31. வளரட்டும் சுயபலம்….

toddler-stairs-climbing-photo-420x420-ts-AA013115

வளரட்டும் சுயபலம்….

 

வாராண்டி வாராண்டி

வாசுதேவன் வாராண்டி.

வாரப்பாடு காட்டியே

வாருகிறார் பேத்தியை.

வாரணையாய் வளர்ச்சிக்கு

வாசல் நந்தியாகிறார்.  (வாராண்டி)

 

 

ணவைப் பிள்ளைக்கு

உருகியுருகி ஊட்டுகிறார்.

உடையை அணிந்திட

உதவியே தொலைக்கிறார்.

உருப்படியாய் பேத்தி வளர

உதவி தர மறுக்கிறார். (வாராண்டி)

 

 

ப்போதும் உதவினால்

எதிர்பார்ப்பு உருவாகும்.

எழுச்சி உணர்வும்

எழாமலே அமுங்கிடும்.

எண்ணமும் முயற்சியும்

எதிர்மொழி  பேசாது.  (வாரப்பாடு)

 

 

தானே முயற்சித்து

தாண்டவிடு படிகளை!

தாறுமாறு ஆனாலும்

தாராள அனுபவம்

தானமாக்கும் தகுதியை.

தாட்டிகமாயெழும் சுயபலம். (வாரப்பாடு)

 

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ,  டென்மார்க்.

5-2-2013.

 

( வாரணை – தடை.  தாட்டிகம் – வலிமை, இறுமாப்பு)

 

 

11art

 

 

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வை. கோபாலகிருஷ்ணன்
  பிப் 05, 2013 @ 21:48:24

  அழகிய படத்துடன் அற்புதமான படைப்பு. பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. pkandaswamy
  பிப் 05, 2013 @ 22:50:38

  அருமையான கருத்துச் செறிவுள்ள கவிதை. அதீத அன்பால் பலர் இவ்வாறு குழந்தைகளை வளர விடுவதில்லை.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 09, 2013 @ 14:54:27

   மிகுந்த நன்றியும், மகிழ்வும் ஐயா தங்கள் கருத்திற்கு.

   தங்களிடம் வரமுடியவில்லை வந்ததும் பக்கம் மேலும் கீழும் ஆடுகிறது.
   நிற்க வைத்து எழுத முடியவில்லை. 2-3 பேரிடம் என்னால் போக முடியவில்லை.
   பயர் பொக்ஸ்- கூகிள் குரோம் எல்லாம் தரவிறக்கிப் பார்த்தேன். முடியவில்லை.
   மன வருத்தமே!

   ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 3. கவியாழி கண்ணதாசன்
  பிப் 06, 2013 @ 00:47:26

  தானே முயற்சித்து தாண்டவிடு படிகளை! //
  உண்மை தானாக வளரட்டும் தடைகளை தாண்டட்டும்

  மறுமொழி

 4. கோமதிஅரசு
  பிப் 06, 2013 @ 00:55:15

  தானே முயற்சித்து

  தாண்டவிடு படிகளை!

  தாறுமாறு ஆனாலும்

  தாராள அனுபவம்

  தானமாக்கும் தகுதியை.

  தாட்டிகமாயெழும் சுயபலம்.

  சுயபலம் கண்டிப்பாய் வேண்டும். அருமையான கவிதை. குழந்தையை நன்கு வளர்க்க உதவியாகும் கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 09, 2013 @ 15:03:16

   மிகுந்த நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள் கருத்திற்கு.
   ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

   தங்களிடம் வரமுடியவில்லை வந்ததும் பக்கம்Nமுலும் கீழும் ஆடுகிறது.
   நிற்க வைத்து எழுத முடியவில்லை. 2-3 பேரிடம் என்னால் போக முடியவில்லை.
   பயர் பொக்ஸ்- கூகிள் குரோம் எல்லாம் தரவிறக்கிப் பார்த்தேன். முடியவில்லை.
   அப்பா வாங்கித்தந்த கடிகாரம் பற்றி ஏழுதியுள்ளீர்கள். அவ்வளவு தான் கூற முடியும்.

   மன வருத்தமே!

   மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 06, 2013 @ 01:51:22

  சிந்திக்க வேண்டிய வரிகள்…

  மறுமொழி

 6. பழனிவேல்
  பிப் 06, 2013 @ 04:25:46

  “எப்போதும் உதவினால்
  எதிர்பார்ப்பு உருவாகும்.
  எழுச்சி உணர்வும்
  எழாமலே அமுங்கிடும்.
  எண்ணமும் முயற்சியும்
  எதிர்மொழி பேசாது.”

  படமும் தங்கள் படைப்பும் மிக அருமை.
  மிகவும் ரசித்தேன்

  மறுமொழி

 7. kowsy
  பிப் 06, 2013 @ 13:42:12

  வாரனையார் வளர்ச்சிக்கு நந்தி போல நிற்கிறார். தானாய் வளரும் பிள்ளை அனுபவத்தின் மூலம் வலிமை பெரும் என்று அழகாக உண்மை செய்தியைக் கவிதையாய் வடித்தீர்கள்

  மறுமொழி

 8. Mageswari Periasamy
  பிப் 07, 2013 @ 04:20:47

  உண்மைதான் சகோதரி… குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கணும். ஆனால் நம்மில் அதிகமானோர் பாசத்தினால் அவர்களின் தேவையற்ற ஆசைகளுக்கு இடம் கொடுத்து விட்டு, பிறகு அவர்களை மீட்க முடியாமல் தடுமாறுகிறோம்… ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா..என்று யோசிக்க தூண்டுகிறது… அருமையான பதிவில் சிறந்த படத்தை பதிவாக்கி எங்கள் மனதை கொள்ளைக் கொண்டு விட்டீர்கள்… வாழ்த்துக்கள்..

  மறுமொழி

 9. seeralanvee
  பிப் 07, 2013 @ 12:07:51

  //எப்போதும் உதவினால்
  எதிர்பார்ப்பு உருவாகும்.//…………….உண்மைதான் எதிர்பாப்பு இல்லாத முயற்சி என்றும் தோற்காது மிக அழகிய வரிகள் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 23, 2019 @ 12:16:20

  Kaviyazhi Kannadasan :- நீங்க சொல்வதுபோல் தானே வளரட்டும்.தன்காலில் நிற்கட்டும்

  Ramadhas Muthuswamy:- // தானே முயற்சித்து
  தாண்டவிடு படிகளை! …
  தாறுமாறு ஆனாலும்
  தாராள அனுபவம்
  தானமாக்கும் தகுதியை.
  தாட்டிகமாயெழும் சுயபலம்.// ….. மிகவும் அருமையானெ பொறுப்புள்ள வரிகள். வாழ்த்துக்களம்மா!!!

  யாழ். இலக்கியக் குவியம் :- உணவைப் பிள்ளைக்கு
  உருகியுருகி ஊட்டுகிறார்.mm good.

  Verona Sharmila :- எப்போதும் உதவினால்
  எதிர்பார்ப்பு உருவாகும்.
  எழுச்சி உணர்வும்
  எழாமலே அமுங்கிடும். அருமையான வரிகள்.

  Loganadan Ps :- அருமை, அருமை. நன்றி பகிர்வுக்கு
  யாழ். இலக்கியக் குவியம் உணவைப் பிள்ளைக்கு
  உருகியுருகி ஊட்டுகிறார்.mm good.

  Verona Sharmila:- எப்போதும் உதவினால்
  எதிர்பார்ப்பு உருவாகும்.
  எழுச்சி உணர்வும்
  எழாமலே அமுங்கிடும். அருமையான வரிகள்.

  Loganadan Ps :- அருமை, அருமை. நன்றி பகிர்வுக்கு

  Kalaimahel Hidaya Risvi :- எப்போதும் உதவினால்
  எதிர்பார்ப்பு உருவாகும்.
  எழுச்சி உணர்வும்
  எழாமலே அமுங்கிடும்.
  எண்ணமும் முயற்சியும்
  எதிர்மொழி பேசாது. (வாரப்பாடு)மிக மிகஅருமையான வரிகள்.வாழ்த்துக்கள்sis…:-)
  r
  G Saravana Kumar :- அருமை
  பாடல்
  வடிவம்

  சிறீ சிறீஸ்கந்தராசா:- தானே முயற்சித்து
  தாண்டவிடு படிகளை!
  தாறுமாறு ஆனாலும்

  தாராள அனுபவம்
  தானமாக்கும் தகுதியை.
  **** அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!

  R Thevathi Rajan:- அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்…
  குழந்தையின் வளர்ச்சியை அவர்களின் இஷ்டத்திற்கு
  விட்டுவிடவேண்டும்…. அப்போது தான் அவர்கள் தானாக தட்டுத்தடுமாறி
  முட்டிமோதி வளர்வார்கள்…. அதுபோன்ற வளர்ச்சி தான் அபரிவிதமாக இருக்கும்….
  நாம் பார்த்து பார்த்து அங்குசெல்லாதே இங்குசெல்லாதே விழுந்துவிடுவாய்
  என்று தடைபோட்டு கொண்டே இருந்தால் முழுமையான வளர்ச்சி குழந்தைகள்
  அடையமுடியாது…. இயற்கையோடு ஓட்டி ஒன்றி குழந்தையை வளர்க்கவேண்டும்….
  அதுதான் அவர்களுக்கு தன்னம்பிக்கையோடு கூடிய வளர்ச்சியை கொடுக்கும்…
  தெளிவாக சொன்ன தங்களுக்கு பாராட்டுக்கள்….

  Rajaji Rajagopalan நீங்கள் அனுபவ மூலம் கற்ற சிக்கலான Child psychology-குழந்தை உளவியலை மிகவும் எளிமையாக அதேவேளை நடைமுறைப்படுத்தக்கூடியவாறு கவிதை வரிகளால் வரைந்திருக்கிறீர்கள். இப்படியான முயற்சிகளால் இன்றைக்காலப் பெற்றார்கள் இதனை இலகுவாக விளங்கவும் கடைப்பிடிக்கவும் முடிகிறது. நல்ல ஆக்கம். வரவேற்கிறேன்.

  மன்னார் அமுதன் :- நல்ல பாடல்… நல்ல முயற்சி

  Seeralan Vee :- //எப்போதும் உதவினால்
  எதிர்பார்ப்பு உருவாகும்.//…………….உண்மைதான் எதிர்பாப்பு இல்லாத முயற்சி என்றும் தோற்காது மிக அழகிய வரிகள் வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: