30. கோவை (கோப்பாய்) அம்மன்.

OLYMPUS DIGITAL CAMERA

கோவை அம்மன்.

ளம் காற்று வீசும் வயலோரம்

இதமாக ஆலமர நிழல் தரும்.

இருப்பிடம் முத்துமாரியம்மன் தலம்.

இனிய பால நினைவுகளேந்தி வரும்.

அலரிப் பூக்கன்றுகள் ஆலய வீதியில்

அடர்ந்த நிழலிற்குத் தென்னை மரங்கள்

படர்ந்த அன்றைய பழமைக் காட்சிகள்

தொடர்வதில்லை யெதுவும் கால மாற்றம்.

ட்டு நினைவுகள் பக்தி ரசத்தோடும்

கூட்டுப் பிரார்த்தனை வெள்ளி தோறும்

கேட்டுப் படித்தோம் பல திருப்பதிகம்.

விட்டு விலகாத நினைவுப் படம்.

உறவுகள் சகோதரர் ஒன்று கூடினோம்.

உறவினை அம்மனோடு இறுகப் பிணைத்தோம்.

உறவும் பிரிவுமாய் வாழ்வு கடக்கிறது.

உறவு அம்மனோடு கோபதாபம் கொண்டது.

விரிபுவி மாந்தருக்கு அருளும் தேவி

விரி புகழ் முத்துமாரியம்மன் தாயி.

சரியாப் புகழுடைய கோப்பாய்(கோவை) மத்தியம்மன்

விரிப்பாய் நாட்டில் அமைதிப் போக்கை.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

4-1-2013.

OLYMPUS DIGITAL CAMERA

 

Advertisements

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  ஜன 04, 2013 @ 22:31:38

  இயற்கையின் சூழலில்
  அமர்ந்திருந்து காப்பாயம்மா..
  கோவை அம்மா…

  மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  ஜன 05, 2013 @ 02:09:26

  பட்டு நினைவுகள் பக்தி ரசத்தோடும்

  கூட்டுப் பிரார்த்தனை வெள்ளி தோறும்

  கேட்டுப் படித்தோம் பல திருப்பதிகம்.

  விட்டு விலகாத நினைவுப் படம்.

  அருமையாய் படம் பிடித்த நினைவுகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2013 @ 22:12:23

   ”..அருமையாய் படம் பிடித்த நினைவுகளின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..”

   மிக்க நன்றி சகோதரி.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும.

   மறுமொழி

 3. sasikala
  ஜன 05, 2013 @ 05:24:24

  அழகான அமைதியான சூழலில் அமைந்த ஆலயம் மனதிற்கு நிம்மதி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2013 @ 22:13:28

   ”..அழகான அமைதியான சூழலில் அமைந்த ஆலயம் மனதிற்கு நிம்மதி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது..”

   மிக்க நன்றி Sasi
   ஆண்டவன் ஆசி நிறையட்டும.

   மறுமொழி

 4. ranjani135
  ஜன 05, 2013 @ 06:48:41

  ‘விரிப்பாய் நாட்டில் அமைதிப் போக்கை’
  நல்லதொரு பிரார்த்தனை சகோதரி.
  பிரார்த்தனை பலிக்கட்டும்.
  இனிய பால நினைவுகள் அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2013 @ 22:14:39

   ‘விரிப்பாய் நாட்டில் அமைதிப் போக்கை’
   நல்லதொரு பிரார்த்தனை சகோதரி..//

   மிக்க நன்றி சகோதரி.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும.

   மறுமொழி

 5. கோமதிஅரசு
  ஜன 06, 2013 @ 07:28:55

  விரிபுவி மாந்தருக்கு அருளும் தேவி

  விரி புகழ் முத்துமாரியம்மன் தாயி.

  சரியாப் புகழுடைய கோப்பாய்(கோவை) மத்தியம்மன்

  விரிப்பாய் நாட்டில் அமைதிப் போக்கை.//

  நாட்டில் அமைதியும் , அன்பும், கருணையும் நிலை பெற அருள் புரியட்டும் முத்து மாரியம்மன்.
  உங்கள் கவிதயை கேட்டு முத்துமாரி நிச்சியம் அருள்வாள்..

  மறுமொழி

 6. sujatha anton
  ஜன 06, 2013 @ 08:11:51

  பட்டு நினைவுகள் பக்தி ரசத்தோடும்

  கூட்டுப் பிரார்த்தனை வெள்ளி தோறும்

  கேட்டுப் படித்தோம் பல திருப்பதிகம்.

  விட்டு விலகாத நினைவுப் படம்.
  அருமை…..விட்டுவிலகாத ஞாபகங்கள்.

  மறுமொழி

 7. கவியாழி கண்ணதாசன்
  ஜன 06, 2013 @ 09:17:28

  உங்களின் வேண்டுதல் பலிக்கட்டும் முத்துமாரியின் அருள் கிடைக்கட்டும்

  மறுமொழி

 8. suba58
  ஜன 06, 2013 @ 11:33:24

  அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2013 @ 22:19:15

   கருத்திடலிற்கு மிக்க நன்றியும், மகிழ்வும் சுபா..
   தங்கள் வலைக்கு வர முடியவில்லை பெயர் சரியாகப் போடப் பட வில்லையோ!
   ஆண்டவன் ஆசி நிறையட்டும.

   மறுமொழி

 9. maathevi
  ஜன 06, 2013 @ 13:53:56

  அருள்தரும் கோப்பாய் முத்துமாரி அம்மன் அழகிய திருக்கோயில்.

  மறுமொழி

 10. Vyshnavi Kumaraswamy
  ஜன 08, 2013 @ 00:28:29

  அருமையாக ஆலய நினைவுகளை கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி.. வார்த்தைகள் இல்லை பாராட்ட.

  மறுமொழி

 11. Dr.M.K.Muruganandan
  ஜன 09, 2013 @ 09:54:51

  புகைப்படங்களுடன் பதிவு அருமை

  மறுமொழி

 12. காயத்ரி வைத்தியநாதன்
  ஜன 27, 2013 @ 08:49:36

  கோயிலின் படமும் தாங்கள் எழுதிய விதமும் கண்டு மகிழ்ந்தவாறு இருக்கிறது..மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்..:)

  மறுமொழி

 13. கோவை கவி
  பிப் 02, 2013 @ 09:25:39

  கருத்திடலிற்கு மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி. காயத்ரி வைத்தியநாதன்.
  ஆண்டவன் ஆசி நிறையட்டும.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: