுமொழி

  5. sasikala
    டிசம்பர் 21, 2012 @ 08:59:28

    ஆடா மனிதனையும் ஆட்டும் மந்திரம்.

    காடாக்கி வாழ்வைக் களவாடும் எந்திரம்.

    என்ன அழகா சொன்னீங்க அசத்தல் வரிகள்.

    மறுமொழி

  6. seeralan
    டிசம்பர் 21, 2012 @ 10:03:22

    வானவில் லல்ல வாழ்வின் காதல்.

    வானத்து நிலவாய் வாழ்விலொளிரும்.

    வானம், நிலா, இயற்கை போன்றது

    வானமுள்ள வரை வாழும் காதல்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    காதலுக்கொரு இலக்கணம் அழகு அருமை

    மறுமொழி

    • கோவை கவி
      டிசம்பர் 24, 2012 @ 20:15:38

      ”..வானம், நிலா, இயற்கை போன்றது

      வானமுள்ள வரை வாழும் காதல்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,

      காதலுக்கொரு இலக்கணம் அழகு அருமை..”

      மிக்க நன்றி கருத்திடலிற்கு. இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  7. T.N.MURALIDHARAN
    டிசம்பர் 21, 2012 @ 14:16:02

    காதல் ஒரு காந்தம்தான்.நல்ல கவிதை

    மறுமொழி

  8. விச்சு
    டிசம்பர் 21, 2012 @ 15:19:02

    இதயம் கொடுத்து இதயம் மாற்றுமாம்… அழகான வரி. எனக்கும் பிடித்துள்ளது.

    மறுமொழி

  9. ரெவெரி
    டிசம்பர் 21, 2012 @ 15:41:09

    இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… மீண்டும் 2013 இல் சந்திப்போம்…MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR…

    மறுமொழி

  10. ranjani135
    டிசம்பர் 21, 2012 @ 16:27:55

    என்ன ஒரு அருமையான கவிதை சகோதரி!
    ரொம்பவும் ஆச்சரியப் பட வைக்கிறது – வார்த்தைகளின் கோர்வையான அணிவகுப்பு!
    ரசிக்க வைக்கிறது உங்களின் கடைசி வரி – முத்தாய்ப்பு: வானம் உள்ளவரை வாழும் காதல்!

    மிகவும் பிடித்திருந்தது.
    பாராட்டுக்கள்!

    மறுமொழி

    • கோவை கவி
      டிசம்பர் 24, 2012 @ 20:19:31

      ”..ரசிக்க வைக்கிறது உங்களின் கடைசி வரி – முத்தாய்ப்பு: வானம் உள்ளவரை வாழும் காதல்!…”

      மிக்க நன்றி கருத்திடலிற்கு. இறையாசி நிறையட்டும்

      மறுமொழி

  11. Dhavappudhalvan
    டிசம்பர் 22, 2012 @ 07:57:06

    வார்த்தைகளே காந்தமாய் கவரும் போது, காதலைப் பற்றி சொல்லத்தான் வேண்டுமோ? அலை அடிக்கிறது எண்ணத்திலே உங்கள் “காந்தக் காதல் ” சகோ.

    மறுமொழி

  12. கவியாழி கண்ணதாசன்
    டிசம்பர் 25, 2012 @ 00:59:07

    நட்பே ,இன்னும் காதலை பற்றி என்னே அக்கறை அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • கோவை கவி
      டிசம்பர் 25, 2012 @ 13:37:18

      ”..நட்பே ,இன்னும் காதலை பற்றி என்னே அக்கறை அருமையான பதிவு ..”

      தங்கள் கருத்திடலிற்கு மிக மகிழ்வும் நன்றியும்.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  13. வேல்முருகன்
    டிசம்பர் 25, 2012 @ 13:24:18

    காதல்

    இதயம் கொடுத்திதயம் மாற்றும்.
    இகலோக காதல்
    இந்த கொடுக்கல் வாங்கல்
    இல்லையெனில்
    கடவுளாய் கருதி கொள்ள வேண்டும்

    மறுமொழி

  14. அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
    ஜன 08, 2013 @ 16:05:25

    அழிக்க முடியாத உண்”மை”களால் நிரப்பட்டுக்
    கிழிக்க முடியாத இருதயத்தாளில் தீட்டப்பட்டக்
    காதல் என்னும் ஓவியம் என்றைக்கும் இருவரின்
    சாதல் வரைக்கும் சாகாத ஒரு காவியம்!

    மறுமொழி

  15. raveendran sinnathamby
    ஏப் 09, 2013 @ 10:12:07

    ஆடா மனிதனையும் ஆட்டும் மந்திரம்.

    காடாக்கி வாழ்வைக் களவாடும் எந்திரம்.

    வாடாமல்லிகையாய் வாசமில்லாப் போலியுமாகும்.

    தேடா சுகமாய் வாகையும் வீசும்.

    மறுமொழி

  16. கோவை கவி
    மே 26, 2014 @ 20:16:42

    IN FB:-

    Sutha Hari, Anand Raj and Rajini Sri like this.

    Rajini Sri:-
    “காந்தகாதல் ஈர்ப்பு” விசையை நான் இன்று அறிந்தேன் உங்கள் அருமையான கவி படித்து Vetha ELangathilakam..

    மறுமொழி

  17. கோவை கவி
    மார்ச் 22, 2019 @ 18:22:36

    Seeralan Vee :- ஆடா மனிதனையும் ஆட்டும் மந்திரம்.
    காடாக்கி வாழ்வைக் களவாடும் எந்திரம்.,,,,,,,,,தலைப்புக்கேற்ற காந்தம் கவிதையிலும் அருமை
    2013

    Muthulingam Kandiah:- மனித வரலாற்றின் மூலகமே காம ஈர்ப்பின் காதல் .அது ஒவ்வொரு மனிதனிடம் உறங்கிய நிலையில் இருக்கும் காந்தம்.அதனிடம் எந்த வேற்றுமையும் வித்தியாச்மும் இருக்காது.கவருவது தெரியாது,கவர்ந்து விட்டால்.விடுவது தெரியாது விசித்திரமாக இயங்கும்.கண்ணீரில் முடிவு.அல்லது கடிமணத்திலும் முடிவு.
    2013
    N.Rathna Vel :- அருமையான கவிதை. வாழ்த்துகள்.
    2013
    சங்கரன் ஜி :- இனிய காதல் எப்படியும் வரும், நல்ல பதிவு
    Ramadhas Muthuswamy // காதலென்றும் கசக்குமென்பவன்
    காதல் வாழ்வின் கருப்பொருள் கண்டால்,
    காதலைக் காந்தமாய் கையிற் கொள்வான்.
    காதலைக் கடவுளாய் கருதியேற்பான்.// ஆம்.
    காதல் வாழ்வின் கருப்பொருள்தனைக் கண்டார்களாயின், காதலைக் காந்தமாய் கையிற் கொள்வார்கள் என்பதிலையமில்லை. காதலைக் கடவுளாய் கருதியேற்பார்கள்…காதலர்கள்!!! மிகவும் தெளிவான, அருமையான படைப்பு …வாழ்த்துக்கள் மனங்குளிர்ந்து!!!
    2013
    சிறீ சிறீஸ்கந்தராசா:- புதிய காதல் இலக்கணம்!! அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!
    2013
    கிரி காசன்:- காதலுக்கு வயதில்லை கற்பனைக்கு வயதில்லை
    இது உண்மையே ! வாழ்வில் மகிழ்ச்சியை பிடிப்பை இழக்கும்போது வாலிபததுக்கும் காதல் இல்லை. தங்கள் வரிகள் கோர்த்த அழகான கவிதை ஒரு வண்ண மாலை
    2013
    all are from 2013 tear comments:-
    Rajaji Rajagopalan :- காதலென்றும் கசக்குமென்பவன்.. காதலைக் கடவுளாய் கருதியேற்பான்…// வாலிபம் தொலைந்தாலும் வாசனை வீசும்..// காதலுக்கு இன்னொருவகையான வரைவிலக்கணம் வகுத்தீர்கள். வாழ்த்துகள்.

    Abira Raj :- காதலென்றும் கசக்குமென்பவன்
    காதல் வாழ்வின் கருப்பொருள் கண்டால்,
    காதலைக் காந்தமாய் கையிற் கொள்வான்.
    காதலைக் கடவுளாய் கருதியேற்பான்.////உண்மை தான் அக்கா அழகிய கவிவரிகள் வாழ்த்துக்கள்

    Sakthi Sakthithasan _–அன்பினிய சகோதரி வேதா, காதலைப் பற்றிஒய அருமையானதோர் கோணப்பார்வை. அற்புதம். வாழ்த்துக்கள்

    Nadaa Sivarajah:- //வாலிபம் தொலைந்தாலும் வாசனை வீசும்.
    வாலாயமாகும் வசீகரக் காதல்.// வசீகரம் உங்கள் காந்தக் காதல். வாழ்த்துக்கள் !!

    SirajDeen Siro :- அற்புதம். வாழ்த்துக்கள்

    Verona Sharmila:- என் நல் வாழ்த்துக்கள்..வானவில் லல்ல வாழ்வின் காதல்.
    வானத்து நிலவாய் வாழ்விலொளிரும்.
    வானம், நிலா, இயற்கை போன்றது
    வானமுள்ள வரை வாழும் காதல்.

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி