31. பா மாலிகை (வாழ்த்துப்பா, ) திலகவதி வைரவிழா.

அறுபது அகவை நிறைவு.
நறுமண ஆறு தசாப்தம்.
உறுதுணையாக ஐந்து பிள்ளைகள்.
இறுமாப்புடன் ஒன்பது பேரப்பிள்ளைகள்.
திலகவதி தர்மலிங்கத்தின் நாளிது.
அலங்கரிக்கிறார் சுமங்கலியாயின்று.
இலட்சணங்கள் பல நிறைந்தவர்.
இறைபக்தி துதிப் பாடலில் சிறந்தவர்.

12 x 18 - B copy

 

இன்னுமொரு வாழ்த்து.

 

 

திலகவதி வைரவிழா.

 

 

 

புங்கை நகரிலுதித்த பாசமான

புதல்வி செல்லமாய் ” மணி.”

வைரமுத்து நாகம்மாவின் மகளுக்கு

வைரவிழா! திலகவதி தர்மலிங்கத்திற்கு!

ஒன்பது உடன் பிறப்புகளுடன்

ஒளிர்ந்த நான்காவது பெண்ணாவார்.

ஒருங்கிணைந்து உறவாடும் அன்பானவர்.

ஓடியாடி உதவும் முயற்சியாளர்.

 

 

பண்ணோடு பதிகம் பாடி

பதக்கம் பெற்றார் சைவத் தமிழ்

பேரவையால். கூட்டுப் பிரார்த்தனையில்

பங்கெடுக்கும் பேரார்வப் பக்தை.

ஐந்து பிள்ளைகளிற்குத் தாய்.

ஓன்பது பேரப் பிள்ளைகளின் பாட்டி.

திருவாளர் தர்மலிங்கத்தின் துணைவி.

எங்களின் விளையாட்டுத் தோழி.

 

 

தோட்டக் கலையில் வல்லவர்.

நாடடுவார் பூக்கன்றுகளும். கரம்

பட்டிடாத நிலமுமில்லை. சமையலில்

கெட்டிக்காரி. பலரையும் சமாளிப்பார்.

அம்மா! சிரிக்க வைத்துச் சிரிப்பார்.

சும்மா விருக்காத சுறுசுறுப்பாளர்.

இன்பதுன்பங்களில் பங்கெடுக்கும் திலகமக்காவிற்கு

அறுபதாவது பிறந்தநாள் வாழ்த்து.

வாழிய பல்லாண்டு!…

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-2-2013.

 

 

 

humming-bird

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவியாழி கண்ணதாசன்
  பிப் 11, 2013 @ 23:06:51

  உங்களைப்போலவே நானும்
  உள்ளம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 12, 2013 @ 01:13:38

  மனமார்ந்த வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. VAI. GOPALAKRISHNAN
  பிப் 12, 2013 @ 01:42:30

  மிகவும் அருமையான வாழ்த்துப்பாக்கள். பாராட்டுக்கள். சம்பந்தப்பட்டோருக்கு அன்பான வாழ்த்துகள்..

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  பிப் 12, 2013 @ 02:15:25

  வாழ்த்துக்கள் அம்மையாருக்கு. அழகான வாழ்த்துக் கவிதை.

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  பிப் 12, 2013 @ 05:57:31

  இன்பதுன்பங்களில் பங்கெடுக்கும் திலகமக்காவிற்கு

  அறுபதாவது பிறந்தநாள் வாழ்த்து.

  வாழிய பல்லாண்டு!…

  மறுமொழி

 6. பழனிவேல்
  பிப் 12, 2013 @ 09:45:33

  அருமையான வாழ்த்துப்பா,
  அன்பான வாழ்த்துகள்..

  மறுமொழி

 7. தேவமைந்தன்
  பிப் 13, 2013 @ 06:25:32

  வாழ்த்துகள். விரிவான கருத்துரையொன்றை வேறோரிடத்தில் பதிந்துள்ளனன். வணக்கம். நன்றி. 🙂

  மறுமொழி

 8. Dhavappudhalvan
  பிப் 13, 2013 @ 08:48:01

  அகவை அறுபதைக் கடந்த
  அம்மை திலகவதி தர்மலிங்கம்
  அவர்களின் வைர விழாவிற்கு,
  சொற்களில் சுவைக் கொண்டு,
  பாவிலே இனிமைக் கொண்டு,
  கருத்திலே நயம் கொண்டு,
  மனத்திலே பாசம் கொண்டு,
  எண்ணத்தில் நிலைக் கொண்டு,
  வாழ்த்திய பாவுக்கு ஏற்றபடி
  வாழட்டும் பல்லாண்டு,
  நலமுடனும், மகிழ்வுடனுமென
  இணைந்தே வாழ்த்தினோம் உம்முடனே.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: