43. கவிதை பாருங்கள்(photo,poem)

peacock[1]

நிறையுணர்வு.

 

மயில் தோகை விரித்து
குயிலெனக் கூவும் இதயத்து
வெயிலற்ற உணர்வு களித்து
உயிரென ஊட்டம் தந்து
துயிலையும் அளித்து நிறைத்து.
ஒயிலானது காலமுழுதும்.
கையிலிது நிலைக்க வேண்டும்.

(ஒயிலானது – அழகிய தோற்றமானது)

 

vandu

வண்டு வந்து தேனெடுத்து

உண்டு மகிழட்டுமென்று

முண்டு பண்ணாத மனஒழுக்கம்

கொண்டு பேணும் மலர்களே!

 

(முண்டு – தீவிரஎதிர்ப்பு)

 

 

redarrowline

16. மனித நேயப் பகிர்வு.

love

T:  5-2-2013

மனித நேயப் பகிர்வு.

*

பூ சூட்டினார் பெற்றோர்.

பூரிப்பு நீயும் சூட்டினாய்.

பூங்கணையானது வாலிபத்தில்.

பூரண மனித நேயனொருவனிடம்

பூவை மதித்து வாங்கலாம்.

*

ரும் பொட்டிட்டாள் அம்மா

அரும் குங்குமம் உன்னால்.

பெரும் சொத்தென உன்னையும்

அரும் புதையலாய் என்னையும்

கருதிட மனித நேயம் தேவை.

*

ன்று கண்ணான பெற்றோர்

பொன் தந்தார். பின்பு

பொன்னால் தாலி. மயங்கலாம்.

கண்ணாக ஒருவரையொருவர்

எண்ணுபவன் துணையமைந்தால்.

*

தாலி பெற்றால் நினைத்திடு

வேலி இருவருக்கும் அதுவென்று!

கூலியான மனிதநேயப் பகிர்வால்

தாலி ஆலி ஆகாது.

தாலி அடிமை விலங்காகாது!

*

டுமை அடிமை விலங்கு!

கொடுமை மனிதநேய மிடிமை!

நெடுமையாய் ஒருவரையொருவர்

கொடுமையின்றி மதிக்கும் மனிதம்

நடுகை மனம் தேவை!

*

ருவரையொருவர் மிதிக்காது

தரும் மனிதநேயப் பகிர்வது

அரும் சுதந்திரப்  பூங்காவது.

பெருமை உலக வாழ்விற்கும்.

திருமண வாழ்வும் கௌரவமாகும்.

*

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ்,  டென்மார்க்.

28-1-2013.

(ஆலி – தேள்.   பூங்கனை – மன்மதபாணம்.  நெடுமை – பெருமை, ஆழம்.   மிடி – வறுமை.)

*

bar line

41. மனதில் தேன் கரைக்கும்…

CIMG2727[1]

நன்றிதிருமதி மனோ சாமிநாதன்    (இவரது கண்ணாடிப் பெயின்டிங்)

மனதில் தேன் கரைக்கும்…

 

 

விழி தொடுத்த மொழி களித்தது.

வழி கண்டது எழில் நிறைந்தது.

கொழித்த காதலால் ஏழிசையொலித்தது.

 

புதிதான உணர்வுப் பதிவு அணிவகுப்பு.

பதிலோடு மனம் குதிப்பு, பூரிப்பு.

அதிலொரு ஏமாற்றப் பதிவில்லை இனிப்பு.

 

வார்த்தைகள் தவிப்பின்றி கவி ஆர்த்தது.

கோர்த்த வாக்கியங்கள் தத்தித்தத்தி ஈர்த்தது.

வார்த்த வரிகள் முற்றுப் புள்ளி சேர்த்தது.

 

டல் கூடலிணையாய் நாடும் மையல்

தேடலினம் பெருக்கும் போதைச் சாரல்.

நாடலுன்னத உருவாக்கம் காதல்.

 

சோடி மலர்களாய் ஆடும் இதயம்

கூடிக் கலப்பதால் ஓடும் ஏக்கம்.

நாடும் இன்பம் குளிர் சாரலாய் கூடும்.

 

னித் துளிகளாய் கனிச்சுவையாய்

இனிக்கும் நிகழ்வுகள் தனிச் சிலிர்ப்பாய்

இனி நாமொன்று நீ தனியில்லை.

 

னதில் தேன் கரைக்கும் காதல்

இனிமைகளின் கர்ப்பப்பை, பவளத் தொட்டில்.

உணர்வுகள், புலன்களின் அவசியம் காதல்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

25-1-2013.

 

 

 

 

humming-bird

 

 

3. கலையும், கற்பனையும்

cross stich

கலையும், கற்பனையும்

பிள்ளைகள் பராமரிப்புப் பற்றி 3 வருடங்கள் டெனிஸ் மொழியில் படித்தேன். 14 வருடங்கள் 3லிருந்து 12 வயதுப் பிள்ளைகளுடன் மாறி மாறி வேலை செய்தேன். (நர்சரியிலும், ஓய்வு நேரப் பாடசாலையிலும்.)

அரிவரி வகுப்பிலிருந்து 3 – 4ம் வகுப்புப் பிள்ளைகள் தம் பாடசாலை முடிய 12.00 – 13.00மணிக்கு வருவார்கள். பின்னர் மாலை 5 மணிவரை தமது பெற்றோர் வீடு வரும் நேரம் வரை நின்று வீடு செல்வார்கள். நர்சரி போலவே இதற்கும் பெற்றோர் பணம் செலுத்த வேண்டும். இதையே பாடசாலை முடிய நடப்பதால் ஓய்வு நேரப் பாடசாலை என்கிறேன்.

இங்கு தமது வீட்டுப் பாடம் செய்வார்கள். கை வேலைகள் போன்ற ஆக்கப் பணிகள் ஓவியம், நிறம் தீட்டுதல், தையல், வெட்டி ஒட்டுதல,  நீச்சல், பந்து விளையாட்டு என்று பல விதமான  நடை பெறும். ஓவ்வொரு பெரியவர்களும் தமக்குப் பிடித்த தலைப்பில் அன்றைய நாளை ஓட்டுவார்கள் – இது எமக்கும் வீட்டு வேலை தான் இன்று என்ன செய்யலாம் என்று.

இதில் நான் பிள்ளைகளுடன் தையலும்  செய்தேன். மேலே உள்ள படம் குறுக்கு வெட்டுத் துணியில்  தைக்கும் ஆரம்பத் தையல். சிலவற்றை கம்பளித் துணியிலும், சுவெட்டர் போன்று பின்னிய ஆடைகளிலும் தைக்க முடியும்.  இதை மாதிரியாகக் காட்டி இந்த வகையும், வேறு வகைகளும் தைப்போம். (பிள்ளைகளிற்குக் காட்டிக் கொடுப்பேன்)

பிள்ளைகள் மிக ஆசையாக குழுவாக அமர்ந்து கேட்டு செய்வார்கள். உபகரணங்கள் பாடசாலையிலே  உள்ளது. (ஊசி, நூல், துணிகள்). இது போல ஒவ்வொரு ஆக்க வேலைகளிற்கும் உரிய உபகரணங்கள் பாடசாலையே கொடுக்கிறது.

இப்படி கலைவினைகள் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் என் பின்னாலேயே   வருவார்கள் ”வேதா இன்று என்ன செய்வது ”  என்று. இது மேலே உள்ள பட விளக்கம்.

sweater 009sweater 026

தனி நிற சுவெட்டர் வாங்கி எனது கை வேலைகளைப் பதிப்பேன். இவை முன் பக்கம் திறந்து பூட்டும் வகை ஆடை. டெனிஸ் மொழியில் காடிகாண் என்று கூறுவோம்.

இங்கு 3 சுவெட்டர் படங்கள்  உண்டு. இதில் முதலாவதிற்கு வெள்ளை, மெல்லிய நீலம், கொஞ்சம் அதிக நீலநிற 3 வரிகள் (மூன்று தடவை) கம்பளி நூல் பாவித்து தைத்துள்ளேன்.

அடுத்து கறுப்பு சுவெட்டருக்கு எல்லா நிறங்களும் கலந்த (மல்டி கலர்) கம்பளி நூலில் சங்கிலித்தையல் போட்டு பின்னர் வெள்ளி நிற கம்பளி நூல் ஒரு வரிக்குக் கொடுத்துள்ளேன். புகைப்படக் கருவி திறமானதல்ல . அதனால் இது தெளிவாகத் தெரியவில்லை.

3வது புகை நிற சுவெட்டருக்கு இப்படிப் போட்டுள்ளேன். ” வி” கட்டுத் தையலை கழுத்தைச் சுற்றியும் தைத்துள்ளேன். அது அப்படியே கீழே வரை வருகிறது. வெள்ளையும் கறுப்பும் கலந்த கம்பளி நூல் மனதைக் கவர்ந்தது, பாவித்தேன்.

sweater 027

தனி நிற காடிகான் விலை குறைய, அதை நான் நிறமாக்குவதும் பிடிக்கும்.

பார்த்து ரசியுங்கள் மெசீன் எம்ராய்டரிப் படங்கள் முக நூலில் உண்டு.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

22-1-2013.

                                                     orange

 

 

263. கவிஞன் பயணம்.

16831_1279704509903_3667293_n

*

 கவிஞன் பயணம்.

*

(பார்த்துத்தான் நானும்தான் முயற்சித்தேன்)

காதலைத்தான் பாடிடத்தான் தேன்

”பொன் அத்தான்” தலைப்புத்தான்

மாகவிஞன் பாரதிதாசன் வைத்தான்.

”என்னை மணக்கத்தான் பணத்தைத்தான்

குவிக்கத்தான் புறப்பட்டான்” என்றுதான்

தொடர்ந்தான் வரைந்தான் முடித்தான்.

*

”அத்தான்  என்னத்தான்” என்றுதான்

தொடர்ந்தான் கவிஞன் கண்ணதாசன்.

ஊற்றுத்தான் ஓரிடந் தான்

ஊடாடும் விதத்திலும் தான்

ஊராலும் தான் கவி ஊன்

ஊடறுப்புத் தான் வித்தியாசத்தேன்.

*

மானுடன் தன் எண்ணங்களைத்தான்

மாதுரியத்துடன் மாக்கோலமாகத் தான்

மாறுபடத் தான் தூவுகிறான்.

மாலிகனாகத்தான் கவிதை விற்கிறான்.

மாட்சிமையைத்தான், மாசுகளைத்தான்

மாத்திரைக் கோலுடன் வரைகிறான் விமரிசகன்.

*

காகிதப்பூவெனத்தான் மலைத்தேனாகத்தான்

கவித்தேன் பாய்வதன் வித்தியாசத்தீன்.

அவனியழுக்கைத்தான் அழித்திடத்தான்

அஞ்சாக் கவிஞன் அல்லும்பகலுமாய்தான்

அனலாகிறான், காற்றாகிறான்  வரைகிறான்.

அனையன் கவிஞன் பயணம் வெல்லத்தான்.

*

( மாலிகன் -பூவிற்போன்.  மாத்திரைக்கோல் – அளவுகோல்.

அனையன் – அத்தன்மையன்.  மாதுரியத்துடன் – இனிமையுடன்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.  ஓகுஸ், டென்மார்க். 19-1-2013.

Menuhead_sml

262. கண் காணக் கை வினையும்…

creativity

கண் காணக் கை வினையும்…

கண் காணக் கை வினையும்

              வண்ணத் திறன் வரமுடையோர் அண்டத்தில்

எண்ணிலர் இலைமறையாய் ஊடாடுகிறார்.

              எண்ணாப்பின்றித் தன் தேவை முடிப்பர்.

மண்டூகமாய் யார் பிறப்பும் இல்லை.

               ஒண்டுதலின்றிச் சனனம் முதல் முயற்சி.

திண்மையாய், கண்ணியமாய் தன் வழியேகுவார்

               தொண்டாகவும் தன் திறமை காட்டுவார்.

உணவு சமைப்போன் சுவையாய் சமைத்தலுடன்

               கணக்கற்ற ஆக்க வல்லமை நிறைந்திருப்பான்.

நிணச்செருக்கன்றி மகிழ்ந்து நடமாடுவான்.

               பிணமாக வாழ்வோன் பகுத்தறிவாள னல்லன்.

திறமைகள் கண் டார்வம் மேவலால்

               திறவுகோல் தேடித் திறமாய் பயில்வதும்,

திறமை மரபாலும் பெறும் கொடையெனவும்

               பிறந்து வாழ்ந்து மறைகிறார் மாநிலத்தில்.

(எண்ணாப்பு – இறுமாப்பு.   ஒண்டுதல் – பதுங்குதல். 

மண்டூகம் – மூடன்.  நிணச்செருக்கு – ஆணவம்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

17-1-2013.

bloembord1

2. எனது கற்பனைக் கைவேலை.

 13-januwary 002

எனது கற்பனைக் கைவேலை.

இந்தப் படத்தில் உள்ள தங்க முலாம் பூசிய கழுத்து மாலையை மலிவு விலையில் வாங்கிய போது அதில் தொங்கும் பென்ரன் தங்கத்தில் நடுவில் வெள்ளிக் கல்லு வைத்திருந்தது. எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் போட்டு வந்தேன்.

வேலைக்குப் போகும் போது தங்க அணிகள் பாவிப்பதில்லை. படத்தில் அருகில் உள்ள தோடு,  மேலே உடைந்த போது கவலையாக இருந்தது. கீழே தொங்கும் வளையமும், கல்லுத் தூக்கணமும் எனக்கு மிகவும் பிடித்தது.

அதை எடுத்து வீசாமல் இந்தப் பென்ரனோடு இணைத்து  விட்டேன்.

மணிமாலைகள் செய்ய மெல்லிய கம்பிகள் அதற்குரிய குறடு போன்ற உபகரணங்கள் என்னிடம் உள்ளது. வெள்ளிக் கல்லுகள் உள்ளதால் வெள்ளிக்கம்பி பாவித்து  வளையத்தை மாலைப் பென்ரனோடு இணைத்தேன் மிக அழகாக உள்ளதாக எனக்குப் படுகிறது.  நீங்களும் பாருங்கள்.

13-januwary 004

தோடு உடைந்துவிட்டது என வீசியிருந்தால் இப்படி ஓரு  பென்ரனை உருவாக்கியிருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

அடுத்து வருவது மலேசியாவில் வாங்கிய வெள்ளியாலான சிறு சங்கிலி ஒன்று.  இதற்கு பென்ரன் இல்லை. 

அது சின்னச் சின்னக் குண்டாகவும் நீண்ட குச்சியாகவும் உள்ள செயின். ” பிடிக்காவிடில் வீசிடு! ” என்பார் இவர்.

எனக்கு எதுவும் வீச மனம் வராது.

இளம் பெண்கள் சும்மாவும் அணிவார்கள்.
சமீபத்தில் இரண்டு அழகிய பென்ரனாகப் பாவிக்கக் கூடிய உருவங்கள் அகப்பட்டது.
என்ன செய்யலாம் என சிந்தித்த போது,  இரண்டையும் இணைத்து ஓரு பென்ரனாக்கி அந்த வெள்ளிச் செயினுக்குப் பாவித்தேன்.

13-januwary 005

அழகாகத் தெரிகிறது.

மிகப் பிடித்தும் உள்ளது.

ஆடைகளிற்கு ஏற்றபடி அணியலாமன்றோ!

இவை என் ரசனை.

நீங்களும் பாருங்களேன்!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஒகஸ், டென்மார்க்.
15-1-2013

sunset

 

261. தை பிறந்தால் வழி பிறக்குமா! (பொங்கல் வாழ்த்து)

vaaaa-ab

தை பிறந்தால் வழி பிறக்குமா! (பொங்கல் வாழ்த்து)

 

 

பொங்கட்டும் பொங்கல் உழவர் பெருமக்களுக்கு!

            பொங்கல் பொங்கட்டும் புதிய அரிசியில்!

பொங்கட்டும் பொங்கல் ஆதவனுக்கு நன்றியில்!

             பொங்கட்டும் ஆனந்தம் அனைவர் மனதிலும்!

தைபிறந்தால் வழி பிறப்பதாய் நம்நாட்டிலும்

             கை ஏந்தட்டும் ஆறுதல் பத்திரங்கள்!

வைப்பான ஆசை உயிர்த்தெழட்டும்!

 

 

பச்சரிசி, சர்க்கரை, பால், பயறு

             உச்சமாய் கலந்து வைக்கும் பொங்கலாய்

அச்சமின்றி இந்து, இஸ்லாம், கிறீஸ்தவர்

            இச்சையாய் ஒன்று கலந்து மகிழட்டும்!

பச்சரிசிப் பொங்கல் இனிது பொங்கட்டும்!

            உச்சமான உன்னதக் காலநிலை நாடு

இச்சகத்தில் இலங்கை யென உலகம்

           மெச்சும் நிலை அரசியலாகப் பொங்கட்டும்!

 

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

13-1-2013

related poem (pongal)
https://kovaikkavi.wordpress.com/2011/01/13/202-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae/
 

https://kovaikkavi.wordpress.com/2012/01/14/28-%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/nbsp; 

line-lites-mov

6. பல்லு (கொழுக்கட்டை)

Kolukkadai 104

பல்லு (கொழுக்கட்டை)

 

பல்லு! பல்லு! வெற்றிக்கு

பல்லு முளைத்ததற்காய் வழமைக்கு

பல்லுக் கொழுக்கட்டை செய்தோம்.

எல்லாம் தலையில் கொட்ட

செல்லம் ஒன்றைப் பற்றி

பல்லிற்குப் பதமாகக் கடித்தார்.

 

இரண்டாவதாகப் பணத்தைப் பற்றினார்.

மூன்றாவதாக மோதிரம் எடுத்தார்.

ஓன்றாய் கூடி மகிழ்ந்தோம்.

நன்றாய் வெற்றியும் மகிழ்ந்தார்.

அன்றைய திருநாள் இனிது.

என்றும் மறக்காத நாளது.

 

பல்லு! பல்லு! மனிதப்

பல்லு! பல்லு இல்லாவிடில்

சொல்லு நல்ல தெளிவில்லை.

பல்லு வெள்ளைக் கல்லு.

கல்லு முரசுள்ளால் வரும்

பல்லு கல்சியம் தாதுக் கலவை.

 

குருமணல், சாம்பல் கொண்டாம்

ஒரு நான்காயிரம் ஆண்டிற்கு முன்னராம்

இந்தியர் பல் துலக்க ஆரம்பித்தாராம்.

புத்தர் காலத்தில் வேப்பங்குச்சியாம்.

எகிப்தியர் காலத்தில் பற்பொடியாம்.

பற்பசை 1892ல் பிரித்தானியாவில் வந்ததாம்.

 

பெரிய பிரித்தானியப் பல் வைத்தியர்

Washington Went worth Sheffield

பற்பசையை 1892ல் கண்டு பிடித்தார்.

பல்லுக் குறுதி ஆலும் வேலும்.

பல்லில்லாதவன் சொல்லில்லாதவன்.

பல்லுப் போக சொல்லுப் போகும்.   

       (பழைய மொழிகள்)

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

11-1-2013.

 

Kolukkadai 111

14. ஆறுமுகநாவலர்.

aarumuganaavalar

ஆறுமுகநாவலர்.

நல்லூரிலுதித்த வல்லவர் ஆறுமுகநாவலர்

ஒல்லாங்குடன் பன்னிரண்டு வயதில் புலமைத்துவ

உல்லாகனானார் தமிழ் சமஸ்கிருதம் பயின்று.

உல்லாச இருபதில் ஆங்கிலமும் பயின்று

கல்லூரியாசானானார் யாழ் மத்திய கல்லூரியில்.

வைத்தீஸ்வரன் கோயில் வண்ணார்பண்ணையில்

சைவம் வளர்க்க வெள்ளிக்கிழமைப் பிரசங்கியானார்.

சைவ விழிப்புணர்வைப் பிரசங்கத்தால் ஊட்டினார்.

சைவத்தமிழ் பண்பாட்டிற்கு இசைவான கல்வி,

சைவசமயம், தமிழ்வளர்ச்சி இவர் நோக்கப்பணியானது.

சைவப்பிரகாச வித்தியாசாலையை வண்ணார்பண்ணையில் நிறுவினார்.

சைவம் வளர்ப்பதற்கு 1848ல் ஆசிரியப்பதவியையும் துறந்தார்.

சைவப்பிரசங்கம்  திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆற்றினார்.

கை  வந்தது  புலமையால்  நாவலர் பட்டம்.

சைவப்பாடநூல்களச்சிட இந்தியாவில் அச்சுயந்திரம் வாங்கினார்.

உத்தம நூல்களச்சிட  இலங்கை இந்தியாவில்

வித்தியானுபாலன இயந்திரசாலை அச்சகம் நிறுவினார்.

1870ல் கோப்பாயில் ஆண்கள் பாடசாலை நிறுவினார்.

என்அப்பப்பா நிறுவிய பெண்கள்பாடசாலையோடிணைந்து

இயங்குகிறதின்று. பயனுள்ள பல நூல்களெழுதிப் பதிப்பித்தார்.

மதுரை மீனாட்சி பரிவட்டப் பூமாலையணிந்தும்

குன்றக்குடியில் பிரசங்கத்தால் பல்லக்கிலேற்றியும் கௌரவித்தனர்.

1879ல் வண்ணார்பண்ணையில் ஆடிச்சுவாதியன்று இறுதிப்பிரசங்கம்.

கந்தப்பு சிவகாமிப்பிள்ளையின் கடைசி(ஆறாவது) மகன்.

1822 மார்கழி18ல் பிறந்து 1879 மார்கழி  5 லிறைபதமடைந்தார்.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

9-1-2013.

(ஒல்லாங்கு – பொருந்தும் வழியில்.
உல்லாகன் – திறமையாளன்.)

OLYMPUS DIGITAL CAMERA

அந்த நாவலர் பாடசாலை இன்று ..(பல மாற்றங்கள்)

                                            sunburst

Previous Older Entries