46. கற்பகம் – பனை.

458661_314978288606725_1853261243_o[1]

கற்பகம் – பனை.

கற்பகதரு பயனுயர் தரம்.

சொற்பதம் பெயருமுயர் தரம்.

உற்பத்தி புல்லினத் தாவர

அற்புதப் பேரினமாம் – வரம்!

னம் தோப்பினம் அருமை.

தனம் நாட்டின் பெருமை.

நெட்டை முப்பது மீட்டர்.

குட்டை வடலி பெயராம்.

(உண்பவை – பயன்)

பனம் பழம் – கிழங்கு

பனம் குருத்து – புழுக்கொடியல்

பனம் பூரான் – கருப்பட்டி

பனம் நுங்கு – கள்ளு

னை நார் – கயிறு, கடகம்.

பனை மட்டை வரிச்சு.(கருக்கு மட்டை)

பனையோலையால் வேலி – கூரை.

வனையலாம் வீட்டுப் பொருட்களும்.

பனை வளர்ந்து முதிர்ந்து

பயனாக பதினைந்து வருடங்கள்.

பனை முதிரோலை விலங்குணவு.

பனம் பதநீர் சுவையெனப் பல.

ட்டை – வைரம் கனம்(வலிமை).

பெட்டி பின்னும் ஓலை.

பாம்பு, காற்றாடி, விசிறி

பல பின்னி ரசிக்கலாம்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

3-2-2013.

 Nyt billede

 

 

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவியாழி கண்ணதாசன்
  பிப் 03, 2013 @ 23:27:37

  பனைமரத்தின் பயன் பற்றி கவிதையாக சொன்னது மிக அழகு நன்றிங்கம்மா

  மறுமொழி

 2. rathnavelnatarajan
  பிப் 04, 2013 @ 02:13:12

  அருமை.
  நன்றி.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 04, 2013 @ 03:57:47

  அனைத்தும் பயன் – கள்ளைத் தவிர…

  மறுமொழி

 4. ஸாதிகா
  பிப் 04, 2013 @ 04:29:02

  பயனுள்ள பனையை பற்றிய அருமையான தொகுப்பு.

  மறுமொழி

 5. sasikala
  பிப் 04, 2013 @ 05:52:46

  நுங்கு நினைவு வந்து விட்டது. அருமையான வரிகள்.

  மறுமொழி

 6. Rajarajeswari jaghamani
  பிப் 04, 2013 @ 14:46:30

  கற்பகதரு பயனுயர் தரம்.

  சொற்பதம் பெயருமுயர் தரம்.
  அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்…

  மறுமொழி

 7. T.N.MURALIDHARAN
  பிப் 05, 2013 @ 14:20:50

  பனை ஓலையில் பல பொருட்கள் செய்து விளையாடி இருக்கிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 09, 2013 @ 09:46:49

   எத்தனை பொருட்கள் செய்து மகிழ்ந்தோம். மறக்க முடியாதது.
   அத்தனை படத்தையும் போட முடியாதே!

   மிக்க மிக்க நன்றி Murali கருத்திடலிற்கு. மகிழ்ந்தேன்.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. பழனிவேல்
  பிப் 06, 2013 @ 04:36:46

  பனை எனும் மரம்
  பயனுயர் தரம்
  பகுப்பாய் ஓர் படைப்பு.

  கவிதை கண்டதும் மனம் கொண்டது.

  மறுமொழி

 9. கோவை கவி
  பிப் 09, 2013 @ 09:56:29

  ”..“பனம் பழம்”

  பணங்களை தேடி,
  பழமையை மூடி,
  பகட்டாய் ஓடி,
  பயன்களை மறந்த ,
  பழங்களில் ஒன்று,
  பனம் பழம்….”

  நினைவிருக்கா இது? இது உமது கவி (வரிகள்). (எனக்கிட்ட கருத்து வரி- தொலைத்தவை எத்தனையோவில்.)
  இதுவே என்னை இந்தப் பதிவு எழுதத் தூண்டியது.(பல நாட்களிற்கு முன்.)
  எப்போதோ எழுதி இன்றே பதிவேற்றினேன்.
  ஆச்சரியமா?!!!!
  எப்போதும் கூறுவேன் ஒருவனின் கவி வரிகள் மற்றவனைக் கவி எழுத உசுப்ப வேண்டும் இதுவே முன்னையவனின் கவி ஆற்றல்.
  இதைப் பழனியின் வரிகள் எனக்குச் செய்கிறது. செய்தது.
  மிக்க நன்றி. இறையாசி எப்போதும் உம் கூடவேயிருக்கட்டும்.
  இப்போது எனது ஆசை இந்தப் பனை வரிகளை நீட்டி எழுதி உமது வலையில் ஏற்றவும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: