2. எனது கற்பனைக் கைவேலை.

 13-januwary 002

எனது கற்பனைக் கைவேலை.

இந்தப் படத்தில் உள்ள தங்க முலாம் பூசிய கழுத்து மாலையை மலிவு விலையில் வாங்கிய போது அதில் தொங்கும் பென்ரன் தங்கத்தில் நடுவில் வெள்ளிக் கல்லு வைத்திருந்தது. எனக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் போட்டு வந்தேன்.

வேலைக்குப் போகும் போது தங்க அணிகள் பாவிப்பதில்லை. படத்தில் அருகில் உள்ள தோடு,  மேலே உடைந்த போது கவலையாக இருந்தது. கீழே தொங்கும் வளையமும், கல்லுத் தூக்கணமும் எனக்கு மிகவும் பிடித்தது.

அதை எடுத்து வீசாமல் இந்தப் பென்ரனோடு இணைத்து  விட்டேன்.

மணிமாலைகள் செய்ய மெல்லிய கம்பிகள் அதற்குரிய குறடு போன்ற உபகரணங்கள் என்னிடம் உள்ளது. வெள்ளிக் கல்லுகள் உள்ளதால் வெள்ளிக்கம்பி பாவித்து  வளையத்தை மாலைப் பென்ரனோடு இணைத்தேன் மிக அழகாக உள்ளதாக எனக்குப் படுகிறது.  நீங்களும் பாருங்கள்.

13-januwary 004

தோடு உடைந்துவிட்டது என வீசியிருந்தால் இப்படி ஓரு  பென்ரனை உருவாக்கியிருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

அடுத்து வருவது மலேசியாவில் வாங்கிய வெள்ளியாலான சிறு சங்கிலி ஒன்று.  இதற்கு பென்ரன் இல்லை. 

அது சின்னச் சின்னக் குண்டாகவும் நீண்ட குச்சியாகவும் உள்ள செயின். ” பிடிக்காவிடில் வீசிடு! ” என்பார் இவர்.

எனக்கு எதுவும் வீச மனம் வராது.

இளம் பெண்கள் சும்மாவும் அணிவார்கள்.
சமீபத்தில் இரண்டு அழகிய பென்ரனாகப் பாவிக்கக் கூடிய உருவங்கள் அகப்பட்டது.
என்ன செய்யலாம் என சிந்தித்த போது,  இரண்டையும் இணைத்து ஓரு பென்ரனாக்கி அந்த வெள்ளிச் செயினுக்குப் பாவித்தேன்.

13-januwary 005

அழகாகத் தெரிகிறது.

மிகப் பிடித்தும் உள்ளது.

ஆடைகளிற்கு ஏற்றபடி அணியலாமன்றோ!

இவை என் ரசனை.

நீங்களும் பாருங்களேன்!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஒகஸ், டென்மார்க்.
15-1-2013

sunset

 

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Maniraj
  ஜன 16, 2013 @ 02:48:20

  அழகாகத் தெரிகிறது. தங்கள் ரசனை ..

  நானும் இப்படித்தான் எதையாவது செய்து கொண்டிருப்பேன் ..’

  தங்கத்தைத்தவிர வேறு அணிந்ததில்லை ..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 16, 2013 @ 22:12:58

   மகிழ்ச்சி சகோதரி என்னைப் போல நீங்களும் பைத்தியம் என்று.
   கருத்திற்கு மிக நன்றி. ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 2. கோவை கவி
  ஜன 16, 2013 @ 07:11:19

  Through Email SRAVANI:-

  அழகு மிகுந்த ரசனை மங்கையரின் மனம் கவருகிறது !

  நல்ல யோசனைகள் , யுக்திகள் !

  மறுமொழி

 3. venkat
  ஜன 16, 2013 @ 13:34:23

  அழகாகத் தான் இருக்கின்றது… உங்கள் ரசனையும் தான்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 16, 2013 @ 22:15:56

   அப்பாடா ஒருபடியாக வந்திட்டீர்களா? எத்தனை தடவை கருத்திட வந்திருப்பேன் உங்கள் பக்கம்.!
   மிக்க நன்றி.
   இறையருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 4. கோமதிஅரசு
  ஜன 16, 2013 @ 13:41:32

  அழகாய் செய்து விட்டீர்கள் மாலை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. satha
  ஜன 16, 2013 @ 14:05:33

  Wow! Its very nice. Your imagination & creation superb!

  மறுமொழி

 6. இளம் பரிதியன்
  ஜன 16, 2013 @ 15:36:16

  அழகிய கலை உணர்வு ……… அருமை …. வாழ்த்துகள் …

  மறுமொழி

 7. Mrs.Mano Saminathan
  ஜன 17, 2013 @ 04:21:25

  உங்களின் வலைப்பூவினை வலச்சரத்தில் இன்று அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை ம‌கிழ்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
  http://blogintamil.blogspot.com/
  .

  மறுமொழி

 8. விச்சு
  ஜன 17, 2013 @ 13:33:24

  ஏற்கனவே முகநூலில் பார்த்துவிட்டேன்.. அருமையாக இருக்கிறது தங்களின் கைவண்ணம். தங்கத்துல செஞ்சு அனுப்புங்க…

  மறுமொழி

 9. பழனிவேல்
  ஜன 22, 2013 @ 07:20:00

  அழகு மிகுந்த ரசனை.
  அதிலும் தங்கள் சமயோகித யுக்தி அருமை.

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 23, 2019 @ 10:36:01

  2013 year comments:-
  Mari Muthu :- அழகான வேலைப்பாடு…

  Seeni Shaah:- sako!
  paarthen !…nalla thiran ungalidam..!
  vaazhthukkal!

  Nalayiny Thamarachselvan :- MM!!

  சிறீ சிறீஸ்கந்தராசா :- வாழ்த்துக்கள்!! தொழிலை மாற்றிவிட்டீர்கள் போலிருக்கிறது..

  Kalaimahel Hidaya Risvi :- அருமையான பகிர்விற்கு நன்றி ..

  Grastley Jeya :- அழகான வேலைப்பாடு…

  Aathi Parthipan :- அழக அருமையாக இருக்கு

  Seeralan Vee :- பழைமையில் புதிய உருவாக்கம் தங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்

  Naguleswarar Satha:-
  Wow Its very nice. Your Imagination & creation Superb!

  Vetha Langathilakam :- ஒரே வேரிலிருந்து வந்தோம் உன்னிடமும் இவைகள் இருக்கிறது சதா. நாங்கள் ஒன்றாகச் செய்தவைகள் தானே முன்பு.!!!!…

  Vetha Langathilakam:- @ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா- கண் காணக் கை வினையும்
  வண்ணத் திறன் வரமுடையவர் அண்டத்தில் எண்ணிலர் இலைமறையாய் ஊடாடுகிறார்.
  எண்ணாப்பின்றித் தன் தேவை முடிப்பர்.
  மண்டூகமாய் யார் பிறப்பும் இல்லை.
  ஓண்டுதலின்றி சனனம் முதல் முயற்சி
  திண்மையாய், கண்ணியமாய் தன் வழியேகுவார்.
  தொண்டாகவும் தன் திறமை காட்டுவார். (எண்ணாப்பு – இறுமாப்பு.
  ஒண்டுதல் -பதுங்குதல். மண்டூகம் – மூடன்.)

  Vetha Langathilakam Naguleswarar Satha, Pushpalatha Kanthasamy, Tharsini Kanagasabai and 2 others like this..
  Rajaji Rajagopalan :- இது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கவனத்தில் எடுக்கவேண்டிய பதிவு. நல்ல முயற்சியும்கூட. தொடர்ந்து இப்படியான செய்திகளைப் பகிருங்கள். நீங்கள் Facebook இன் Notes ஐ பயன்படுத்தினால் நீண்ட செய்தியையும் பல படங்களையும் ஒருங்கே பதியலாம்.
  Vetha ELangathilakam :- முடியவில்லையே! உன் ஆக்கம் நீண்டது. முகநூல் மௌனிக்கிறது என்று பதில் வருகிறது. விண்டோஸ்8 புதுக்கணனி.
  Rajaji Rajagopalan :- இந்த 8ஆம் நம்பரே இப்படித்தான் என்று என் நண்பி சொல்கிறா. விசாரித்தபின் இதுபற்றி அறிவிக்கிறேன்.
  Vetha ELangathilakam:- Thank you. I am waiting..

  Vetha Langathilakam:- (2 others .Lavi langa & N.Ratnavel.9

  Verona Sharmila :- அழகாகத் தெரிகிறது. தங்கள் ரசனை ..
  அழகு மிகுந்த ரசனை ! என் மனம் கவருகிறது !
  நல்ல யுக்தி ! பழமையில் புதுமை காணும் முயற்சி …

  Loganadan Ps:- நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
  Abira Raj :- அழகு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: