263. கவிஞன் பயணம்.

16831_1279704509903_3667293_n

*

 கவிஞன் பயணம்.

*

(பார்த்துத்தான் நானும்தான் முயற்சித்தேன்)

காதலைத்தான் பாடிடத்தான் தேன்

”பொன் அத்தான்” தலைப்புத்தான்

மாகவிஞன் பாரதிதாசன் வைத்தான்.

”என்னை மணக்கத்தான் பணத்தைத்தான்

குவிக்கத்தான் புறப்பட்டான்” என்றுதான்

தொடர்ந்தான் வரைந்தான் முடித்தான்.

*

”அத்தான்  என்னத்தான்” என்றுதான்

தொடர்ந்தான் கவிஞன் கண்ணதாசன்.

ஊற்றுத்தான் ஓரிடந் தான்

ஊடாடும் விதத்திலும் தான்

ஊராலும் தான் கவி ஊன்

ஊடறுப்புத் தான் வித்தியாசத்தேன்.

*

மானுடன் தன் எண்ணங்களைத்தான்

மாதுரியத்துடன் மாக்கோலமாகத் தான்

மாறுபடத் தான் தூவுகிறான்.

மாலிகனாகத்தான் கவிதை விற்கிறான்.

மாட்சிமையைத்தான், மாசுகளைத்தான்

மாத்திரைக் கோலுடன் வரைகிறான் விமரிசகன்.

*

காகிதப்பூவெனத்தான் மலைத்தேனாகத்தான்

கவித்தேன் பாய்வதன் வித்தியாசத்தீன்.

அவனியழுக்கைத்தான் அழித்திடத்தான்

அஞ்சாக் கவிஞன் அல்லும்பகலுமாய்தான்

அனலாகிறான், காற்றாகிறான்  வரைகிறான்.

அனையன் கவிஞன் பயணம் வெல்லத்தான்.

*

( மாலிகன் -பூவிற்போன்.  மாத்திரைக்கோல் – அளவுகோல்.

அனையன் – அத்தன்மையன்.  மாதுரியத்துடன் – இனிமையுடன்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.  ஓகுஸ், டென்மார்க். 19-1-2013.

Menuhead_sml

Advertisements

29 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 19, 2013 @ 21:55:58

  படம் – 2000 மாம் ஆண்டு வெளியான எனது முதலாவது நூல் அட்டை இது.

  கவி கம்பரின் வரிகள் இது:-

  தோள் கண்டோர் தோளே கண்டார்
  தொடு கழல் கமலம் அன்ன
  தாள் கண்டார் தாளே கண்டார்
  தடக்கை கண்டாரும் அஃதே
  வாள் கொண்ட கண்ணார் யாரே
  வடிவினை முடியக்கண்டார்.
  ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
  உறவு கண்டாரை ஒத்தார்.
  ( இது போலவன்றோ கவிஞர் கண்ணதாசன் வரிகளும்.
  தோள் கண்டேன் தோளே கண்டேன்)

  மறுமொழி

 2. T.N.MURALIDHARAN
  ஜன 20, 2013 @ 00:55:16

  அறியாத வார்த்தைகளை அறிந்து கொண்டேன். கவிதை அழகு
  கண்ணதாசன் அற்புதக் கவிஞன்

  மறுமொழி

 3. b.ganesh
  ஜன 20, 2013 @ 01:22:00

  கவிதைதான் அழகுதான், மிக ரசித்தேன் நான். கம்பர் முற்காலத்தில் வாழ்ந்த வியக்க வைப்பவர் எனில் கண்ணதாசன் சமகாலத்தில் வாழ்ந்த அற்புதக் கவிஞனன்றோ… அவரை ரசிப்பது சற்று அதிகம்தான் எனக்கு. உங்கள் முதல் புத்தகத்தின் அட்டைப்படமும் காணக் கிடைத்தது மிகமிக மகிழ்ச்சி.

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜன 20, 2013 @ 02:40:18

  வணக்கம்
  வேதா, இலங்காதிலகம்

  கவிதைப்படைப்புக்கு கம்பனின் கவி வரிகள் மிக அருமையாக பாமாலை சூடுகிறது அருமையான கவிதை இதைப் போன்று இன்னும் பல நூறு புத்தகங்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 20, 2013 @ 19:31:54

   ரூபன் 3 புத்தகங்கள் வெளி வந்தது. எனது புத்தகங்கள் என்பதை அழுத்தினால் 3 புத்தக மின்னூல் இணைப்பு – காணலாம் அழுத்தி வாசிக்கலாம்.
   மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரா கருத்திடலிற்கு.
   ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 5. venkat
  ஜன 20, 2013 @ 04:07:09

  சில புதிய வார்த்தைகளைத் தெரிந்து கொண்டேன்….

  சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  ஜன 20, 2013 @ 04:17:31

  அஞ்சாக் கவிஞன் அல்லும்பகலுமாய்தான்

  அனலாகிறான், காற்றாகிறான் வரைகிறான்.

  அனையன் கவிஞன் பயணம் வெல்லத்தான்.

  அருமையான கவிதை ..பாராட்டுக்கள்.

  மறுமொழி

 7. sasikala
  ஜன 20, 2013 @ 07:17:15

  அறிய வார்த்தைகள் அடங்கிய கவிதை வரிகள் சிறப்புங்க. அட்டைப்படம் வெகுவாக கவர்ந்தது.

  மறுமொழி

 8. maathevi
  ஜன 20, 2013 @ 12:20:04

  முதலாவது நூல் காணக்கிடைத்தது வாழ்த்துகள்.

  மறுமொழி

 9. sujatha
  ஜன 20, 2013 @ 18:53:36

  மானுடன் தன் எண்ணங்களைத்தான்

  மாதுரியத்துடன் மாக்கோலமாகத் தான்

  மாறுபடத் தான் தூவுகிறான்.

  மாலிகனாகத்தான் கவிதை விற்கிறான்.

  மாட்சிமையைத்தான், மாசுகளைத்தான்

  மாத்திரைக் கோலுடன் வரைகிறான் விமரிசகன்.

  அருமை….அருமை……. கவிதையில் பெண் என்ற அடையாளமாய்
  தங்கள் பணி தொடரட்டும் ”கவிதாயினி வேதா”.

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜன 20, 2013 @ 19:38:04

  நன்றி…நன்றி….மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் Sujatha கருத்திடலிற்கு.
  ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

  மறுமொழி

 11. seeralan
  ஜன 21, 2013 @ 10:53:58

  தமிழ் மலர்கிறதா ,மணக்கிறதா இரண்டுமா பிரித்தறிய முடியா இலக்கண சரம் ஆகா அழகு வரிகள் வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் படைப்புக்கள் வளர ஆன் விகுதி கொண்டே அனைத்து வரிகளையும் முடித்த விதம் தமிழுக்கு சிறப்போ சிறப்பு

  மறுமொழி

 12. ARUNA SELVAME
  ஜன 21, 2013 @ 13:04:19

  நான்கும் அருமையான கவிதைகள் கோவைக்கவி.
  படித்து ரசித்தேன்.
  நன்றி.

  மறுமொழி

 13. rathnavelnatarajan
  ஜன 21, 2013 @ 16:26:19

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 14. கோவை கவி
  ஜன 21, 2013 @ 21:34:55

  மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா கருத்திடலிற்கு.
  ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

  மறுமொழி

 15. velmutharasu
  ஜன 22, 2013 @ 05:59:20

  ini kavignarkalin payanathil inaiyamthaan athigamaai inainthirukkum yenpathai purinthu athanpadi padippukalai padaikireergal en pondravargal padikiromm nandri

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 22, 2013 @ 09:14:30

   அன்பின் சகோதரா வேல் முத்துராசு. மிக மகிழ்வும் சந்தோசமாகவும் உள்ளது கருத்தைப் பார்க்க. தாங்கள் கூறியது முழுதும் சரி.
   தங்கள் வரவிற்கு மிக்க நன்றி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 16. பழனிவேல்
  ஜன 22, 2013 @ 07:38:31

  தங்கள் – “முகவரி தேடும் முகங்கள்”
  மீண்டும்,மீண்டும் வாசித்து-நேசித்தேன்
  தங்கள் பல நூறு புத்தகங்கள் வெளிவரும் என்ற எதிர்பார்புடன் காத்திருப்போரில் நானும் ஒருவன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: