262. கண் காணக் கை வினையும்…

creativity

கண் காணக் கை வினையும்…

கண் காணக் கை வினையும்

              வண்ணத் திறன் வரமுடையோர் அண்டத்தில்

எண்ணிலர் இலைமறையாய் ஊடாடுகிறார்.

              எண்ணாப்பின்றித் தன் தேவை முடிப்பர்.

மண்டூகமாய் யார் பிறப்பும் இல்லை.

               ஒண்டுதலின்றிச் சனனம் முதல் முயற்சி.

திண்மையாய், கண்ணியமாய் தன் வழியேகுவார்

               தொண்டாகவும் தன் திறமை காட்டுவார்.

உணவு சமைப்போன் சுவையாய் சமைத்தலுடன்

               கணக்கற்ற ஆக்க வல்லமை நிறைந்திருப்பான்.

நிணச்செருக்கன்றி மகிழ்ந்து நடமாடுவான்.

               பிணமாக வாழ்வோன் பகுத்தறிவாள னல்லன்.

திறமைகள் கண் டார்வம் மேவலால்

               திறவுகோல் தேடித் திறமாய் பயில்வதும்,

திறமை மரபாலும் பெறும் கொடையெனவும்

               பிறந்து வாழ்ந்து மறைகிறார் மாநிலத்தில்.

(எண்ணாப்பு – இறுமாப்பு.   ஒண்டுதல் – பதுங்குதல். 

மண்டூகம் – மூடன்.  நிணச்செருக்கு – ஆணவம்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

17-1-2013.

bloembord1

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. seeni
  ஜன 17, 2013 @ 23:13:40

  அழகா சொல்லிடீங்க….

  நன்றி சகோ..!

  மறுமொழி

 2. விச்சு
  ஜன 17, 2013 @ 23:47:48

  //மண்டூகமாய் யார் பிறப்பும் இல்லை.// மண்டூ மண்டூன்னு திட்டுவாங்கியிருக்கேன். அருமையான கவி .நிறைய தடவை வாசித்தேன்.

  மறுமொழி

 3. venkat
  ஜன 18, 2013 @ 01:41:19

  நல்ல கவிதை….. பாராட்டுகள்.

  மறுமொழி

 4. Ganesh.b
  ஜன 18, 2013 @ 05:29:14

  வியக்க வைத்த மொழிநடை. அருமையான கருத்துள்ள கவிதை. மிக ரசித்தேன்.

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஜன 18, 2013 @ 11:59:39

  திறமைகள் கண் டார்வம் மேவலால்

  திறவுகோல் தேடித் திறமாய் பயில்வதும், அழகு …

  மறுமொழி

 6. ranjani135
  ஜன 18, 2013 @ 12:25:32

  ஒவ்வொருமுறை உங்கள் கவிதைகளைப் படிக்கும் போதும் உங்களது தமிழ் என்னை கவருகிறது. அதிகம் வழக்கில் இல்லாத சொற்களுக்கு அர்த்தம் கொடுப்பதும் உங்களின் தனி பாணி, சகோதரி.

  யாருமே மூடர்கள் இல்லை; முயற்சி குறைவுதான் – வெகு அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

  பாராட்டுக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 20, 2013 @ 20:30:55

   ”..யாருமே மூடர்கள் இல்லை; முயற்சி குறைவுதான் – வெகு அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்…”

   மிக்க நன்றியும், மகிழ்வும் அடைந்தேன் தங்கள் கருத்தையிட்டு.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 7. sujatha
  ஜன 18, 2013 @ 13:28:32

  உணவு சமைப்போன் சுவையாய் சமைத்தலுடன்

  கணக்கற்ற ஆக்க வல்லமை நிறைந்திருப்பான்.
  கவிநயம் அருமை… கதுத்துடன் கூடிய பொருள்நயம் வாழ்த்துக்கள்!! ”கவிதாயினி வேதா”.

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 19, 2013 @ 07:09:09

  Through email:-

  அனைவரும் எதோ ஓர் விதத்தில் திறமையானவர்களே.
  அருமை.

  SRAVANI.

  மறுமொழி

 9. பழனிவேல்
  ஜன 22, 2013 @ 07:28:18

  ” பிணமாக வாழ்வோன் பகுத்தறிவாள னல்லன்”
  மிக மிக அழகு.
  புதிய,புதிய சொற்களை தங்கள் கவிதை முலம் கற்கிறேன்.
  நன்றி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: