19. சந்த மொழியில் தினம்….

murugan5

சந்த மொழியில் தினம்….

 

தந்தைக்குத் தமிழ்  உரைத்த முருகா

சிந்தைக்கு மகிழ்வு தர வருக!

முந்தைப் பழைய தமிழ் உயர

எந்தனுக்கும் தமிழ் செழிப்பு தருக!   (தந்தைக்கு)

 

வந்த இடத்து மொழி சிறப்பு.

சொந்த மொழி மறத்தல் நகைப்பு.

கெந்தும் தமிழ் நிலையால் தவிப்பு

உந்தன் அருள் தனையே நிரப்பு.   ( தந்தைக்கு)

 

சந்த மொழியில் தினம் உன்னை

சிந்து பாடித் தொழ என்னை

சுந்தரத் தமிழ் கடலில் நீந்த

செந்தமிழ் முருகா நீ அருள்வாய்!.   (தந்தைக்கு)

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

2-11-2005.

 

end1

43. காதலர் மகிழ்வூஞ்சல்.

காதலர் மகிழ்வூஞ்சல்.

சோலையிலே மனச் சாலையிலே

சிலைபோலொருவர் நிலைத்திடல்

வலையிட்டவரைச் சிறை செய்தல்

கலையது காதல் மலர்வதால்.

சுந்தர மார்பில் சாய்ந்தும்

மந்திர மொழி தோய்ந்தும்

இந்திர ஆழியில் நீந்தியும்

அந்தரவுலகில் ஆடிப் பாடுவார்.

(காதலர்தினக் கவிதை.)

 

valentinepoem

32. மரபுப் பாமணி கிரிகாசனுக்கு வாழ்த்து.

823386_511467628892010_1829287175_o

மரபுப் பாமணி கிரிகாசனுக்கு வாழ்த்து.

 

 

பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள்

அரிசு அல்ல, அரிய ஏற்பு.

உரித்து உனக்குன் உரவு தமிழால்.

வரித்திடட்டும் உன் மாதிரியைப் பலர்.

 

 

கரித்திடும் வரிகள் எழுதுவோரும் சிறிது

கரிசனையாயுன் வரிகள் வாசிக்கட்டும்.

தரிப்புடன் தவறாது தம்மை மாற்றட்டும்.

விரிக்கட்டும் நற் தமிழ் – சிறகுகளை.

 

 

உன் கவிதைத் தொகுப்புகள் கவர்ந்தது

என்னை.  என் வலையில் உள்ள

வாழ்வியற் குறட்டாழிசை, வே. ஆத்திசூடி

வேதாவின் மொழிகளென தொகுக்க ஆசை.

 

 

தூண்டுதல் ஆகிறது பிறரிற்கு எழுத்துலகில்

தூவப்படுகையில் இவைகள். முயற்சியுள்ளம்

தூருதல் ஆவதில்லை வாழ்வில் என்றும்.

தூவுகிறேனின்ப வாழ்த்து கவிஞர் கிரிகாசனிற்கு.

 

 

பார்க்கின்சன் நோயில் அவதியுறும் இவர்

கோர்க்கின்ற தமிழ் வரிகள் பிறர்

பார்க்கின்ற வகையில் அமைந்தது சிறப்பு.

வார்க்கட்டும் இறையருள் இவர் நலத்திற்காய்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

21-2-2013.

 

 

(அரிசு –வேம்பு./  உரவு – வலிமை. /தூருதல்- அடைபடுதல்.

தரிப்பு – பொறுமை. / கரித்தல் – எரித்தல், உறுத்தல், வெறுத்தல்)

 

 

இவரின் ஐந்து தொகுப்புகள் இருக்கும் இணைப்புஇதோ….http://www.tamilvimbam.com/kalki2.html

 

 

baloonz

 

 

48. நீருளி கொண்டு…(பாமாலிகை (இயற்கை)

556879_304973169592513_1324975807_n

நீருளி கொண்டு…

லைக்குன்றில் நீருளி கொண்டு

விலையின்றிக் கவியோயாது செதுக்குகிறாய்!

கற்பாறையில் கவின் கவியெழுதும்

அற்புத நீரூற்றேயுன் அழகால்

இத்தரையில் ஆழக்குழி பறிக்கும்

ஆற்றலென்ன, பாயும் வேகத்தில்!

அற்றமும் ஆக்கமுமொரு சேரும்

உற்சவத் திருமூர்க்கம் நீயன்றோ!

அவிழ்த்துக் கொட்டியுதறும் வயிரமணிகளோ!

கவிழ்த்துக் கொட்டிய நீர்பாலோ!

உய்ய்….யென்றுலகில் கண்ணாடி நீர்

பெய்யுமோசையிசை பயங்கர ஓங்காரம்!

மெய்யே! நீத்தாண்டவம் தான்!

செய்யும் நீர்தவமே தான்!

மெய்சிலிர்க்கும் அழகிய நர்த்தனமே!

உய்தலுலகம் உன் தவப்பலனே!

(அற்றம் – அழிவு.   உற்சவ – ஆசைப்பெருக்கம்)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

18-2-2013.

barbluea

44. கவிதை பாருங்கள்(photo,poem)

 

 

elupai

உலுக்காமலே காலத்தில்
அலுக்காத வெண்மையில்
சிலுசிலுப்பாய் நிலத்தில்
பிலுக்கி போல்
இலுப்பைப்பூ உதிர்ந்து
கொலுவிருக்கும் அழகது
சலிப்பின்றிக் காண்பது.

(பிலுக்கி – பகட்டுக்காரி)

Beautiful-Blue-Rose-iPhone-4-Wallpaper[1]

ரமிட்ட ரோசாப் பதியனின்

வரமான மலர்கள் போல

தரமான உறவிணையுமென்ற

உரமான எண்ணம் தவறாகும்.

ல்ல வளர்ப்பாளனே பண்பாளன்

சொல்லும் தரமாய் வாழுவான்.

தில்லுமுல்லு உலகிலும் ஒரு

தொல்லையற்ற உறவாகுவான்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
16-2-2013.

295055xwh4xs0dkx

42. காதல் முழக்கம்…..

-------

கால் முக்ம்…..

***

காதல் முழக்கம் காணுமொரு நாள்!

காதல் சங்கமம் தேடுமொரு நாள்!

அடடா இன்பம்! அதுவே சங்கமம்!

அடடா காதல்! அதுவே சரணம்!

***

பரவும் கண்கள் தேடும் இன்பம.

விரல்கள் பத்தும் உணரும் இன்பம.

வரவாய் செலவாய் வழங்கும் இன்பம்.

உரமாய் உயர்த்தும் காதல் இன்பம்.

***

மலையாய் நெஞ்சில் உயர நிற்கும்

விலையாய் மறுபடி அன்பே கேட்கும்.

அலையும் கண்கள் தரிசனம் கேட்கும்.

கலையாய் வாழ்க காதல் காலத்திலும்.

***

காதல் போர்!  காதல் ஏர்!

காதல் நீர்! காதல் கார்!

காதல் செழிப்பு! காதல் விழிப்பு!

காதல் துளிர்ப்பு! காதல் களிப்பு!

***

காதல் நிலம்! காதல் கலம்!

காதல் மறை! காதல் நறை!

காதல் கலகமின்றிக் கொண்டாடும்

காதலர்தினக்  காதல் வாழ்க!

***

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

13-2-2013.

2686814t0wzzlw0rl

 

 

31. பா மாலிகை (வாழ்த்துப்பா, ) திலகவதி வைரவிழா.

அறுபது அகவை நிறைவு.
நறுமண ஆறு தசாப்தம்.
உறுதுணையாக ஐந்து பிள்ளைகள்.
இறுமாப்புடன் ஒன்பது பேரப்பிள்ளைகள்.
திலகவதி தர்மலிங்கத்தின் நாளிது.
அலங்கரிக்கிறார் சுமங்கலியாயின்று.
இலட்சணங்கள் பல நிறைந்தவர்.
இறைபக்தி துதிப் பாடலில் சிறந்தவர்.

12 x 18 - B copy

 

இன்னுமொரு வாழ்த்து.

 

 

திலகவதி வைரவிழா.

 

 

 

புங்கை நகரிலுதித்த பாசமான

புதல்வி செல்லமாய் ” மணி.”

வைரமுத்து நாகம்மாவின் மகளுக்கு

வைரவிழா! திலகவதி தர்மலிங்கத்திற்கு!

ஒன்பது உடன் பிறப்புகளுடன்

ஒளிர்ந்த நான்காவது பெண்ணாவார்.

ஒருங்கிணைந்து உறவாடும் அன்பானவர்.

ஓடியாடி உதவும் முயற்சியாளர்.

 

 

பண்ணோடு பதிகம் பாடி

பதக்கம் பெற்றார் சைவத் தமிழ்

பேரவையால். கூட்டுப் பிரார்த்தனையில்

பங்கெடுக்கும் பேரார்வப் பக்தை.

ஐந்து பிள்ளைகளிற்குத் தாய்.

ஓன்பது பேரப் பிள்ளைகளின் பாட்டி.

திருவாளர் தர்மலிங்கத்தின் துணைவி.

எங்களின் விளையாட்டுத் தோழி.

 

 

தோட்டக் கலையில் வல்லவர்.

நாடடுவார் பூக்கன்றுகளும். கரம்

பட்டிடாத நிலமுமில்லை. சமையலில்

கெட்டிக்காரி. பலரையும் சமாளிப்பார்.

அம்மா! சிரிக்க வைத்துச் சிரிப்பார்.

சும்மா விருக்காத சுறுசுறுப்பாளர்.

இன்பதுன்பங்களில் பங்கெடுக்கும் திலகமக்காவிற்கு

அறுபதாவது பிறந்தநாள் வாழ்த்து.

வாழிய பல்லாண்டு!…

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-2-2013.

 

 

 

humming-bird

5. கலையும், கற்பனையும்(கைவினை)

sweater 047

பால் வளையம்.

 

பொழுது போக்குக் கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் வெள்ளை நிறத்தில் வளையங்கள், இதயம் உரு, பந்து – பல அளவுகளில் பாரமற்ற (பெளெமிங்கோ) எனும் கை வினைகளுக்குரிய பொருள் வாங்கலாம். (கண்ணாடிப் பொருட்கள் பொதியாக அனுப்பும் போது பாவிக்கும் ஸ்பொஞ் போன்ற வகையானது. எனக்கு சரியானப் பெயர் கூறத் தெரியவில்லை) விளங்காவிடில் கீழே படத்தில் காணலாம்.

சிக்சக் என்று கூறும் (பல்லுப் பல்லாக வெட்டும்) கத்தரிக்கோலால் பல வகை நிறத்துணிகளை ஒரு அங்குல நீள அகலத்தில் சிறு  சிறு சதுரங்களாக வெட்டி வைக்கவும். (படத்தில் காணுங்கள்).

sweater 046

 

 படத்தில் உள்ள கருவியின் கூரிய நுனியை வெட்டிய துணியின் நடுவில் வைத்து, கருவியோடு துணியைத் தூக்கி அந்த வளையம், அல்லது விரும்பிய உருவில் நெருக்கம் நெருக்கமாக அழுத்தி துணியை உள்ளே செலுத்த வேண்டும். அது அப்படியே நிற்கும். ஒரு சென்ரிமீட்டர் அளவு உள்ளே அழுத்தினால் மிகுதி வெளியே பூவாக விரியும். பூவாக விரியும் இடம் விட்டு அடுத்ததைச் உள் செலுத்தலாம்.

சுவரில் தொங்கவிட சிறு கம்பியை உள்ளே வளைத்துச் செருகலாம்.

இதை டெனிசில் பால் வளையம் என்று கூறுவோம். இங்கு நான் கூறுவது (படத்தோடு) துணி வேலை மட்டும் தான்.

இது எனது வேலையிடத்தில் பிள்ளைகளோடு செய்தது. அவர்களோடு நாமும் செய்து, நான் இப்போது என்னுடையதை வீட்டுச் சுவரில் மாட்டியுள்ளேன்.

நத்தார் நேரங்களிலும் நத்தாருக்குரிய பொருட்கள், நிறங்களோடு செய்வார்கள்.

வண்ண வண்ணப் பட்டிகளை (றிபன்) நிறங்களாகக் கலந்து சுற்றலாம்.

பொத்தான்கள் வளையத்தில் ஒட்டலாம். காய்ந்த பழவகைகள், பூக்கள், மிகச் சிறி பலூன் துண்டுகள் என்று கற்பனைக்கு ஏற்றபடி வளையத்தை – இதயத்தை – பந்தை அலங்கரிக்கலாம்.

இவை (வளையங்கள்) பல அளவுகளிலும் பெறலாம்.

பாலர் நிலையத்திலிருந்து பெரியவர்கள் வரை டென்மார்க்கில் இவ் வேலை பிரசித்தமானது.

முயன்று பாருங்களேன்.

சுலபமானது.

 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

10-2-2013.

 

 

valaiyammmm

 

 

 

47. உதயவலம்.

lotous

உதயவலம்.

 

மலர்காவில் வண்டமர்ந்ததும்

மயக்கத்தில் தேனேந்தும்.

முறுவலிலே தோய்ந்திடும்

முயக்கத்தில் மலரழகுறும்.

 

முக்குளித்த வெட்கத்தால்

முகில்கள் சிவந்து

முகவுரைக்க, கதிரவன்

முகம் பொன்னானது.

 

அள்ளிருள் மறைய

புள்ளினப் பூபாளம்.

உள்ளலுடன் கன்றினம்

துள்ளல் தாயிடம்.

 

மண்ணுய்யக்  கஞ்சரன் 

மண்டல யாத்திரையேகினான்.

வண்ண ஓவியத்தின்

கண்குளிர் வானம்.

 

கமலங்கள் முகம் மலர

கலகலத்தோடும் நீராட

காற்று தென்றலாய் தடவ

வேற்று நாளொன்று புலருது.

 

தடுக்கவியலா ஊர்வலம்.

எடுக்கவியலா ஒளிவலம்.

வடுக்களில்லாக் கொடைவலம்.

விபாகரன் உதயவலம்.

 

(அள்ளிருள் – கும்மிருட்டு. உள்ளல் – மகிழ்தல்.  விபாகரன், கஞ்சரன் -சூரியன்.)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-2-2013.

 

இதனோடொத்த பதிவுகள்:-  https://kovaikkavi.wordpress.com/2012/02/18/31-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0/

 

 

https://kovaikkavi.wordpress.com/2011/03/04/227-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87/

 

https://kovaikkavi.wordpress.com/2010/07/01/4-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%87-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%87/

 

 

12720-22coloured

31. வளரட்டும் சுயபலம்….

toddler-stairs-climbing-photo-420x420-ts-AA013115

வளரட்டும் சுயபலம்….

 

வாராண்டி வாராண்டி

வாசுதேவன் வாராண்டி.

வாரப்பாடு காட்டியே

வாருகிறார் பேத்தியை.

வாரணையாய் வளர்ச்சிக்கு

வாசல் நந்தியாகிறார்.  (வாராண்டி)

 

 

ணவைப் பிள்ளைக்கு

உருகியுருகி ஊட்டுகிறார்.

உடையை அணிந்திட

உதவியே தொலைக்கிறார்.

உருப்படியாய் பேத்தி வளர

உதவி தர மறுக்கிறார். (வாராண்டி)

 

 

ப்போதும் உதவினால்

எதிர்பார்ப்பு உருவாகும்.

எழுச்சி உணர்வும்

எழாமலே அமுங்கிடும்.

எண்ணமும் முயற்சியும்

எதிர்மொழி  பேசாது.  (வாரப்பாடு)

 

 

தானே முயற்சித்து

தாண்டவிடு படிகளை!

தாறுமாறு ஆனாலும்

தாராள அனுபவம்

தானமாக்கும் தகுதியை.

தாட்டிகமாயெழும் சுயபலம். (வாரப்பாடு)

 

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ,  டென்மார்க்.

5-2-2013.

 

( வாரணை – தடை.  தாட்டிகம் – வலிமை, இறுமாப்பு)

 

 

11art

 

 

Previous Older Entries