256. மார்கழியே!….

 

Pongal-6 

மார்கழியே!….

 

பார் களி கொள்ள சீரடியெடுக்கும்
மார்கழி மகளே! கார்த்திகைக் கடுத்தவளே!
ஊர் ஆராதிக்கும் பாரதி ஆறுமுகநாவலர்
கர்ப்பத்தால் உலகுதித்த பேருடை மார்கழியே!

ளியுடை வழி சொல்! தமிழர்
களிகொள்ள, விழி மலர!
வழியும் கண்ணீர் முற்றாக அழி!
தெளி அமைதியை! திருவுடை மார்கழியே!

ர்வமாய் என்னகம் எதிர் கொள்ளும்
சீர்மிகு பிறந்த நாட்கள் ஏந்தியும்
தேராக வரும் பரவச மார்கழியே!
பார் போற்றப் பெயர் பொறித்திடு!

கார் மூடிப்பகல் தேய்ந்து குறுகி,
சோர்வு விரக்தியும் சிலருக்கு ஏந்துகிறாய்.
கோடை மறைய வருவதால் உன்னைப்
பீடை மார்கழி என்பாரோ சொல்!

பிரகாசிக்கும் பனி ஆடை போர்த்தும் மார்கழியே!
திருவெம்பாவை, கிறிஸ்துமஸ், பாவை நோன்பென
திருவிழாக்காணும் மார்கழியே! தமிழினம்
சுவாசிக்கச் சமாதானக் கதவு திறக்குமா!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
3-12.2005.

 

                                   Nyt billede

 

Next Newer Entries