41. மனதில் தேன் கரைக்கும்…

CIMG2727[1]

நன்றிதிருமதி மனோ சாமிநாதன்    (இவரது கண்ணாடிப் பெயின்டிங்)

மனதில் தேன் கரைக்கும்…

 

 

விழி தொடுத்த மொழி களித்தது.

வழி கண்டது எழில் நிறைந்தது.

கொழித்த காதலால் ஏழிசையொலித்தது.

 

புதிதான உணர்வுப் பதிவு அணிவகுப்பு.

பதிலோடு மனம் குதிப்பு, பூரிப்பு.

அதிலொரு ஏமாற்றப் பதிவில்லை இனிப்பு.

 

வார்த்தைகள் தவிப்பின்றி கவி ஆர்த்தது.

கோர்த்த வாக்கியங்கள் தத்தித்தத்தி ஈர்த்தது.

வார்த்த வரிகள் முற்றுப் புள்ளி சேர்த்தது.

 

டல் கூடலிணையாய் நாடும் மையல்

தேடலினம் பெருக்கும் போதைச் சாரல்.

நாடலுன்னத உருவாக்கம் காதல்.

 

சோடி மலர்களாய் ஆடும் இதயம்

கூடிக் கலப்பதால் ஓடும் ஏக்கம்.

நாடும் இன்பம் குளிர் சாரலாய் கூடும்.

 

னித் துளிகளாய் கனிச்சுவையாய்

இனிக்கும் நிகழ்வுகள் தனிச் சிலிர்ப்பாய்

இனி நாமொன்று நீ தனியில்லை.

 

னதில் தேன் கரைக்கும் காதல்

இனிமைகளின் கர்ப்பப்பை, பவளத் தொட்டில்.

உணர்வுகள், புலன்களின் அவசியம் காதல்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

25-1-2013.

 

 

 

 

humming-bird

 

 

Advertisements

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ranjani135
  ஜன 26, 2013 @ 01:33:43

  அழகான ஓவியம்! அதற்கு மெருகூட்டுகிறது உங்கள் எண்ணங்களில் எழுந்த இந்த கவிதை!
  திருமதி மனோ அவர்களின் ஓவிய தலைவனும் தலைவியும் உங்கள் கவிதை மூலம் காவியம் படைத்து இருக்கிறார்கள்.
  பாராட்டுக்கள் சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 26, 2013 @ 11:22:10

   மிக நன்றி சகோரி தங்கள் உடன் வருகைக்கும், கருத்திற்கும்.
   மிக மகிழ்வடைந்தேன்.
   அன்றே வலைச்சரத்தில் எழுதியிருந்தேன் திருமதி மனோவிற்கு படம் சுட்டதாக.
   அது தான் லேட்டாகாமல் பாவிக்க வேணும் என்று இன்றே செய்தேன்.
   சகோதரிக்கும் ஓரு கருத்திட்டு தகவலைக் கொடுத்துள்ளேன்.
   தங்களிற்கு இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. venkat
  ஜன 26, 2013 @ 03:34:27

  ஓவியமும் கவிதையும் மனதை ஈர்த்தது!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 26, 2013 @ 11:31:12

   தங்கள் கருத்து, வருகை யாவும் மிக மகிழ்ச்சி தருகிறது சகோதரா வெங்கட்.
   மிக மிக நன்றி.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. sujatha
  ஜன 26, 2013 @ 06:15:46

  வார்த்தைகள் தவிப்பின்றி கவி ஆர்த்தது.

  கோர்த்த வாக்கியங்கள் தத்தித்தத்தி ஈர்த்தது.

  வார்த்த வரிகள் முற்றுப் புள்ளி சேர்த்தது.
  அருமை….அருமை….. ”கவிதாயினி வேதா” வாழ்த்துக்கள்!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 26, 2013 @ 11:28:51

   மிக மகிழ்ச்சி சுஜாதா கருத்திற்கு. மகிழ்ந்தேன்.
   ஒவ்வொரு தடவையும் மகிழ்வுடன் அனுபவித்துப் பதில் கருத்திட முடிவதில்லை.
   பதிலிட வேண்டும் என்று தயாரானவைகளைப் பதிப்பதுண்டு. காரணம் நேரமின்மை.
   அது தவிர கருத்திட்டவர்கள் மனம் நோகக் கூடாது என்றும்.
   இன்று கொஞ்சம் ஆறுதலாகப் பதிலிடுகிறேன்….. பின்னணியில் இனிய பாடலோடு.
   இறையாசி நிறையட்டும் சுஜாதா..

   மறுமொழி

 4. rajalakshmiparamasivam
  ஜன 26, 2013 @ 10:03:45

  மனோசாமினாதனின் ஓவியமும் உங்கள் கவிதையும் படித்தது ‘பாலுடன் தேன் கலந்தாற் போல் ‘ அத்தனை சுவை.
  அருமையான பதிவு.

  நன்றி பகிர்விற்கு.

  ராஜி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 26, 2013 @ 11:34:39

   ராஜி! தங்கள் முதல் வருகை, கருத்து, மிக மகிழ்ச்சி தருகிறது.
   மிக மிக நன்றி. நானும் வருவேன் கருத்துத் தருவேன்.

   தங்களை ரஞ்சனி அல்லது அனுசிறி பதில்களில் கண்டேன்.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. seeralan
  ஜன 26, 2013 @ 10:39:24

  ///மனதில் தேன் கரைக்கும் காதல்
  இனிமைகளின் கர்ப்பப்பை, பவளத் தொட்டில்.
  உணர்வுகள், புலன்களின் அவசியம் காதல்.// ஆஹா என்ன அழகான கவிதை இனிமைகளின் கர்ப்பப் பை காதல்..இப்படியும் காதல் .வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 26, 2013 @ 11:41:25

   சகோதரா சீராளன்! தங்கள் ரசனையை ரசித்தேன்.
   புலன்களின் அவசியம் எனும் போது விரசம் தட்டுமோ எனும் எண்ணமும் வராமலில்லை,
   ஆயினும் உண்மையும் அது தானே! அதனால் துணிந்து எழுதினேன்.
   மிக்க நன்றி.
   தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 6. Mrs.Mano Saminathan
  ஜன 26, 2013 @ 12:23:06

  என் ஓவியத்திற்கு தங்களின் அழகிய கவிதையால் அருமையான மகுட‌ம் சூட்டி விட்டீர்கள் வேதா! உங்கள் கவிதையால் என் ஓவியம் பெருமை பெற்ற‌து! அன்பு நன்றி உங்களுக்கு!!

  மறுமொழி

 7. Rajarajeswari jaghamani
  ஜன 26, 2013 @ 18:18:06

  இனிய குடியரசு தின வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. அ. வேல்முருகன்
  ஜன 26, 2013 @ 19:30:26

  விழியின் மொழி விளைவிக்கும்
  விதியே காதல் கனிசுவையாகும்

  மறுமொழி

 9. Moorthy
  ஜன 28, 2013 @ 02:15:31

  Nice

  மறுமொழி

 10. பழனிவேல்
  ஜன 28, 2013 @ 04:31:50

  “வார்த்தைகள் தவிப்பின்றி கவி ஆர்த்தது.
  கோர்த்த வாக்கியங்கள் தத்தித்தத்தி ஈர்த்தது.
  வார்த்த வரிகள் முற்றுப் புள்ளி சேர்த்தது.”

  அழகிய, ஆளுமை வரிகள்.
  எத்தனை அழகு.
  நேர்த்தியான நடை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 29, 2013 @ 22:21:25

   தங்கள் கருத்து, வருகை யாவும் மிக மகிழ்ச்சி தருகிறது சகோதரா
   பழனிவேல்
   மிக மிக நன்றி.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 11. kuttan
  ஜன 28, 2013 @ 13:17:53

  அழகான ஓவியத்துக்கு அழகு சேர்க்கும் கவிதை!

  மறுமொழி

 12. rathnavelnatarajan
  ஜன 30, 2013 @ 01:17:39

  அழகு ஓவியம். அருமையான கவிதை. வாழ்த்துகள்.

  மறுமொழி

 13. mahalakshmivijayan
  ஜன 30, 2013 @ 09:51:47

  உங்க கவிதை மிகவும் நன்றாக இருந்தது! ரொம்ப பொறுமையா உட்கார்ந்து படித்தேன்! என்னால் இது போல் ஒரு இரண்டு வரி எழுத முடியுமா என வியந்தேன்! விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் ஓடி விட்டேன் 😀

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 02, 2013 @ 09:35:17

   மிக்க நன்றி தங்கள் இனிய வரவு, கருத்திடலிற்கு. சகோதரி மிக மகிழ்ந்தேன். நிச்சயமாக தங்களால் எழுத முடியும். பயிற்சி…பயிற்சி…முயற்சி
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 14. Ramadhas Muthuswamy
  பிப் 01, 2013 @ 01:50:12

  மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!!!

  “காதல் இலக்கணம் கண்டிடும் போதினில்
  மோதல் வராது மதித்திட – வேதம்
  திலகம் திறந்தார் உறவின் பெருமை
  உலகம் உரிமைக் குணம்!”

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: