5. கண்ணிறை தரவுகள்

rainbow 041

imagesCA1CSAIR

கண்ணிறை தரவுகள்

(800ம் ஆக்கம்)

ண்ணச் சரங்கள் வண்ணச் சுரங்கள்.

கண்ணிறை தரவுகள் கண்ணா நீயே! (வெற்றி)

”என்ன குறும்படா!” என்கிறேன் கனவிலும்.

சின்ன முகிலாகவும் பின்னர் கலையும்.

பூவிதையாக என் கவிதை பாவுவேன்.

பாவிக்கும் நினைவுன் பூமுகம் தான்.

தரவு விழியும் ஆசை மொழியும்

மீசை முறுக்கியும் ஓசையிடும் உணர்வோடும்.

யிலாய்  ஆடி குயிலாய் பாடி

உயிரோடு பிணைக்குது கயிறாயுன் விழி.

தெய்வீக மழலையின் மெய் தீண்டல்

செய்யும் விந்தைகளுலக வெய்யிலே போக்கும்.

டுருவும் பார்வை ஊடுருவித் துளைக்கும்

ஆராய்ந்து தேடும் ஆராயுமுன் கண்கள்.

தொழுது போற்றும் வழுது அற்றதாம்

விழுதாமுன் நேசம் பழுதகற்றும் மூலிகை.

(வழுது – பொய்)

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ் டென்மார்க்.

24-1-2012.

blue-pacifiers-hborder

 

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Maniraj
  டிசம்பர் 25, 2012 @ 02:05:13

  தெய்வீக மழலையின் மெய் தீண்டல்

  செய்யும் விந்தைகளுலக வெய்யிலே போக்கும்.

  இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்…

  மறுமொழி

 2. பழனிவேல்
  டிசம்பர் 25, 2012 @ 06:09:31

  ”என்ன குறும்படா!” என்கிறேன் கனவிலும்.
  சின்ன முகிலாகவும் பின்னர் கலையும்.
  பூவிதையாக என் கவிதை பாவுவேன்.

  ஆகா… எத்தனை அழகு.
  நன் பணி மேலும் தொடரட்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 02, 2013 @ 14:48:38

   ”..”என்ன குறும்படா!” என்கிறேன் கனவிலும்.
   சின்ன முகிலாகவும் பின்னர் கலையும்.
   பூவிதையாக என் கவிதை பாவுவேன்.

   ஆகா… எத்தனை அழகு.!..”

   மிக்க நன்றியும, மகிழ்வும் பழனிவேல் கருத்தினையிட்டு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. sujatha anton
  டிசம்பர் 25, 2012 @ 07:43:31

  புன்னகை பூர்த்த பேரனின் திருவிளையாடல்கள் இன்று உங்களை
  கொள்ளை கொள்வதோடு
  தெய்வீக மழலையின் மெய் தீண்டல்

  செய்யும் விந்தைகளுலக வெய்யிலே போக்கும்.
  கவிநயத்திலும் வெளிப்பட்டுள்ளது. அருமை….வாழ்த்துக்கள்!!!!
  ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 4. ranjani135
  டிசம்பர் 25, 2012 @ 16:08:06

  உங்கள் பேரன் மிகவும் புண்ணியம் செய்தவன் சகோதரி! அவனுக்காகவே கவிதை பாடும் பாட்டி!
  பாட்டியின் கவிதைவரிகளிலே நிறைந்து இருக்கிறானே!

  அவனால் எங்களுக்கும் கவிதை முத்துக்கள்!
  பாட்டியும் பேரனும் என்றென்றும் இதேபோல கவிதையால் ஒன்றி இருக்க வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 5. Mrs.Mano Saminathan
  டிசம்பர் 25, 2012 @ 18:21:46

  ‘ குழலினிது யாழ் இனிது’ என்ற வள்ளுவரின் வாக்கு நினைவுக்கு வருகிறது உங்களின் கவிதையைப்படித்தபோது, பேரனின் அருகாமையில் உங்கள் மகிழ்வைக்கண்டபோது! எல்லாவற்றையும் தாண்டிய இன்பம் இது! அனுபவித்துக்கொண்டிருப்பதால் உணர்ந்து வாழ்த்துகிறேன்- பாட்டியும் பேரனும் இது போல என்றும் மகிழ்வாக இருக்க இனிய வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

 6. bharathidasan
  டிசம்பர் 25, 2012 @ 19:03:15

  வணக்கம்!

  எண்ணுாறு ஆக்கம் படைத்திங்கே
  இனிய தமிழுக் கணிசெய்தீா்!
  பெண்ணுாறு அழகின் பேற்றுகளைப்
  பெற்று மணக்கும் உன்கவிகள்!
  மண்ணுாறு ஆண்டு செய்தவத்தால்
  மங்கை வேதா பிறந்தாரோ!
  பண்ணுாறு ஆக்கப் பாரதிநான்
  படித்து மகிழ்ந்து வாழ்த்துகிறேன்!

  கவிஞா் கி, பாரதிதாசன் – பிரான்சு
  kambane2007@yahoo.fr

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 26, 2012 @ 08:06:16

   ஆசிரியரே! மிக மகிழ்ந்தேன் தங்கள் வாழ்த்திற்காக.
   மனம் நிறைந்த நன்றியும் உரித்தாகுக.
   தைத் திங்கள், ஆவலுடன் காத்துள்ளேன்
   பாடம் படிக்க. இறையருள் நிறையட்டும்.

   இனிதாக தங்களிற்கு ஆங்கில 2013 வருடம் அமையட்டும்.

   மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 26, 2012 @ 09:04:07

   தங்கள் (கவிஞர்.கி.பாரதிதாசன்.) புதியதோர் உலகம் படித்து
   மங்களமாய் எழுதிய வரிகள்:-
   பகுதி-1- வன்மம் நிறைந்து வளரும் உலகு
   அன்பில் நிறைவது அற்புதம்! அமையட்டும்!-

   பகுதி-2 -” குறளே உலகப் பொதுமறையாய்! ”….
   நிறமே நினைக்க மகாசக்தி.
   திறமே வினையாகில் – மனிதம்
   புறமே போகாது காத்திடுமே!
   நன்றி அரும் தமிழுக்கு.

   பகுதி-3 – புத்துலகு அமைக்க நாதன்
   சத்து தரட்டும்! தரட்டும்!
   உத்தமமாய் மக்கள் மகிழ
   எத்துணை சிறப்பு வழி!
   முத்தாக அமைக!அமைக!

   பகுதி-4 – ஒளவை தந்த நன்னீதி
   கௌவ்வி நானும் வளர்ந்திட்டேன்.
   ஒளவியமின்றி யிவை படித்து
   கௌரவமாய் உலகும் வாழட்டும்!.

   இன்று நான்கு பாடம்.
   நன்று தொடர்வேன் மேலும்!

   பகுதி . 5 – வாட்டி வதைத்தல் ஆசையல்ல
   ஊட்டி விட்டார் அக்காலம்.
   போட்டி போடும் அறிவுயர்ந்து
   ஊட்டிவிடட்டும் புதுக் கருத்தை.
   கூட்டித் தள்ளட்டும் பேதமையை.
   வாட்டும் பேதம் மறைந்துவிடும்.

   அரிய வரிகள்.

   (இது நான் அங்கு இட்ட வரிகள்.)

   மறுமொழி

 7. sasikala
  டிசம்பர் 29, 2012 @ 15:42:13

  மயிலாய் ஆடி குயிலாய் பாடி

  உயிரோடு பிணைக்குது கயிறாயுன் விழி.
  என்ன அழகு என்ன அழகு அற்புதமான வரிகள். பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதால் இணையம் பக்கம் வரவில்லை மன்னிக்கவும்.

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 13:10:11

  Ganesalingam Ganes Arumugam:- பேரன் வெற்றிக்கு அழகான பாடல் வாழ்த்துக்கள் வெற்றிக்கும் பாடலுக்கும் இனிய காலை வணக்கத்துடன்.
  December 25, 2012 at 7:57am · Unlike · 1

  N.Rathna Vel ஆஹா. அருமை. வாழ்த்துகள்.
  December 25, 2012 at 8:10am · Unlike · 1

  Sujatha Anton _ புன்னகை பூர்த்த பேரனின் திருவிளையாடல்கள் இன்று உங்களை
  கொள்ளை கொள்வதோடு
  தெய்வீக மழலையின் மெய் தீண்டல்

  செய்யும் விந்தைகளுலக வெய்யிலே போக்கும்.
  கவிநயத்திலும் வெளிப்பட்டுள்ளது. அருமை….வாழ்த்துக்கள்!!!!
  ”கவிதாயினி வேதா”
  December 25, 2012 at 8:42am · Unlike · 1
  S
  Seeralan Vee :-ஆதரவு விழியும் ஆசை மொழியும்
  மீசை முறுக்கியும் ஓசையிடும் உணர்வோடும்…………………………………………………….குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
  மழலை சொல் கேளாதார் …..nice
  December 25, 2012 at 9:30am · Unlike · 1

  கிரி காசன் __ பாச மழையின் பொழிவு கவிதை நீரோட்டம் அருமை!
  December 25, 2012 at 10:39am · Unlike · 1

  Kalaimahel Hidaya Risvi தொழுது போற்றும் வழுது அற்றதாம்
  விழுதாமுன் நேசம் பழுதகற்றும் மூலிகை.அரு மைஅருமைவாழ்த்துகள்.
  பேரன் வெற்றிக்கு அழகான கவிதை .sis ..
  December 25, 2012 at 11:47am · Unlike · 1

  மறுமொழி

 9. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 13:11:52

  Verona Sharmila :- மயிலாய் ஆடி குயிலாய் பாடி
  உயிரோடு பிணைக்குது கயிறாயுன் விழி.அழகு அருமை..பேரனுக்கும், உங்கள் கவிதை மழைக்கும் என் வாழ்த்துக்கள்..
  December 25, 2012 at 1:02pm · Like

  Ramadhas Muthuswamy //பூவிதையாக என் கவிதை பாவுவேன்.

  பாவிக்கும் நினைவுன் பூமுகம் தான்.//

  //தெய்வீக மழலையின் மெய் தீண்டல்

  செய்யும் விந்தைகளுலக வெய்யிலே போக்கும்.//
  மிகவும் அருமை!!! மயிலாயும் குயிலாயும் ஆடி, உயிரோடுப் பிணைக்கும் விதம்.!!!
  December 25, 2012 at 1:54pm · Like

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- குட்டிப் பேரனுக்கு வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்!!
  December 25, 2012 at 2:01pm · Like · 1

  Sz Mathi :- ஓ அழகு.. கண்களில் துறுதுறுப்புகளுடன்..
  December 25, 2012 at 2:02pm · Like

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 25, 2015 @ 13:13:41

  Naguleswarar Satha:- Very nice one Acca!
  December 25, 2012 at 2:09pm · Unlike · 1

  Vetha Langathilakam :- Thanks satha!….பார் சதா! இப்போது வெற்றி குசினியில் இருந்தராம் நான் போன் பண்ணினேன் திலீபனுக்கு. (தீலீபன் சிற்றிங் றூமில்)” அம்மா பாருங்கோ அவனுக்கு டெலிபோன் மணி கேட்டிட்டுது,விறுவிறு என்று வருகிறான் ” என்றார். சரி என்று அவரோடு கதைத்தேன், ” குட்டி! வெற்றி! என்ன செய்யுறீங்க!” என்று. உடனே சிரிக்கிறாராம். நேற்று அப்பப்பா ”முட்டு!…முட்டு!..”.என்று கேட்க நெற்றியைக் கொண்டு தொலைபேசிக்கு முட்டினாராம்.
  முட்டவும், கைதட்டவும் பழக்கியுள்ளேன். இப்படித்தான்….
  December 25, 2012 at 2:21pm · Like · 1

  Naguleswarar Satha :- Very interesting time & his age.Clever boy No?
  December 25, 2012 at 2:26pm · Unlike · 1

  Jayathas Thas :- அருமை sis..
  December 25, 2012 at 3:03pm · Unlike · 1

  Muthulingam Kandiah :- குழந்தை உள்ளம் புனிதமும் உண்மையும் அடங்கியது .அது மன வேதனைகளுக்கு அருமருந்தாகும்.
  December 26, 2012 at 3:25am · Unlike · 1

  R Thevathi Rajan:- குழந்தைகளின் அற்புதத்தை சொல்லிக்கொண்டே போகலாம். அப்படித்தான் தாங்களும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்… கடவுளுக்கு சமமாக இன்னும் ஒருபடி மேல் என்றுகூட சொல்லலாம்… வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்… மழலையை அழகாக தெளிவாக சொன்னதற்கு….
  December 26, 2012 at 5:59am · Unlike · 1

  Punitha Gangaimagan:- அன்பைப் பொழியும் வரிகளில் மனம் நனைகிறது. வாழ்த்துக்கள் தோழியே…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: