16. மனித நேயப் பகிர்வு.

love

T:  5-2-2013

மனித நேயப் பகிர்வு.

பூ சூட்டினார் பெற்றோர்.

பூரிப்பு நீயும் சூட்டினாய்.

பூங்கணையானது வாலிபத்தில்.

பூரண மனித நேயனொருவனிடம்

பூவை மதித்து வாங்கலாம்.

ரும் பொட்டிட்டாள் அம்மா

அரும் குங்குமம் உன்னால்.

பெரும் சொத்தென உன்னையும்

அரும் புதையலாய் என்னையும்

கருதிட மனித நேயம் தேவை.

ன்று கண்ணான பெற்றோர்

பொன் தந்தார். பின்பு

பொன்னால் தாலி. மயங்கலாம்.

கண்ணாக ஒருவரையொருவர்

எண்ணுபவன் துணையமைந்தால்.

தாலி பெற்றால் நினைத்திடு

வேலி இருவருக்கும் அதுவென்று!

கூலியான மனிதநேயப் பகிர்வால்

தாலி ஆலி ஆகாது.

தாலி அடிமை விலங்காகாது!

டுமை அடிமை விலங்கு!

கொடுமை மனிதநேய மிடிமை!

நெடுமையாய் ஒருவரையொருவர்

கொடுமையின்றி மதிக்கும் மனிதம்

நடுகை மனம் தேவை!

ருவரையொருவர் மிதிக்காது

தரும் மனிதநேயப் பகிர்வது

அரும் சுதந்திரப்  பூங்காவது.

பெருமை உலக வாழ்விற்கும்.

திருமண வாழ்வும் கௌரவமாகும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ்,  டென்மார்க்.

28-1-2013.

(ஆலி – தேள்.   பூங்கனை – மன்மதபாணம்.  நெடுமை – பெருமை, ஆழம்.   மிடி – வறுமை.)

bar line

Advertisements

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pkandaswamy
  ஜன 28, 2013 @ 22:33:21

  நல்ல கவிதை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 31, 2013 @ 17:39:00

   மிக்க நன்றி ஐயா வருகைக்கும் கருத்திடலிற்கும்.
   இறையாசி நிறையட்டும்.
   தங்கள் பக்கத்திற்கு என்னால் வரமுடியவில்லை. பக்கம் ஆடுகிறது.

   மறுமொழி

 2. ARUNA SELVAME
  ஜன 29, 2013 @ 00:47:39

  அருமையான ஆக்கம்!

  மறுமொழி

 3. b.ganesh
  ஜன 29, 2013 @ 02:07:10

  மிக ரசி்த்தேன்! நன்று!

  மறுமொழி

 4. கவியாழி கண்ணதாசன்
  ஜன 29, 2013 @ 02:53:22

  அந்தகால அதிசயம் உண்மைதான். சிறபான கவிதை வரிகள்

  மறுமொழி

 5. கோமதிஅரசு
  ஜன 29, 2013 @ 04:12:13

  ஒருவரையொருவர் மிதிக்காது

  தரும் மனிதநேயப் பகிர்வது

  அரும் சுதந்திரப் பூங்காவது.

  பெருமை உலக வாழ்விற்கும்.

  திருமண வாழ்வும் கௌரவமாகும்.//

  அருமையான கவிதை. . கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மதித்து வாழ்தல் அற்புதமான வாழ்க்கை அதை உணர்த்தும் கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 31, 2013 @ 17:44:30

   ”..அருமையான கவிதை. . கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மதித்து வாழ்தல் அற்புதமான வாழ்க்கை அதை உணர்த்தும் கவிதை அருமை.
   வாழ்த்துக்கள்…”

   மிக நன்றி சகோதரி கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 6. seeralan
  ஜன 29, 2013 @ 08:48:15

  // தாலி பெற்றால் நினைத்திடு
  வேலி இருவருக்கும் அதுவென்று!
  கூலியான மனிதநேயப் பகிர்வால்
  தாலி ஆலி ஆகாது.
  தாலி அடிமை விலங்காகாது!
  // தங்கள் மனிதநேயப் பகிர்வு மனதினையும் நிறைத்து செல்கிறது வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 31, 2013 @ 17:45:38

   ”..// தங்கள் மனிதநேயப் பகிர்வு மனதினையும் நிறைத்து செல்கிறது வாழ்த்துக்கள்…”

   மிக நன்றி சகோதரா கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. பழனிவேல்
  ஜன 29, 2013 @ 09:57:39

  “ஒருவரையொருவர் மிதிக்காது
  தரும் மனிதநேயப் பகிர்வது
  அரும் சுதந்திரப் பூங்காவது.
  பெருமை உலக வாழ்விற்கும்.
  திருமண வாழ்வும் கௌரவமாகும்.”

  உண்மை…
  அழகான கவிதை.

  மறுமொழி

 8. jaghamani
  ஜன 29, 2013 @ 10:37:07

  ஒருவரையொருவர் மிதிக்காது

  தரும் மனிதநேயப் பகிர்வது

  அரும் சுதந்திரப் பூங்காவது.

  பெருமை உலக வாழ்விற்கும்.

  திருமண வாழ்வும் கௌரவமாகும்./

  மனம் நிறைக்கும்
  மகத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 31, 2013 @ 17:49:58

   ”..மனம் நிறைக்கும்
   மகத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்….”

   அன்புச் சகோதரியே மிக்க நன்றி கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்

   மறுமொழி

 9. rathnavelnatarajan
  ஜன 30, 2013 @ 01:36:33

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 10. kuttan
  ஜன 31, 2013 @ 13:39:11

  நன்று

  மறுமொழி

 11. Jaleela kamal
  பிப் 10, 2013 @ 06:31:44

  மிக அருமையான பகிர்வு

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 10, 2013 @ 08:04:47

   மிக்க நனறியும், மகிழ்வும் அன்புறவே தங்கள் வருகை, கருத்திடலிற்கு.
   ஆண்டன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

  • கோவை கவி
   பிப் 10, 2013 @ 08:13:02

   மிக்க நன்றியும், மகிழ்வும் தங்கள் வருகை, கருத்திடலிற்கு.
   ஆண்வன் ஆசி நிறையட்டும்.
   அன்பான யலீல்கமால் தங்கள் இணைப்பைச் சொடுக்க தமிழ் வலைப் பதிவு வரவில்லை. இருந்தால் தரவும் கருத்திடலாம். மிக்க நன்றி.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: