5. கலையும், கற்பனையும்(கைவினை)

sweater 047

பால் வளையம்.

 

பொழுது போக்குக் கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் வெள்ளை நிறத்தில் வளையங்கள், இதயம் உரு, பந்து – பல அளவுகளில் பாரமற்ற (பெளெமிங்கோ) எனும் கை வினைகளுக்குரிய பொருள் வாங்கலாம். (கண்ணாடிப் பொருட்கள் பொதியாக அனுப்பும் போது பாவிக்கும் ஸ்பொஞ் போன்ற வகையானது. எனக்கு சரியானப் பெயர் கூறத் தெரியவில்லை) விளங்காவிடில் கீழே படத்தில் காணலாம்.

சிக்சக் என்று கூறும் (பல்லுப் பல்லாக வெட்டும்) கத்தரிக்கோலால் பல வகை நிறத்துணிகளை ஒரு அங்குல நீள அகலத்தில் சிறு  சிறு சதுரங்களாக வெட்டி வைக்கவும். (படத்தில் காணுங்கள்).

sweater 046

 

 படத்தில் உள்ள கருவியின் கூரிய நுனியை வெட்டிய துணியின் நடுவில் வைத்து, கருவியோடு துணியைத் தூக்கி அந்த வளையம், அல்லது விரும்பிய உருவில் நெருக்கம் நெருக்கமாக அழுத்தி துணியை உள்ளே செலுத்த வேண்டும். அது அப்படியே நிற்கும். ஒரு சென்ரிமீட்டர் அளவு உள்ளே அழுத்தினால் மிகுதி வெளியே பூவாக விரியும். பூவாக விரியும் இடம் விட்டு அடுத்ததைச் உள் செலுத்தலாம்.

சுவரில் தொங்கவிட சிறு கம்பியை உள்ளே வளைத்துச் செருகலாம்.

இதை டெனிசில் பால் வளையம் என்று கூறுவோம். இங்கு நான் கூறுவது (படத்தோடு) துணி வேலை மட்டும் தான்.

இது எனது வேலையிடத்தில் பிள்ளைகளோடு செய்தது. அவர்களோடு நாமும் செய்து, நான் இப்போது என்னுடையதை வீட்டுச் சுவரில் மாட்டியுள்ளேன்.

நத்தார் நேரங்களிலும் நத்தாருக்குரிய பொருட்கள், நிறங்களோடு செய்வார்கள்.

வண்ண வண்ணப் பட்டிகளை (றிபன்) நிறங்களாகக் கலந்து சுற்றலாம்.

பொத்தான்கள் வளையத்தில் ஒட்டலாம். காய்ந்த பழவகைகள், பூக்கள், மிகச் சிறி பலூன் துண்டுகள் என்று கற்பனைக்கு ஏற்றபடி வளையத்தை – இதயத்தை – பந்தை அலங்கரிக்கலாம்.

இவை (வளையங்கள்) பல அளவுகளிலும் பெறலாம்.

பாலர் நிலையத்திலிருந்து பெரியவர்கள் வரை டென்மார்க்கில் இவ் வேலை பிரசித்தமானது.

முயன்று பாருங்களேன்.

சுலபமானது.

 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

10-2-2013.

 

 

valaiyammmm

 

 

 

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  பிப் 10, 2013 @ 13:12:43

  படங்களும் செய்முறை விளக்கங்களும் அழகோ அழகு. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. seeralanvee
  பிப் 10, 2013 @ 13:24:31

  அருமை ,நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும் உங்கள் ஓய்வு நேரங்கள் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  பிப் 10, 2013 @ 14:17:46

  கலையும், கற்பனையும்- கைவினை – மிக அழகு ..பாராட்டுக்கள்.

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  பிப் 10, 2013 @ 14:25:36

  செய்முறை விளக்கத்துடன் நல்ல பயனுள்ள பதிவு

  மறுமொழி

 5. maathevi
  பிப் 10, 2013 @ 14:39:46

  அழகிய கைவேலை. நல்ல விளக்கத்துடன் தந்துள்ளீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 16, 2013 @ 15:32:11

   ”…அழகிய கைவேலை. நல்ல விளக்கத்துடன் தந்துள்ளீர்கள்…..”
   கருத்திடலிற்கு மிக மகிழ்வும் நன்றியும் சகோதரி. Maathevi
   தெய்வத் திருவருள் நிறையட்டும்.

   மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  பிப் 10, 2013 @ 16:39:03

  சுவர்ஸ்மான முயற்சிதான்.

  மறுமொழி

 7. si va
  பிப் 11, 2013 @ 04:06:46

  செய்முறை விளக்கத்துடன் தெளிவாக விளக்கியதற்கு நன்றி நண்பரே

  என் தளம்
  சிவாவின் கற்றதும் பெற்றதும்

  மறுமொழி

 8. நாயகி கிருஷ்ணா
  பிப் 11, 2013 @ 07:47:15

  நல்ல விளக்கத்துடன் தந்துள்ளீர்கள்

  மறுமொழி

 9. பழனிவேல்
  பிப் 12, 2013 @ 05:41:33

  நல்ல முயற்சி.
  செய்முறை விளக்கம் அருமை.

  மறுமொழி

 10. ஸாதிகா
  மார்ச் 05, 2013 @ 12:01:46

  மிக அழகாக வடிவமைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 23, 2019 @ 12:23:49

  2013 year comments:-

  Loganadan Ps :- அருமை.நன்றி

  Ramadhas Muthuswamy :- மிகவும் அருமையான கைத்திறன் வேலைப்பாடுகள்! நன்றி!

  Verona Sharmila :- பழமையிலும் புதுமை காணும் அருமையான கைத்திறன் வேலைப்பாடுகள்!

  சிறீ சிறீஸ்கந்தராசா :- நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அம்மா!!

  Kalaimahel Hidaya Risvi :- மிகவும் அருமைநல்ல முயற்சி அருமையான கைத்திறன்வாழ்த்துக்கள் ..

  Seeralan Vee :- அருமை ,நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும் உங்கள் ஓய்வு நேரங்கள் வாழ்த்துக்கள்

  Aathi Parthipan :- நன்றாய் இருக்கு 🙂

  Naguleswarar Satha :- Porumaiyana kaivelai. Very nice.
  பட்டுக்கோட்டை ஒப்பிலான் பாலு இனிய வணக்கம் சகோதரி ..பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி .

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- சுவர்ஸமான முயற்சிதான்.

  Rajagulasingam Kanagasabai:- Nice idea.

  Dushanthikka Shuhumar :- பயனுள்ள குறிப்பு அம்மையாரே. நிச்சயம் முயற்சித்துப்பார்க்கிறேன். மிக்க நன்றி.

  Sujatha Anton:- கைப்பணி கலையாக மெருகூட்டியுள்ளதுடன், அடுத்தவரும் கற்றுக்கொள்ளும் முறையில் எடுத்துக்காட்டியமை அருமை…..
  நன்றிகள் !!! ‘கவிதாயினி வேதா”

  Abira Raj :- அருமை வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: