47. உதயவலம்.

lotous

உதயவலம்.

 

மலர்காவில் வண்டமர்ந்ததும்

மயக்கத்தில் தேனேந்தும்.

முறுவலிலே தோய்ந்திடும்

முயக்கத்தில் மலரழகுறும்.

 

முக்குளித்த வெட்கத்தால்

முகில்கள் சிவந்து

முகவுரைக்க, கதிரவன்

முகம் பொன்னானது.

 

அள்ளிருள் மறைய

புள்ளினப் பூபாளம்.

உள்ளலுடன் கன்றினம்

துள்ளல் தாயிடம்.

 

மண்ணுய்யக்  கஞ்சரன் 

மண்டல யாத்திரையேகினான்.

வண்ண ஓவியத்தின்

கண்குளிர் வானம்.

 

கமலங்கள் முகம் மலர

கலகலத்தோடும் நீராட

காற்று தென்றலாய் தடவ

வேற்று நாளொன்று புலருது.

 

தடுக்கவியலா ஊர்வலம்.

எடுக்கவியலா ஒளிவலம்.

வடுக்களில்லாக் கொடைவலம்.

விபாகரன் உதயவலம்.

 

(அள்ளிருள் – கும்மிருட்டு. உள்ளல் – மகிழ்தல்.  விபாகரன், கஞ்சரன் -சூரியன்.)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-2-2013.

 

இதனோடொத்த பதிவுகள்:-  https://kovaikkavi.wordpress.com/2012/02/18/31-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0/

 

 

https://kovaikkavi.wordpress.com/2011/03/04/227-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87/

 

https://kovaikkavi.wordpress.com/2010/07/01/4-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%87-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%87/

 

 

12720-22coloured

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. bganesh55
  பிப் 09, 2013 @ 00:55:36

  கொப்பளித்து சலசலத்துச் செல்லும் அருவி நீராய் வழிந்து மனதைக் குளிர்விக்கிறது உங்கள் தமிழ் வேதாம்மா. தொடருங்கள் நீங்கள். உங்களைத் தொடர்கிறேன் நான்! மிக்க மகிழ்ச்சி!

  மறுமொழி

 2. VAI. GOPALAKRISHNAN
  பிப் 09, 2013 @ 02:00:16

  //உள்ளலுடன் கன்றினம் துள்ளல் தாயிடம்.//

  //வண்ண ஓவியத்தின் கண்குளிர் வானம்//

  சிறப்பான வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். .

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 09, 2013 @ 03:28:53

  அழகு வரிகள்…

  மறுமொழி

 4. seeralanvee
  பிப் 09, 2013 @ 05:25:07

  முக்குளித்த வெட்கத்தால்

  முகில்கள் சிவந்து

  முகவுரைக்க, கதிரவன்

  முகம் பொன்னானது.

  அழகிய காட்சி ….வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. ranjani135
  பிப் 09, 2013 @ 05:51:04

  விபாகரனின் உதய வலத்தை கவிதையின் மூலம் ஓவியமாக எங்கள் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். அழகான வார்த்தை கோர்வைகள். உங்கள் கவிதைகள் மூலம் புதிது புதிதாக தமிழ் வார்த்தைகளையும் கற்றுக் கொள்ளுகிறோம்.

  வாழ்த்துகள் சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 15, 2013 @ 21:51:16

   ”..உங்கள் கவிதைகள் மூலம் புதிது புதிதாக தமிழ் வார்த்தைகளையும் கற்றுக் கொள்ளுகிறோம்…”

   good. மிக நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள் கருத்திடலிற்கு.
   இறை ஆசி நிறையட்டும்..

   மறுமொழி

 6. sujatha
  பிப் 09, 2013 @ 06:28:09

  அள்ளிருள் மறைய

  புள்ளினப் பூபாளம்.

  உள்ளலுடன் கன்றினம்

  துள்ளல் தாயிடம்.

  அருமை…..”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 7. நாயகி கிருஷ்ணா
  பிப் 09, 2013 @ 09:02:29

  முக்குளித்த வெட்கத்தால்
  முகில்கள் சிவந்து
  முகவுரைக்க, கதிரவன்
  முகம் பொன்னானது…………….
  அருமை அம்மா தங்கள் பணி தொடரட்டும்

  மறுமொழி

 8. கோவை கவி
  பிப் 10, 2013 @ 10:53:10

  IN FB:-

  Mageswari Periasamy இரயில் பயணத்தின் போது ஜன்னலோர இருக்கையில் அமர்கையில் இதமான தென்றல் நம் உடலை ஊடுருவி ஒரு ஏகாந்தத்தை ஏற்படுத்தும். அந்த உணர்வு ஏற்படுகிறது தங்களின் கவிதையைப் படிக்கையில் தமிழ் மொழியில் உள்ள வார்த்தைகளை என்னம்மாய் பயன்படுத்தியுள்ளீர்கள். பிரமித்து நிற்கின்றேன் தோழி. இது முதல் தடவை அல்ல. பலமுறை இந்த உணர்வு ஏற்பட்டுள்ளது தங்கள் பதிவில் எனக்கு. வாழ்க வளமுடன்.

  Vetha ELangathilakam @ mageswary. …இப்படி உணர்வுகள் அனைவரும் பெற வேண்டுமென்று வருந்தி வருந்தி எழுதுவேன். என் கணவருக்கு நன்றி கூற வேண்டும். எந்தத் தொல்லையுமின்றி எழுதுகிறேன். தங்களைப் போன்றவர் வார்த்தைகள் நிறைந்த உயிர்ச்சத்தாக இருக்கிறது. நிமிர்ந்து அமர்ந்து இன்னும் முயற்சிப்பேன் மிக நன்றி சகோதரி.

  மறுமொழி

 9. கோவை கவி
  பிப் 10, 2013 @ 10:54:52

  IN FB:-
  Rajaji Rajagopalan முயக்கத்தில் மலரழகுறும்…//
  புள்ளினப் பூபாளம்…//
  கஞ்சரன் மண்டல யாத்திரையேகினான்…//
  வேற்று நாளொன்று புலருது…//
  உதயம் வலம் வருவதை நேரில் மனதார ரசித்ததால் உண்டான உணர்வுகளைச் செம்மையாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றிகளும் வாழ்த்துகளும் மேலைப் புலத்திலிருந்து, அன்பன் ராஜாஜி

  Vetha ELangathilakam @ Rajaji…Thank you so much and god bless you.

  மறுமொழி

 10. பழனிவேல்
  பிப் 12, 2013 @ 05:39:37

  “முக்குளித்த வெட்கத்தால்
  முகில்கள் சிவந்து
  முகவுரைக்க, கதிரவன்
  முகம் பொன்னானது.”

  காட்சிக் கவிதை மிகவும் கவர்ந்தது.

  கோவை கவியின்
  கோர்வை வரிகள்
  மிக அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 15, 2013 @ 21:54:06

   ”..கோவை கவியின்
   கோர்வை வரிகள்
   மிக அருமை….”’

   மிக நன்றியும், மகிழ்வும் சகோதரா பழனிவேல் தங்கள் கருத்திடலிற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்..

   மறுமொழி

 11. கோவை கவி
  பிப் 08, 2016 @ 20:49:59

  Muthulingam Kandiah:- “தடுக்க வியலா ஊர்வலம்.. எடுக்க வியலா ஒளிவலம்” அற்புதமான கரு…. ஆதவன் பவனி .அழகிய கமல தடாகம்….செம்மஞ்சள் வானம்.. சிலை வடிவில் குன்றுகள்….விடிவு கானா இலைகள்.. இதுதான் காட்சியின் அழகு……இப்பாடலில் இரு இடத்தில் ஆதவன் என்ற சொல் இருக்கிறது.எனவே சூரியனை குறிப்பிடும் இன்னொரு சொல்லை பயன்படுத்தி இருந்தால் அழகாக இருக்கும்
  February 9, 2013 at 1:40am · Unlike · 2

  Ramadhas Muthuswamy // முக்குளித்த வெட்கத்தால்
  முகில்கள் சிவந்து
  முகவுரைக்க, கதிரவன்
  முகம் பொன்னானது.// …. மிகவும் அருமை!!!
  February 9, 2013 at 5:31am · Unlike · 2

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- “மண்ணுய்யக் கதிரவன்
  மண்டல யாத்திரையேகினான்.
  வண்ண ஓவியத்தின்

  கண்குளிர் வானம்.

  ****** அற்புதமான காட்சிகள்!! வாழ்த்துக்கள் அம்மா!!
  February 9, 2013 at 6:11am · Unlike · 4

  மறுமொழி

 12. கோவை கவி
  பிப் 08, 2016 @ 20:51:14

  Seeralan Vee :- முக்குளித்த வெட்கத்தால்
  முகில்கள் சிவந்து
  முகவுரைக்க, கதிரவன்
  முகம் பொன்னானது………………………….அழகிய காட்சி ….வாழ்த்துக்கள்
  February 9, 2013 at 6:23am · Unlike · 3

  Ganesalingam Ganes Arumugam :- மலர்காவில் வண்டமர்ந்ததும்

  மயக்கத்தில் தேனேந்தும்.

  முறுவலிலே தோய்ந்திடும்

  முயக்கத்தில் மலரழகுறும்.
  February 9, 2013 at 7:31am · Unlike · 2

  Vetha Langathilakam :- @ Mythulingam.K மிக்க மிக்க நன்றி சகோதரா. ஓரு கதிரவனை கஞ்சரன் என்று மாற்றியுள்ளேன். அத்துடன் வலையில் இது போன்ற இணையான பதிவு என்று சூரியன் பற்றிய 3 பதிவுகளை எடுத்து இணைப்பையும் சேர்த்துள்ளேன். இவை மிக நல்ல பதிவுகள். ஒன்றில் கதிரவனின் பல பெயர்களையும் கவிதையில் இணைத்துள்ளேன். இதை இங்கு தகவலாகவே தந்துள்ளேன். ஓரு கவிஞரின்- எழுத்தாளரின் தந்தையன்றோ நீங்கள்.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 13. கோவை கவி
  பிப் 08, 2016 @ 20:52:09

  Abi Raj :- மண்ணுய்யக் கஞ்சரன்
  மண்டல யாத்திரையேகினான்.
  வண்ண ஓவியத்தின்
  கண்குளிர் வானம்.///படமும் கவிதையும் அழகு
  February 9, 2013 at 10:54am · Unlike · 1

  Loganadan Ps :- கவிதையும் சித்திரமும் அபாரம். நன்றி. வாழ்த்துக்கள்

  மறுமொழி

 14. கோவை கவி
  பிப் 08, 2016 @ 20:53:49

  Aathi Parthipan :- இனிமையான கவிதை அருமை
  February 9, 2013 at 5:59pm · Unlike · 1

  Vetha Langathilakam :- mikka nanry ஆதி பார்த்தீபன் . Have a wonderful sunday… Here in Denmark saterday 18.09pm .
  February 9, 2013 at 6:09pm · Like · 1

  Vetha Langathilakam:- @ mageswary. …இப்படி உணர்வுகள் அனைவரும் பெற வேண்டுமென்று வருந்தி வருந்தி எழுதுவேன். என் கணவருக்கு நன்றி கூற வேண்டும். எந்தத் தொல்லையுமின்றி எழுதுகிறேன். தங்களைப் போன்றவர் வார்த்தைகள் நிறைந்த உயிர்ச்சத்தாக இருக்கிறது. நிமிர்ந்து அமர்ந்து இன்னும் முயற்சிப்பேன் மிக நன்றி சகோதரி.
  February 9, 2013 at 6:15pm · Like · 2

  Vetha Langathilakam :- கருத்திட்ட அனைவருக்கும் மிக மிக நன்றி. இறையாசி அனைவருக்கும் கிட்டட்டும்.
  February 9, 2013 at 6:21pm · Like · 1

  Vetha Langathilakam :- @ Loganathan. இந்தப் படம் கூகிள் படம். ஆனால் கமலங்கள் என்பதால் இந்தக் கமலங்களை பச்சை தாமரை இலைகளை யான் கீறினேன். ..எப்பூடீ….டீ…!!!!!…
  மிக்க நன்றி கருத்திற்கு. இறையாசி நிறையட்டும்.
  February 9, 2013 at 6:29pm · Like

  மறுமொழி

 15. கோவை கவி
  பிப் 08, 2016 @ 20:56:34

  Suthan Sivasuthan *****
  // அள்ளிருள் மறைய
  புள்ளினப் பூபாளம்.
  உள்ளலுடன் கன்றினம்
  துள்ளல் தாயிடம். //
  மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு
  அழகிய தமிழில் வாசித்து மயங்கினேன் .
  மிகவும் சிறப்பு .
  February 9, 2013 at 6:51pm · Unlike · 1

  Vetha Langathilakam:-. Mikka nanry suthan. God bless you..
  February 9, 2013 at 9:52pm · Like · 1

  Vetha Langathilakam :- @ Rajaji…Thank you so much and god bless you.
  February 9, 2013 at 9:53pm · Like · 1

  Vathiri C Raveendran :- முக்குளித்த வெட்கத்தால்

  முகில்கள் சிவந்து//

  முகவுரைக்க, கதிரவன்

  முகம் பொன்னானது.//
  February 10, 2013 at 2:43am · Unlike · 2

  Verona Sharmila:- தடுக்கவியலா ஊர்வலம்.
  எடுக்கவியலா ஒளிவலம்.
  வடுக்களில்லாக் கொடைவலம்….See More
  February 10, 2013 at 6:12am · Unlike · 3

  Genga Stanley:- nalla kavithai paraddukkal.
  February 22, 2013 at 12:08am · Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: