41. கவிதை பாருங்கள்(photo,poem)

garden -baby

இயற்கை.

தண்டலைக் கிளிகள் கூட

வண்ட லைந்து மலரிலாட

கண்டலையும் சிறுவர் மலரைக்

கொண்டலைந்து மகிழ, கூட

அண்டிய  பட்டுப்பூச்சிகள்

செண்டெனச் சேர்ந்து பறக்க

விண்டலமென்று அழகை

அண்டியோர் புகழும் அற்புதம்!

வரிகள் வேதா. இலங்காதிலகம்

ஓகுஸ், டென்மார்க்.

29-12-2012.

(தண்டலை- சோலை.
விண்டலம் – தேவலோகம்).

                                    pachchai line

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 30, 2012 @ 03:25:45

  அழகை அண்டியோர் புகழும் அற்புதம்!
  அழகான கவிதை வரிகளுக்கு வாழ்த்துகள்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 02, 2013 @ 11:59:09

   ”..அழகை அண்டியோர் புகழும் அற்புதம்!..”

   மிக நன்றி சகோரி தங்கள் இனிய வரவிற்கும் வரிகளிற்கும்.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 2. marubadiyumpookkum
  டிசம்பர் 30, 2012 @ 10:00:22

  வாழ்க வளர்க. வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. கவிஞா் கி. பாரதிதாசன்
  டிசம்பர் 31, 2012 @ 19:48:27

  வணக்கம்!

  தண்டலை மயில்கள் என்று
  தனிப்புகழ்க் கம்பன் சொல்வான்!
  சுண்டலைப் போன்றே வாசம்
  சுடச்சுட வீசும் சொற்கள்!
  வண்டலை வண்ணம், நெஞ்சை
  வடித்துள கவிதை ஈா்க்கும்!
  வெண்டளைக் கவிஞன் யானும்
  வேண்டியே வாழ்த்து கின்றேன்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு

  மறுமொழி

 4. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜன 01, 2013 @ 10:39:20

  ரசித்து சுவைத்தேன் தங்கள் கவித்தேனை , மிக அருமை ! நன்றியுடன் வாழ்த்துக்கள்………… கோவைக்கவி .

  மறுமொழி

 5. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஜன 01, 2013 @ 21:18:49

  வணக்கம்!

  ஆங்கிலப் புத்தாண்(டு) அனைத்து வளமருள
  ஓங்கி உயா்க உவந்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு
  01.01.2013

  மறுமொழி

 6. மகேந்திரன்
  ஜன 02, 2013 @ 11:37:20

  வணக்கம் வேதாம்மா….
  விடுமுறையில் இருந்ததால் வலைப்பக்கம் வரமுடியவில்லை…
  எதுகைக் கவிதைகள் படிக்கவேண்டும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு
  உங்கள் தளம் வந்துவிடலாம்…
  அவ்வளவு அழகழகான எதுகைக் கவிதைகள்
  கொட்டிக்கிடக்கின்றன உங்கள் தளத்தில்…
  அருமையான கவிதை அம்மா..

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 02, 2013 @ 12:03:34

   மிக மிக மகிழ்ச்சி, நன்றி மகேந்திரன். தங்கள் இனிய வரவிற்கும் வரிகளிற்கும்.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 7. கவியாழி கண்ணதாசன்
  ஜன 02, 2013 @ 17:04:33

  சிறப்பாக வார்த்தைகள் பிரயோகம் செய்துள்ளீர்கள் அருமை

  மறுமொழி

 8. பழனிவேல்
  ஜன 04, 2013 @ 13:26:05

  “இயற்கை”
  தலைப்பே தனி கவிதை.
  அந்த கவிதையின் கவிதை மிக அருமை.
  அதிலும் எதுகையின் வழி மிக அருமை.

  மறுமொழி

 9. raveendran sinnathamby
  செப் 18, 2013 @ 12:23:52

  மருதநிலம் தனின் பாடலசைவில்
  மனதுக்கினியகற்பனையில்
  இதமாய்கிடைத்த இனியகவி
  உதயமானது உன் மனதில்.

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 22, 2019 @ 18:32:25

  2013 year comments:-

  Sujatha Anton :- இயற்கை ரசனையின் இயற்கை வனப்புடன்
  ”தண்டலை கிளிகள் கூட
  வண்டலைந்து மலரிலாடும்” வரிகள் அதிலும் அழகூட்டுகின்றன.
  அருமை…..

  Seeralan Vee:- அழகிய கவிதை

  சங்கரன் ஜி :- அறுமையான கவிதை இனிய வரிகள்

  Kalaimahel Hidaya Risvi :- அருமையான கசிவு
  ஆழமான ஊற்று
  ருசியான நீர்
  கவித் தாகத்தை போக்கும் கவிதை சகோதரி
  வாழ்த்துக்கள் தூவட்டும் தூறலாய் ..

  Ramadhas Muthuswamy :- மிகவும் சிறந்த கவியூட்டம். “அண்டிய பட்டுப்பூச்சிகள்
  செண்டெனச் சேர்ந்து பறக்க”…. மிகவும் அருமை!

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- ஓசை நயமுள்ள அருமையான கவிதை..
  Rajaji Rajagopalan:- தேவலோகத்து அற்புதம் கொண்ட மலர்களை வைத்து கிளிகளையும் வண்டுகளையும் குழந்தைகளையும் எங்களையும் மயக்கிவிட்டீர்கள்!

  சிறீ சிறீஸ்கந்தராசா :- தண்டலைக் கிளிகள் கூட
  வண்ட லைந்து மலரிலாட
  கண்டலையும் சிறுவர் மலரைக்

  கொண்டலைந்து மகிழ, கூட
  அருமை அம்மா!! வாழ்த்துக்கள்!!

  Verona Sharmila :- ஆழமான இனிய வரிகள்…வாழ்த்துக்கள்!!

  R Thevathi Rajan :- அத்தனையும் அழகு…
  சொல்ல முடியாத பாராட்ட
  வார்த்தைகள் இல்லாமல் தேடிக்கொண்டு
  இருக்கிறேன்… இருந்தாலும் இருக்கும்
  வார்த்தையை கொண்டு வாழ்த்துகிறேன்
  தங்களை… அன்போடு ஏற்றுக்கொண்டு
  மேலும் வளருங்கள்….

  Nadaa Sivarajah :- ரசித்து சுவைத்தேன் தங்கள் கவித்தேனை , மிக அருமை ! நன்றியுடன் வாழ்த்துக்கள் … கோவைக்கவி .

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 22, 2019 @ 18:33:22

  Vetha Langathilakam :—-Ellorukkum mika nanry. God bless you all.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: