42. கவிதை பாருங்கள்(photo,poem)

hand paper--øø

கருத்திட

கருத்திட புகழ்ந்தொரு ஓகோவும்

விருப்புடை வாழ்த்தும் ஆகாவும்

ஓரு நோகாத வரியும்

பெரு விருப்பாகத் தேவைப்படும்.

உள்ளதெழுதக் கூடாது! ஷ்!…மூச்!

முள்ளாகக் குத்தும் அழிக்கப்படும்!

வெள்ளமாக நீண்ட விளக்கமும்

அள்ளித் தரப்படும் புகழுலகில்.

saalvai-2[1]

ஆக்கம் வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-1-2013

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. angelin
  ஜன 07, 2013 @ 22:00:27

  இரண்டு தலைப்பில் எழுதியுள்ள கவிதைகள் மிக அருமை
  அதுவும் பணிவு அந்த கவிதைக்கு ஏற்ற மென்மையான வண்ணத்து பூச்சி மற்றும் மலர்களுடன் மிக அருமை
  அந்த படத்தை அப்படியே சேமிக்கிறேன் பின்னாளில் காகிதத்தில் உரு கொடுக்க :))

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 07, 2013 @ 22:06:43

   மிக்க நன்றி ஏஞ்சலின்.
   முதலாவது நானே கீறி வண்ணம் தீட்டியது.
   இரண்டாவது ஓரு மலையாள முகநூல் பக்கத்தில் சுட்டது.
   ஆனால் அதை என்னாலும் கீற முடியும்.
   இந்த வேலைகளை நான் மிக நேசிப்பேன்.
   செய்வதிலும் மிக மிக விருப்பம்.
   முகநூலில் சில ஏற்றியும் உள்ளேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. மகேந்திரன்
  ஜன 07, 2013 @ 23:50:45

  வணக்கம் வேதாம்மா…
  கருத்திடலின் நிதர்சனத்தை மிக அழகாக
  சொல்லி இருக்கிறீர்கள்…
  பணிவுடன் கொண்ட துணிவு
  என்றும் குனிவைத் தராது
  என்ற வார்த்தைகள் கருத்தில் கொள்ளவேண்டிய பாடம்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 10, 2013 @ 16:58:26

   ”..பணிவுடன் கொண்ட துணிவு
   என்றும் குனிவைத் தராது
   என்ற வார்த்தைகள் கருத்தில் கொள்ளவேண்டிய பாடம்..”

   மிக்க நன்றியும் மகிழ்வும் மகேந்திரன்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 3. கவியாழி கண்ணதாசன்
  ஜன 08, 2013 @ 01:14:48

  இரண்டுமே அருமை புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. Ganesh.b
  ஜன 08, 2013 @ 04:42:54

  இரண்டு கவிதைகளுமே நன்றாகத் தான் இருக்கிறன்றன. ஆனால் முதல் கவிதை அதன் படத்துடன் சேர்ந்து படிக்கையில் வெகு அழகு. சற்றே இடைவெளிக்குப் பின் கவிதை பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். மிக்க நன்றி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 10, 2013 @ 17:01:35

   நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தங்கள் வரவு.
   மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரா.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 5. ranjani135
  ஜன 08, 2013 @ 07:15:45

  கவிதையில் மட்டுமல்லாது, ஓவியம் வரைவதிலும் நீங்கள் வல்லவரா? ஒரு பன்முகக்கலைஞர் அறிமுகம் ஆனதில் மிகவும் சந்தோஷம்.

  உள்ளதெழுதக் கூடாது..உஷ்..மூச்! – மிகவும் ரசித்தேன்.
  பணிவும், துணிவும் என்றைக்குமே குனிவை தராது – நல்லதொரு சிந்தனை!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 10, 2013 @ 17:04:06

   சகோதரி தையல் ஓவியம் போன்று இன்னும் சில முகநூலில் சில போட்டுள்ளென்.
   மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரி தங்கள் கருத்திåற்கு..
   இறை அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 6. sasikala
  ஜன 08, 2013 @ 16:23:52

  இரண்டு கவிதைகளும் படமும் அழகு. பணிவு பற்றிய புரிதல் சிறப்பு.

  மறுமொழி

 7. ARUNA SELVAME
  ஜன 08, 2013 @ 17:26:10

  இரண்டு கவிதைகளும் அருமைங்க கோவைக்கவி.

  மறுமொழி

 8. seeralan
  ஜன 08, 2013 @ 18:21:07

  அருமை அதனிலும் என்னை கவர்ந்தது இதுதான்

  துணிவு மனிதனுக்குத் தேவைதான்
  தணிவு கொண்ட குணமது
  பணிவொரு வனையில் ஏணிதான்
  குனிவு என்றைக்குமே தராது..!

  அருமை வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 10, 2013 @ 17:07:12

   ”..துணிவு மனிதனுக்குத் தேவைதான்
   தணிவு கொண்ட குணமது
   பணிவொரு வனையில் ஏணிதான்
   குனிவு என்றைக்குமே தராது..! ..”

   மிக்க நன்றியும் மகிழ்வும் Seeralan தங்கள் கருத்திåற்கு..
   இறை அருள் நிறையட்டும்

   மறுமொழி

 9. seeralan
  ஜன 08, 2013 @ 18:22:23

  துணிவு மனிதனுக்குத் தேவைதான்
  தணிவு கொண்ட குணமது
  பணிவொரு வனையில் ஏணிதான்
  குனிவு என்றைக்குமே தராது..! அருமை வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. விச்சு
  ஜன 08, 2013 @ 23:08:44

  இரண்டுமே அருமைதான்..

  மறுமொழி

 11. sivakaami
  ஜன 09, 2013 @ 07:58:02

  கவிதையுடன் கைவேலையிலும் சிறந்து விளங்குரீங்க. வாழ்த்துக்கள்.
  இரண்டுமே நல்லா இருக்குங்க.

  மறுமொழி

 12. RAMVI
  ஜன 09, 2013 @ 08:04:50

  இரண்டு கவிதைகளுமே அருமை,வேதா.
  மனிதனுக்கு துணிவு மட்டுமில்லை பணிவும் தேவை என சொல்லியிருப்பது மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 13. Dr.M.K.Muruganandan
  ஜன 09, 2013 @ 09:50:28

  உண்மைதான்
  ஆனால்
  பாராட்டில் மகிழாத மனிதரில்லை
  சுடு சொல்லால் நோகாத மனதில்லை.

  இருந்தாலும்
  போலியான புகழ் வார்த்தையில்
  முழ்கித் திணறி
  நான் எனும் ஆணவக்
  கழுமரத்தில் ஏறுகின்றனர்
  எது நடக்கும் எனப் புரியாமல்.

  மறுமொழி

 14. T.N.MURALIDHARAN
  ஜன 09, 2013 @ 14:24:27

  படங்களும் கவிதைகளாய் மின்னுகின்றன

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: