14. ஆறுமுகநாவலர்.

aarumuganaavalar

ஆறுமுகநாவலர்.

நல்லூரிலுதித்த வல்லவர் ஆறுமுகநாவலர்

ஒல்லாங்குடன் பன்னிரண்டு வயதில் புலமைத்துவ

உல்லாகனானார் தமிழ் சமஸ்கிருதம் பயின்று.

உல்லாச இருபதில் ஆங்கிலமும் பயின்று

கல்லூரியாசானானார் யாழ் மத்திய கல்லூரியில்.

வைத்தீஸ்வரன் கோயில் வண்ணார்பண்ணையில்

சைவம் வளர்க்க வெள்ளிக்கிழமைப் பிரசங்கியானார்.

சைவ விழிப்புணர்வைப் பிரசங்கத்தால் ஊட்டினார்.

சைவத்தமிழ் பண்பாட்டிற்கு இசைவான கல்வி,

சைவசமயம், தமிழ்வளர்ச்சி இவர் நோக்கப்பணியானது.

சைவப்பிரகாச வித்தியாசாலையை வண்ணார்பண்ணையில் நிறுவினார்.

சைவம் வளர்ப்பதற்கு 1848ல் ஆசிரியப்பதவியையும் துறந்தார்.

சைவப்பிரசங்கம்  திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆற்றினார்.

கை  வந்தது  புலமையால்  நாவலர் பட்டம்.

சைவப்பாடநூல்களச்சிட இந்தியாவில் அச்சுயந்திரம் வாங்கினார்.

உத்தம நூல்களச்சிட  இலங்கை இந்தியாவில்

வித்தியானுபாலன இயந்திரசாலை அச்சகம் நிறுவினார்.

1870ல் கோப்பாயில் ஆண்கள் பாடசாலை நிறுவினார்.

என்அப்பப்பா நிறுவிய பெண்கள்பாடசாலையோடிணைந்து

இயங்குகிறதின்று. பயனுள்ள பல நூல்களெழுதிப் பதிப்பித்தார்.

மதுரை மீனாட்சி பரிவட்டப் பூமாலையணிந்தும்

குன்றக்குடியில் பிரசங்கத்தால் பல்லக்கிலேற்றியும் கௌரவித்தனர்.

1879ல் வண்ணார்பண்ணையில் ஆடிச்சுவாதியன்று இறுதிப்பிரசங்கம்.

கந்தப்பு சிவகாமிப்பிள்ளையின் கடைசி(ஆறாவது) மகன்.

1822 மார்கழி18ல் பிறந்து 1879 மார்கழி  5 லிறைபதமடைந்தார்.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

9-1-2013.

(ஒல்லாங்கு – பொருந்தும் வழியில்.
உல்லாகன் – திறமையாளன்.)

OLYMPUS DIGITAL CAMERA

அந்த நாவலர் பாடசாலை இன்று ..(பல மாற்றங்கள்)

                                            sunburst

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. b.ganesh
  ஜன 10, 2013 @ 00:05:53

  உண்மையி் இந்தச் சான்றோரின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, மற்ற விபரங்கள் எதுவும் அறிந்திலேன் வேதாம்மா. இப்போது உங்கள் வண்ணத் தமிழில் படித்து அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 10, 2013 @ 22:12:26

   நான் எல்லாம் எழுதவில்லை இங்கு சிறு தொகுப்பே எழுதியுள்ளேன். சிறீலசிறீ என்கிற பட்டமும் இந்தியாலில் கிடைத்தது. அவமரியாதைகளும் கிடைத்தது. கௌரவம் கிடைத்தது போல.
   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றியும், மகிழ்வும். ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 2. kavi kumar
  ஜன 10, 2013 @ 02:03:45

  இவரை பற்றிய இன்னும் ஒரு தகவல் பைபிளை முதல் முதலில் தமிழில் மொழி மாற்றம் செய்த தமிழன் நாவலர் ஐயா தான்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 10, 2013 @ 22:24:36

   சகோதரா நான் வாசித்த இடத்தில் ” இவரது 20தாவது வயதில் அன்றைய மெதடிஸ்ட் ஆங்கிலப் பாடசாலையில்(இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி)ஆசிரியராகப் பதவியேற்ற நாவலர், அப் பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த போசிவல் பாதிரியார் கிறிஸ்தவ வேதாகமத்தைத் தமிழில் மொழிபெயர்க்க உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியாருடன் சென்னைப் பட்டினம் சென்று அச்சிடுவித்துக் கொண்ட யாழ்ப்பாணம் திரும்பினார் – என்றே இருந்தது.
   தங்கள் வரவு கருத்திற்கு மிக்க நன்றி .இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  ஜன 10, 2013 @ 02:05:18

  தமிழறிஞர் ஆறுமுக நாவலர் அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.வள்ளலாரின் அருட்பாவுக்கு எதிராக மருட்பா எழுதியதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். சரியா?

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 10, 2013 @ 22:31:36

   முரளி தங்கள் தகவல் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் விபரமாக இங்க தரவும்.
   கருத்திடலிற்கு மிக மகிழ்வும், நன்றியும்.ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 4. ranjani135
  ஜன 10, 2013 @ 08:23:18

  பள்ளியில் இந்த மூதறிஞரைப் பற்றி சிறிதளவு படித்திருக்கிறேன். இப்போது உங்கள் இன்தமிழ் கவிதை மூலம் நிறைய தகவல்கள் அறிந்தேன்.

  நன்றி சகோதரி!

  மறுமொழி

 5. Dr.M.K.Muruganandan
  ஜன 10, 2013 @ 09:31:11

  எனது ஆரம்பப் பாடசாலையான மேலைப்புலோலி சைப்பிரகாச வித்தியாலயமும் அவரது ஆதரவுடன் ஸ்தாபித்ததுதான்.உங்கள் தகவல்களுக்கு நன்றி.
  http://msvoldpupilsforum.blogspot.com/

  மறுமொழி

 6. Maniraj
  ஜன 10, 2013 @ 11:42:56

  நல்லூரிலுதித்த வல்லவர் ஆறுமுகநாவலர் பற்றிய அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 10, 2013 @ 19:17:09

  In FB:-
  Yasotha:- அருமை அக்கா

  Eswar Sivakrishnan நன்னூலுக்கு காண்டிகை உரை செய்தவர் நான் கற்ற இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் முதல் இலக்கணநூல். அதற்குப்பிறகே தொல்காப்பியம்…..

  Vetha ELangathilakam ஆம் சகோதரா இன்னும் நிறைய தகவல்கள் நல்லதும் கூடாததும் உண்டு நான் ஓரு சிறு தொகுப்பே எழுதினேன். இதனாலேயே பல நூல்கள் எழுதினார் என்று போட்டேன் எக்கச்சக்கமாக எழுதியுள்ளார். கருத்திற்கு மிக்க நன்றி.

  Vetha ELangathilakam நன்றி. Yasotha..

  Vishnu Rajan நல்ல பகிர்வு ..சகோ .

  Vetha:- Thank you vbishnu…

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 11, 2013 @ 07:30:07

  through e mail: – ….
  மணக்கும் தமிழில் ஓரு தமிழ அறிஞா
  பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.
  பகிர்விற்கு நன்றி.
  HAPPY PONGAL
  –SRAVANI

  மறுமொழி

 9. sujatha anton
  ஜன 11, 2013 @ 19:37:21

  ஆறுமுக நாவலரின் தகவல்கள் அனைத்தையும் தொகுத்து பரிமாறிய விடயம் அளப்பரியது. உங்கள் தமிழின் ஆர்வப்பணி வளர்க!!!! வாழ்த்துக்கள்.!!!

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 22, 2019 @ 18:51:44

  2013 year comments:-

  Seeralan Vee pakirvukku nanri paarkiren ellaam

  சங்கரன் ஜி :- அறுமையான பதிவு, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் சைவத்திற்க்கு ஆற்றிய தொண்டு ஏராளம் !!!

  Kalaimahel Hidaya Risvi சைவத்தமிழ் பண்பாட்டிற்கு இசைவான கல்வி,
  சைவசமயம், தமிழ்வளர்ச்சி இவர் நோக்கப்பணியானது…
  3
  Delete or hide this
  Like
  · Reply · See Translation · 6y
  சிறீ சிறீஸ்கந்தராசா
  சிறீ சிறீஸ்கந்தராசா:- இவரைத் தேடித் திரிகிறேன் சிக்க மாட்டேன்.. என்கிறார்… இவரின் இலக்கணச்சுருக்கம்.. நன்னூல காண்டிகை வேணும்.. யாரவது வழிகாட்டுங்கள்.. மிகவும் நன்றி!! வாழ்த்துக்கள் அம்மா!!

  சுந்தரகுமார் கனகசுந்தரம் :- இவர்தான் யாழ்பாணத்தில் சாதிகளை வளர்த்தவர்? ஹஹஹஹஹஹா……………….எத்தனை சாதிகள்? ஹஹஹஹா…………….

  Verona Sharmila :- சைவசமயம், தமிழ்வளர்ச்சி என்பவற்றுக்கு இவர் ஆற்றிய பணியானது அளப்பரியது..அருமையான பலர் பயன் பெறக்கூடிய விதத்தில் அமைந்த பதிவு.!
  சுந்தரகுமார் கனகசுந்தரம் சாதிகளும் வளர்கிறது? ஹஹஹஹஹஹா…………………….

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- நல்ல பதிவு. ஏற்கனவே உங்கள் புளக்கில் படித்தேன்.

  Loganadan Ps :- நன்றி. நல்ல பகிர்வு

  Ponnaiah Periyasamy :- நல்ல பதிவுக்கு நன்றி சகோ ….

  Vetha Langathilakam :- இன்னும் நிறைய தகவல்கள் நல்லதும் கூடாததும் உண்டு நான் ஓரு சிறு தொகுப்பே எழுதினேன். இதனாலேயே பல நூல்கள் எழுதினார் என்று போட்டேன் எக்கச்சக்கமாக எழுதியுள்ளார். .கிரி காசன் அருமையான பதிவு . இவரின் நூல்கள் கிடைக்குமிடம்
  http://http://www.noolaham.org
  Delete or hide this
  NOOLAHAM.ORG
  நூலகம்
  நூலகம்

  Ramadhas Muthuswamy :- மிகவும் அருமையான பதிவு! ….. ஆறுமுக நாவலர், போப்பாண்டவர் இருவரும் தமிழன்னைக்கு மிகப் பெரிய தொண்டு செய்துள்ளார்கள். நாவலர், பைபிளை முதன்முதலில் தமிழாக்கம் செய்துள்ளார். …… “ஆறுமுக நாவலர் பைபிள் தமிழாக்கம்
  நூறுமுக போப்பையர் வாசகமும் – பேறுபலப்
  பெற்றோம் பெருமையுடன் நற்றமிழ் மேம்படவே
  கற்றோம் கனிவுடனே காண்!” நன்றி.

  Muthulingam Kandiah :- தமிழும் சைவமும் வளர்த்த நாவலர்..,சமுதாயம் என்றும் விரும்பாத சாதித்துவ தன்மையை வளர்க்க காரணம் யாது.இன்றும் அதிக மான தமிழ் அறிஞர்கள் இவரின் தமிழ் ,சைவத்தொண்டை பெரிதாக மதிக்காமல் போனதற்கு இது ஒரு பெரும் விழுக்காடாக அமைந்துள்ளது..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: