3. கலையும், கற்பனையும்

cross stich

கலையும், கற்பனையும்

பிள்ளைகள் பராமரிப்புப் பற்றி 3 வருடங்கள் டெனிஸ் மொழியில் படித்தேன். 14 வருடங்கள் 3லிருந்து 12 வயதுப் பிள்ளைகளுடன் மாறி மாறி வேலை செய்தேன். (நர்சரியிலும், ஓய்வு நேரப் பாடசாலையிலும்.)

அரிவரி வகுப்பிலிருந்து 3 – 4ம் வகுப்புப் பிள்ளைகள் தம் பாடசாலை முடிய 12.00 – 13.00மணிக்கு வருவார்கள். பின்னர் மாலை 5 மணிவரை தமது பெற்றோர் வீடு வரும் நேரம் வரை நின்று வீடு செல்வார்கள். நர்சரி போலவே இதற்கும் பெற்றோர் பணம் செலுத்த வேண்டும். இதையே பாடசாலை முடிய நடப்பதால் ஓய்வு நேரப் பாடசாலை என்கிறேன்.

இங்கு தமது வீட்டுப் பாடம் செய்வார்கள். கை வேலைகள் போன்ற ஆக்கப் பணிகள் ஓவியம், நிறம் தீட்டுதல், தையல், வெட்டி ஒட்டுதல,  நீச்சல், பந்து விளையாட்டு என்று பல விதமான  நடை பெறும். ஓவ்வொரு பெரியவர்களும் தமக்குப் பிடித்த தலைப்பில் அன்றைய நாளை ஓட்டுவார்கள் – இது எமக்கும் வீட்டு வேலை தான் இன்று என்ன செய்யலாம் என்று.

இதில் நான் பிள்ளைகளுடன் தையலும்  செய்தேன். மேலே உள்ள படம் குறுக்கு வெட்டுத் துணியில்  தைக்கும் ஆரம்பத் தையல். சிலவற்றை கம்பளித் துணியிலும், சுவெட்டர் போன்று பின்னிய ஆடைகளிலும் தைக்க முடியும்.  இதை மாதிரியாகக் காட்டி இந்த வகையும், வேறு வகைகளும் தைப்போம். (பிள்ளைகளிற்குக் காட்டிக் கொடுப்பேன்)

பிள்ளைகள் மிக ஆசையாக குழுவாக அமர்ந்து கேட்டு செய்வார்கள். உபகரணங்கள் பாடசாலையிலே  உள்ளது. (ஊசி, நூல், துணிகள்). இது போல ஒவ்வொரு ஆக்க வேலைகளிற்கும் உரிய உபகரணங்கள் பாடசாலையே கொடுக்கிறது.

இப்படி கலைவினைகள் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் என் பின்னாலேயே   வருவார்கள் ”வேதா இன்று என்ன செய்வது ”  என்று. இது மேலே உள்ள பட விளக்கம்.

sweater 009sweater 026

தனி நிற சுவெட்டர் வாங்கி எனது கை வேலைகளைப் பதிப்பேன். இவை முன் பக்கம் திறந்து பூட்டும் வகை ஆடை. டெனிஸ் மொழியில் காடிகாண் என்று கூறுவோம்.

இங்கு 3 சுவெட்டர் படங்கள்  உண்டு. இதில் முதலாவதிற்கு வெள்ளை, மெல்லிய நீலம், கொஞ்சம் அதிக நீலநிற 3 வரிகள் (மூன்று தடவை) கம்பளி நூல் பாவித்து தைத்துள்ளேன்.

அடுத்து கறுப்பு சுவெட்டருக்கு எல்லா நிறங்களும் கலந்த (மல்டி கலர்) கம்பளி நூலில் சங்கிலித்தையல் போட்டு பின்னர் வெள்ளி நிற கம்பளி நூல் ஒரு வரிக்குக் கொடுத்துள்ளேன். புகைப்படக் கருவி திறமானதல்ல . அதனால் இது தெளிவாகத் தெரியவில்லை.

3வது புகை நிற சுவெட்டருக்கு இப்படிப் போட்டுள்ளேன். ” வி” கட்டுத் தையலை கழுத்தைச் சுற்றியும் தைத்துள்ளேன். அது அப்படியே கீழே வரை வருகிறது. வெள்ளையும் கறுப்பும் கலந்த கம்பளி நூல் மனதைக் கவர்ந்தது, பாவித்தேன்.

sweater 027

தனி நிற காடிகான் விலை குறைய, அதை நான் நிறமாக்குவதும் பிடிக்கும்.

பார்த்து ரசியுங்கள் மெசீன் எம்ராய்டரிப் படங்கள் முக நூலில் உண்டு.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

22-1-2013.

                                                     orange

 

 

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 22, 2013 @ 10:23:49

  படங்களை கிளிக் செய்தால் பெரிதாகப் பார்க்கலாம். நன்றி.

  மறுமொழி

 2. ramani
  ஜன 22, 2013 @ 11:14:02

  அருமையான கைவேலைப்பாடுகள்
  படங்களுடன் பகிர்ந்த விதம் மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  தற்சமயம் ஒரு மாறுதலுக்காக வட இந்திய
  பயணம் மேற்கொண்டுள்ளேன்.தற்போது
  பூனாவில் உள்ளேன்.தங்களின் அன்புடனும்
  அக்கறையுடனும் கூடிய விசாரிப்பு அதிக
  மனமகிழ்ச்சி தருகிறது

  எழுதுவதற்கான சூழல் அமைகிற இடத்தில்
  எழுதிக் கொண்டும் பதிவுகளைப் படித்து
  பின்னூட்டமிட முடிந்த இடங்களில்
  பின்னூட்டமிட்டுக் கொண்டுமுள்ளேன்

  உண்மையில் தங்கள் அன்பு விசாரிப்பு
  அதிக உற்சாகம் தருகிறது.நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 23, 2013 @ 22:17:21

   எப்படி விசாரிக்காமல் இருப்பது!
   இது என் சுபாவம்.
   நல்ல பயணம் அமையட்டும்.
   மிக மகிழ்ச்சி வந்து கருத்திட்டதற்கு.
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 3. seeralan
  ஜன 22, 2013 @ 11:17:28

  காடிகாண் இல் கலைவண்ணம் கண்டாய்….அழகு வாழ்த்துக்கள் சகோ

  மறுமொழி

 4. கோமதிஅரசு
  ஜன 22, 2013 @ 12:28:59

  கைவேலை அழகு.

  மறுமொழி

 5. maathevi
  ஜன 22, 2013 @ 14:40:29

  அழகாக இருக்கின்றது .

  மறுமொழி

 6. T.N.MURALIDHARAN
  ஜன 22, 2013 @ 16:22:25

  சகல கலா வல்லவர்தான் நீங்கள். அருமை

  மறுமொழி

 7. ரெவெரி
  ஜன 23, 2013 @ 13:29:36

  நலமா?

  கைவேலை அழகு…

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 8. ranjani135
  ஜன 25, 2013 @ 12:30:24

  எவ்வளவு அருமையான கலைகள் உங்களிடம் குடிகொண்டுள்ளன!
  என் அம்மா கூட இதைபோல தயார் நிலை ஆடைகளுக்கு தையல் வேலை செய்து மெருகூட்டுவார்.

  கலைப் பொக்கிஷத்தையே உங்களுக்குள் வைத்திருக்கிறீர்கள் சகோதரி!

  பாராட்டுக்கள்!

  மறுமொழி

 9. rathnavelnatarajan
  பிப் 01, 2013 @ 01:13:58

  அருமையான பதிவு.
  நன்றி.

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 23, 2019 @ 10:54:45

  2013 year comments:-

  Seeralan Vee :- காடிகாண் இல் கலைவண்ணம் கண்டாய்….அழகு வாழ்த்துக்கள் சகோ ( in Blog also )

  Vetha Langathilakam :- Thank you seeralan.God bless you all.

  ஞானம் மா :- மிக நன்றாக இருக்கிறது.எனக்கும் இது போன்ற வேலைகளில் மிகுந்த ஆர்வம் உண்டு.உங்கள் கலை ஆர்வம் தொடரட்டும்.தையல் என் முக்கிய பொழுது போக்கு.அதனால் இதைக்கடந்து செல்லமுடியாமல் செய்துவிட்டீர்கள்.

  சங்கரன் ஜி :- அறுமை இனிய வேலைப்பாடு வாழ்க வளமுடன் !!!

  சிறீ சிறீஸ்கந்தராசா:- வாழ்த்துக்கள் அம்மா!!

  Ramadhas Muthuswamy :- மிகவும் அருமையான பதிவு!!! நன்றி அம்மா!!!

  R Thevathi Rajan :- பிரமாதம் திறமையை வளர்த்துக்கொள்ள… வாழ்த்துக்கள்…மென்மேலும்.
  ஆண்டவன் அருளால் புகழெனும் உச்சியை அடைய
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்….

  Vetha Langathilakam :- Ellorukkum mika nanry.

  Abira Raj :- வாழ்த்துக்கள்

  Verona Sharmila :- உங்கள் கலை ஆர்வம் தொடரட்டும்…இனிய வேலைப்பாடு …திறமையை வளர்த்துக்கொள்ள… என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  Vetha Langathilakam :- Thank you all of you.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: