42. கவிதை பாருங்கள்(photo,poem)

hand paper--øø

கருத்திட

கருத்திட புகழ்ந்தொரு ஓகோவும்

விருப்புடை வாழ்த்தும் ஆகாவும்

ஓரு நோகாத வரியும்

பெரு விருப்பாகத் தேவைப்படும்.

உள்ளதெழுதக் கூடாது! ஷ்!…மூச்!

முள்ளாகக் குத்தும் அழிக்கப்படும்!

வெள்ளமாக நீண்ட விளக்கமும்

அள்ளித் தரப்படும் புகழுலகில்.

saalvai-2[1]

ஆக்கம் வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-1-2013

30. கோவை (கோப்பாய்) அம்மன்.

OLYMPUS DIGITAL CAMERA

கோவை அம்மன்.

ளம் காற்று வீசும் வயலோரம்

இதமாக ஆலமர நிழல் தரும்.

இருப்பிடம் முத்துமாரியம்மன் தலம்.

இனிய பால நினைவுகளேந்தி வரும்.

அலரிப் பூக்கன்றுகள் ஆலய வீதியில்

அடர்ந்த நிழலிற்குத் தென்னை மரங்கள்

படர்ந்த அன்றைய பழமைக் காட்சிகள்

தொடர்வதில்லை யெதுவும் கால மாற்றம்.

ட்டு நினைவுகள் பக்தி ரசத்தோடும்

கூட்டுப் பிரார்த்தனை வெள்ளி தோறும்

கேட்டுப் படித்தோம் பல திருப்பதிகம்.

விட்டு விலகாத நினைவுப் படம்.

உறவுகள் சகோதரர் ஒன்று கூடினோம்.

உறவினை அம்மனோடு இறுகப் பிணைத்தோம்.

உறவும் பிரிவுமாய் வாழ்வு கடக்கிறது.

உறவு அம்மனோடு கோபதாபம் கொண்டது.

விரிபுவி மாந்தருக்கு அருளும் தேவி

விரி புகழ் முத்துமாரியம்மன் தாயி.

சரியாப் புகழுடைய கோப்பாய்(கோவை) மத்தியம்மன்

விரிப்பாய் நாட்டில் அமைதிப் போக்கை.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

4-1-2013.

OLYMPUS DIGITAL CAMERA

 

Next Newer Entries