6. பல்லு (கொழுக்கட்டை)

Kolukkadai 104

பல்லு (கொழுக்கட்டை)

 

பல்லு! பல்லு! வெற்றிக்கு

பல்லு முளைத்ததற்காய் வழமைக்கு

பல்லுக் கொழுக்கட்டை செய்தோம்.

எல்லாம் தலையில் கொட்ட

செல்லம் ஒன்றைப் பற்றி

பல்லிற்குப் பதமாகக் கடித்தார்.

 

இரண்டாவதாகப் பணத்தைப் பற்றினார்.

மூன்றாவதாக மோதிரம் எடுத்தார்.

ஓன்றாய் கூடி மகிழ்ந்தோம்.

நன்றாய் வெற்றியும் மகிழ்ந்தார்.

அன்றைய திருநாள் இனிது.

என்றும் மறக்காத நாளது.

 

பல்லு! பல்லு! மனிதப்

பல்லு! பல்லு இல்லாவிடில்

சொல்லு நல்ல தெளிவில்லை.

பல்லு வெள்ளைக் கல்லு.

கல்லு முரசுள்ளால் வரும்

பல்லு கல்சியம் தாதுக் கலவை.

 

குருமணல், சாம்பல் கொண்டாம்

ஒரு நான்காயிரம் ஆண்டிற்கு முன்னராம்

இந்தியர் பல் துலக்க ஆரம்பித்தாராம்.

புத்தர் காலத்தில் வேப்பங்குச்சியாம்.

எகிப்தியர் காலத்தில் பற்பொடியாம்.

பற்பசை 1892ல் பிரித்தானியாவில் வந்ததாம்.

 

பெரிய பிரித்தானியப் பல் வைத்தியர்

Washington Went worth Sheffield

பற்பசையை 1892ல் கண்டு பிடித்தார்.

பல்லுக் குறுதி ஆலும் வேலும்.

பல்லில்லாதவன் சொல்லில்லாதவன்.

பல்லுப் போக சொல்லுப் போகும்.   

       (பழைய மொழிகள்)

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

11-1-2013.

 

Kolukkadai 111

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. angelin
  ஜன 11, 2013 @ 22:52:49

  எங்க வீட்டில் அண்ணன் மகனுக்கு பல் கொழுக்கட்டை செய்தாங்க பல வருட முன் அது சிறிதாக உருண்டையா இருந்தது அப்ப குடை விரித்து அதன் மேல் கொட்டினாங்க அத்துடன் சிறு நாணயங்களும் சாக்லேட்சும் கொட்டப்பாட்டது ..நினை வருது இப்போ .

  அக்கா குட்டி செல்லம் ஸ்வீட்டா இருக்கார் .
  பல் /// பல சுவையான தகவல்களுடன் கவிதையாக எழுதியிருக்கீங்க

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 12, 2013 @ 08:45:07

   ஏஞ்சலின் மிக்க நன்றியும், மகிழ்வும். கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.
   முதலில் கொழுக்கட்டை கொட்டினோம். நல்ல ஐடியா குடை பிடித்துக் கொட்டுவது. நாம் மெல்லிய பொலிதீன் பேப்பரை தலை மேலே போட அவர் பயந்து அழுதார்.
   பின்பு பணம் தங்கம், ஆத்திசூடி புத்தகம், பேனா (அவர் அப்பா ஜீப் ஓடுபவர்) ஒரு குட்டி ஜீப், கார் என்று வைத்தோம். நான் இங்கு நல்ல படம் போடவில்லை. முகநூலில் நல்ல படங்கள் உண்டு.

   மறுமொழி

 2. b.ganesh
  ஜன 12, 2013 @ 01:52:15

  பல்லு – வெள்ளைக் கல்லு. மிக ரசித்தேன். வெற்றிக்கு நல்வாழ்த்துகள். படத்துல க்யூட்டா இருக்கார். கவிதையில ரசனையோட பேஸ்ட் கண்டுபிடிப்பு உட்பட சில பொதுஅறிவுத் தகவல்களும் அடங்கியிருக்கறது வெகு சிறப்பு.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 12, 2013 @ 08:58:44

   பல்லு – வெள்ளைக் கல்லு. இதை எழுத மிக யோசித்தேன். ஆயினும் – பல்லு கல்சியம் தாதுக் கலவை. என்று எழுதினால் சரியாகும் என்றே துணிந்து எழுதினேன். ஆக அதில் தவறில்லையென நானே அடித்தக் கூறலாமல்லவா!
   மிக்க நன்றி கருத்திற்கு. இனிய பொங்கல் வாழ்த்து.

   மறுமொழி

 3. Maniraj
  ஜன 12, 2013 @ 03:58:02

  இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  மறுமொழி

 4. mahalakshmivijayan
  ஜன 12, 2013 @ 04:52:28

  பல் முளைத்தால் பல் கொழுக்கட்டை செய்வார்கள் என்பது நீங்கள் சொல்லி தான் தெரியும் சகோதரி 🙂 உங்கள் குடும்பத்தினருக்கு எனது எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  இங்கு கருத்திட்டவைகளை வாசித்தால் புரியும் தங்களிற்கு.
  மிக்க நன்றி சகோதரி கருத்திடலிற்கு.
  இனிய பொங்கல் வாழ்த்து.

  மறுமொழி

 5. கோமதிஅரசு
  ஜன 12, 2013 @ 11:09:08

  வெற்றிக்கு வாழ்த்துக்கள். பல் முளைத்து விட்டதா!
  பல் பற்றிய தகவல்கள் அருமை.
  இனிய மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும்.

  மறுமொழி

 6. kuttan
  ஜன 12, 2013 @ 11:20:23

  பல் கொழுக்கட்டையா?!ஓகோ!குறில் நெடிலானால்?பால் கொழுக்கட்டை!
  கரும்பான பொங்கள் வாழ்த்துகள்1

  மறுமொழி

 7. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஜன 13, 2013 @ 02:32:34

  வணக்கம்!

  பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
  எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 16, 2013 @ 20:05:59

   மிக்க நன்றி ஆசிரியரே வாழ்த்திற்கு.
   நானும் தங்கள் வலைக்கு வந்து வாழ்த்தியுள்ளேன் என்று நினைக்கிறேன்.
   ஆயினும் இனிய பொங்கல் வாழ்த்து.

   மறுமொழி

 8. மகேந்திரன்
  ஜன 13, 2013 @ 03:30:06

  குட்டிப்பையன் அழகோ அழகு அம்மா…
  திருஷ்டி சுத்திப் போடுங்கள்…

  மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  ஜன 13, 2013 @ 15:23:04

  “குருமணல், சாம்பல் கொண்டாம்
  ஒரு நான்காயிரம் ஆண்டிற்கு முன்னராம்
  இந்தியர் பல் துலக்க ஆரம்பித்தாராம்.
  புத்தர் காலத்தில் வேப்பங்குச்சியாம்.
  எகிப்தியர் காலத்தில் பற்பொடியாம். ..”
  நல்ல கவிதையோடு நல்ல தகவல்களும் அருமை.

  மறுமொழி

 10. ranjani135
  ஜன 21, 2013 @ 07:28:32

  குட்டிச் செல்வம் வெற்றிக்கு பல்லு முளைத்ததற்கு,
  பாட்டி செய்த பல்லு கொழுக்கட்டையை சாப்பிட்டதற்கு,
  ஏட்டில் அதை கவிதையாக்கிப் போட்டதற்கு
  வாழ்த்துகள்.

  செல்வன் சீரும் சிறப்புமாக வாழ இந்தப் பாட்டியின் மனம் நிறைந்த ஆசிகள்!

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 22, 2019 @ 19:28:03

  2013 year comments:-

  சங்கரன் ஜி :- அருமை

  சங்கரன் ஜி :- பல்லு போனால் சொல்லு போச்சு

  சுந்தரகுமார் கனகசுந்தரம் :-
  SUPERrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  Seeralan Vee:- பல்லுக் குறுதி ஆலும் வேலும்.
  பல்லில்லாதவன் சொல்லில்லாதவன்.
  பல்லுப் போக சொல்லுப் போகும்.
  (பழைய மொழிகள்)

  Nalayiny Thamarachselvan :- oo ko!!

  Verona Sharmila :- அருமை..

  சிறீ சிறீஸ்கந்தராசா :- வெற்றிக்கு மேலும் பல வெற்றிகள் கிட்டட்டும்!! வாழ்த்துக்கள்!!
  Sujatha Anton :- பற்கள் முளைத்துவிட்டால் சொற்களால் பேச்சில் முளைத்திடுவார்
  எங்கள் ”குட்டிப்பையன்”.

  Aruldurai Vanniyar:- nice
  3

  Aangarai Bairavi:- Kutty bayyen sorkkalin ulagaththil nuzhagiraan. Ini ungalukkana sorkkal avanidam irundhum kidaikkalaam.vazhthukkal.

  Loganadan Ps:- நன்றாக இருக்கிறது. நன்றி

  Kalaimahel Hidaya Risvi :- அருமை..வாழ்த்துக்கள்!!ஆலும் வேலும்.பல்லுக் குறுதி .

  Mari Muthu :- வெற்றி..பல்லு கொழுக்கட்டை மாமாவுக்கு கொடுக்கலை.
  Ramadhas Muthuswamy:_ // குருமணல், சாம்பல் கொண்டாம்
  ஒரு நான்காயிரம் ஆண்டிற்கு முன்னராம்
  இந்தியர் பல் துலக்க ஆரம்பித்தாராம்.
  புத்தர் காலத்தில் வேப்பங்குச்சியாம்.
  எகிப்தியர் காலத்தில் பற்பொடியாம்.
  பற்பசை 1892ல் பிரித்தானியாவில் வந்ததாம்//
  ….. மிகவும் அருமை!!!

  Viji Mohan :- arumai

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: