4. கலையும், கற்பனையும்(கைவினை)

DSCF2348

அலங்கார மரக்குற்றி.

1985ம் ஆண்டளவில் றப்பர் மரக்குத்தியில் வர்ணம் பூசிய பூச்சினை (பெயின்ரிங்) இங்கு காண்கிறீர்கள்.

இது எனது தம்பி வீட்டில் அழகுக்காக அடுக்கி வைத்துள்ளார்.

எனது தம்பியும் என்னைப் போல கலை கற்பனைக் கைவண்ணங்களிலும், பாடுவதிலும் என்று பல திறமைகள் நிறைந்தவர்.

அம்மா அப்பாவோடு நாமெல்லாம் 20 வருடங்களுக்கும் மேலாக சித்திரை வருடப்பிறப்பு, தைப் பொங்கல்களிற்கு பொங்கிய சருவக் குடத்தை எடுத்து வந்து மினுக்கி அழகிற்கு வைத்துள்ளதைக் காண்கிறீர்கள். அத்துடன் நாம் ஊரில் சமையலறையில் பாவித்த செம்பு அதன் மேல் வைத்துள்ளார்.

அத்தோடு பூக்கூடையில் பூக்கள் அடுக்கியுள்ளார் இதுவும் அவரது கை வேலையே.

ஊரில் இரவுணவு முடித்து எல்லோரும் கூடியிருப்போம். கூப்பிடும் தூரத்தில் மாமி வீடும் இருக்கிறது. அவர்களும் வந்து விடுவார்கள். பின்பு நேயர் விருப்பம் தான். தம்பி ஆண்குரல் வரிகளும், நான் பெண் குரல் வரிகளுமாகப் பாட்டுக் கச்சேரி தான்.

சரி இவை நிற்க…..நான் விடயத்திற்கு வருகிறேன்.

எனது கணவர் 300 கெக்ரார் தேயிலை றப்பர் தோட்டத்தில் கட்டுப்பாட்டு அதிகாரி அல்லது நிர்வாக உத்தியோகத்தராக  இலங்கையில் பணி செய்தார்.( field officer in state plantatiom corparation- Srilanka ). றப்பர் மரங்களைப் பிடுங்கி விட்டு தேயிலைக் கன்றுகளை நட்டு வளர்த்துப் பயன் பெற்றனர்.

மரங்களைப் பிடுங்கி அதைத் துண்டு போடும் போது ஒரு மரக்குற்றியை  எமது வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.அதன் அழகைப் பார்த்து நான் 5-6 குற்றிகளாகத் தரும்படி கேட்டேன் இப்படி வர்ணம் பூசிப் பாவிக்கலாம் என்று.

rubber stole2

மாதிரியைப் பாருங்கள்.

இப்படி வித விதமான வண்ணம் பூசி வீட்டிற்கு வெளியே பூச்சட்டிகளை அதன் மேல் அடுக்கி வைப்பது, தேவையானால் முற்றத்தில் போட்டு அமர்வது என்று பாவித்தோம்.

பின்னர் கணவர் வேலையை விட்டு டென்மார்க் வரும் போது (1986ல்) நாமும் கொழும்பு வந்தோம்.  அப்போது தங்கை வீட்டில் எல்லாவற்றையும் வைத்தோம. தம்பி தனக்கு 2 போதும் என்று எடுத்துக் கொண்டு போனார். அது மட்டும் தான் இப்போது மிஞ்சியுள்ளது அலங்காரப் பொருளாக. (வர்ணங்கள் களன்றுவிட்டது.)

இது நினைவு வந்த போது தம்பியிடம் கேட்டேன் படம் எடுத்து அனுப்புவாயா என்று. உடனே எடுத்து அனுப்பினார்.

இன்று அதைப் பாவித்து இதை எழுதினேன்.

அவருக்கு மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன். Thank you so much Satha!.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

1-2-2013.

 

163664_469483907911_713827911_5799148_5756063_n

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  பிப் 02, 2013 @ 00:50:56

  எதுவாக இருந்தாலும் கைவண்ணத்தால் அழாகன பொருட்களாக மாற்றி விடுகிறீர்கள்.அருமை.

  மறுமொழி

 2. கோமதிஅரசு
  பிப் 02, 2013 @ 00:53:32

  அலங்கார மரக்குற்றியும், மலரும் நினைவுகளூம் அற்புதம்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 02, 2013 @ 20:31:18

   மிக்க நன்றி சகோதரி
   மகிழ்ச்சியும் கூட.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.
   இப்போதும் உங்கள் பக்கம் வந்து பார்த்தேன் கிடுகிடுவென ஆடுகிறது.

   மறுமொழி

 3. கவியாழி கண்ணதாசன்
  பிப் 02, 2013 @ 00:59:40

  நல்ல ரசனையும் நமது பண்பாடு மறக்காமல் நெல்குற்றியையும் சொம்பையும் அழகு பொருளாக பாவிப்பது

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 02, 2013 @ 20:39:34

   மிக்க நன்றி சகோதரா மகிழ்ச்சியும் கூட தங்கள் கருத்திற்கு..
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.
   நீங்கள் கூறத்தான் நினைவு வந்தது. ஓர் உரல் ஒன்று அங்கு தான் செய்து நாம் பாவித்தோம்.
   வரும் போது தங்கை வீட்டில் வைத்தோம்.

   மறுமொழி

 4. b.ganesh
  பிப் 02, 2013 @ 01:02:04

  பார்ப்பதற்கே வெகு அழகாக இருக்கிறது. உங்கள் மலரும் நினைவுகளையும் மிக ரசித்தேன்.

  மறுமொழி

 5. ramani
  பிப் 02, 2013 @ 02:49:07

  அருமை அருமை
  கற்பனைக்கு உருவில்லை என்பது பொய்யே
  கற்பனை அருமையான உருவமாக விரிந்து
  இதோ எதிரே மகிழ்வூட்டுகிறதே
  அழகான அருமையான வேலைப்பாட்டிற்கும்
  பகிர்வுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. ranjani135
  பிப் 02, 2013 @ 06:02:19

  எங்கள் வீட்டிலும் ஒரு சருவம் இருந்தது. அம்மாவின் சொத்து அது. அதேபோல ஒரு பித்தளை டப்பா. அது மிக அழகாக இருக்கும். நல்ல கனம்! அதில் கோடையில் போட்ட வடகங்கள் இருக்கும்.

  நீங்கள் எழுதியிருப்பது போல அவற்றை அவ்வப்போது மினுங்க வைத்து காப்பாற்ற வேண்டும்.
  காண்பதற்கரிய விஷயங்களை அழகான மலரும் நினைவுகளோடு விவரித்து இருக்கிறீர்கள்.

  வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல உங்களிடம் எது கிடைத்தாலும் அவற்றை உங்கள் கலை அறிவால் பொலியச் செய்கிறீர்கள்.

  பாராட்டுக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 03, 2013 @ 14:31:29

   பழைய பொருட்கள் எப்போதும் பொன் தான் சகோதரி.

   மிக்க நன்றியும் – மகிழ்வும் தங்கள் கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 7. angelin
  பிப் 02, 2013 @ 11:23:17

  akkaa i shall come again and comment in tamil .
  lovely work.

  மறுமொழி

 8. seeralanvee
  பிப் 02, 2013 @ 13:56:01

  காலம் கடந்தாலும் ,பண்பாடும் பழக்கவழக்கங்களும் மாறினாலும் ( சில நாடுகளில்,சிலரிடம் மட்டும் ) இன்னமும் எம்மவரிடத்தில் கைவினைகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன ,நினைவிலும், செயலிலும்………………… வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 03, 2013 @ 14:33:42

   முகநூலில் தேட – ஆக்கம் போட தங்கள் பெயர் வரவில்லை.

   மிக்க நன்றியும் – மகிழ்வும் சீராளன் தங்கள் கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 9. seeralanvee
  பிப் 03, 2013 @ 15:47:41

  முகநூலை தடை பண்ணி வைத்திருக்கிறேன் விரைவில் வருகிறேன் சகோ …வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: