44. கவிதை பாருங்கள்(photo,poem)

 

 

elupai

உலுக்காமலே காலத்தில்
அலுக்காத வெண்மையில்
சிலுசிலுப்பாய் நிலத்தில்
பிலுக்கி போல்
இலுப்பைப்பூ உதிர்ந்து
கொலுவிருக்கும் அழகது
சலிப்பின்றிக் காண்பது.

(பிலுக்கி – பகட்டுக்காரி)

Beautiful-Blue-Rose-iPhone-4-Wallpaper[1]

ரமிட்ட ரோசாப் பதியனின்

வரமான மலர்கள் போல

தரமான உறவிணையுமென்ற

உரமான எண்ணம் தவறாகும்.

ல்ல வளர்ப்பாளனே பண்பாளன்

சொல்லும் தரமாய் வாழுவான்.

தில்லுமுல்லு உலகிலும் ஒரு

தொல்லையற்ற உறவாகுவான்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
16-2-2013.

295055xwh4xs0dkx

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  பிப் 16, 2013 @ 23:14:54

  இரு கவிதைகளும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html
  என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் [இறுதிப்பகுதி]

  மறுமொழி

 2. T.N.MURALIDHARAN
  பிப் 17, 2013 @ 00:04:50

  கவிதை நன்று.

  மறுமொழி

 3. Dr.M.K.Muruganandan
  பிப் 17, 2013 @ 01:37:29

  “நல்ல வளர்ப்பாளனே பண்பாளன்
  சொல்லும் தரமாய் வாழுவான். ”
  உண்மையான கருத்து
  நல்ல கவிதை.

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 17, 2013 @ 02:08:23

  இரண்டும் அருமை சகோதரி… பாராட்டுக்கள்…

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  பிப் 17, 2013 @ 07:10:45

  உரமிட்ட ரோசாப் பதியனின்
  வரமான மலர்கள் போல அழகான பதிவு ..பாராட்டுக்கள்..

  மறுமொழி

 6. விச்சு
  பிப் 17, 2013 @ 08:05:08

  அதுவாய் பூத்து உதிரும் எந்த பூவும் அழகுதான்.. உங்கள் கவிதை வரிகளைப்போல..

  மறுமொழி

 7. ootynews
  பிப் 17, 2013 @ 14:46:11

  பாராட்டுக்கள்..

  http://ootynews.wordpress.com/page/2/
  கணவனும், மனைவியும் பிரியாத மந்திரம் –

  மறுமொழி

 8. ranjani135
  பிப் 17, 2013 @ 17:40:39

  இலுப்பை பூ படமும், கவிதையும் அழகு! கற்றுக் கொண்ட புதிய வார்த்தை ‘பிலுக்கி’.

  கண்ணுக்குக் குளுமையான நீல ரோஜா போல தொல்லையற்ற உறவு மனதிற்கு அமைதி தரும் இல்லையா?

  அருமையான முத்துக்கள் கவிதை இரண்டும். பாராட்டுக்கள்!

  மறுமொழி

 9. தி.தமிழ் இளங்கோ
  பிப் 18, 2013 @ 18:03:45

  அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (19.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  மறுமொழி

 10. sujatha
  பிப் 19, 2013 @ 11:54:10

  இரு கவிகளும் அருமை…. வாழ்த்துக்கள்.!!!

  மறுமொழி

 11. பழனிவேல்
  பிப் 21, 2013 @ 10:08:24

  ‘பிலுக்கி’ எங்கள் ஊரில் பலரின் பயன்பாட்டுச்சொல்.மகிழ்ச்சி.
  இலுப்பை பூ கவிதை மிகமிக அருமை. ரசித்து மகிழ்ந்தேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2013 @ 16:01:42

   பிலுக்கி என்ற வார்த்தை இக்கவிதை எழுதும் போது தான் எனக்குத் தெரியும்.
   பழனி! நன்றியும், மகிழ்ச்சியும் கருத்திடலிற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: