48. நீருளி கொண்டு…(பாமாலிகை (இயற்கை)

556879_304973169592513_1324975807_n

நீருளி கொண்டு…

லைக்குன்றில் நீருளி கொண்டு

விலையின்றிக் கவியோயாது செதுக்குகிறாய்!

கற்பாறையில் கவின் கவியெழுதும்

அற்புத நீரூற்றேயுன் அழகால்

இத்தரையில் ஆழக்குழி பறிக்கும்

ஆற்றலென்ன, பாயும் வேகத்தில்!

அற்றமும் ஆக்கமுமொரு சேரும்

உற்சவத் திருமூர்க்கம் நீயன்றோ!

அவிழ்த்துக் கொட்டியுதறும் வயிரமணிகளோ!

கவிழ்த்துக் கொட்டிய நீர்பாலோ!

உய்ய்….யென்றுலகில் கண்ணாடி நீர்

பெய்யுமோசையிசை பயங்கர ஓங்காரம்!

மெய்யே! நீத்தாண்டவம் தான்!

செய்யும் நீர்தவமே தான்!

மெய்சிலிர்க்கும் அழகிய நர்த்தனமே!

உய்தலுலகம் உன் தவப்பலனே!

(அற்றம் – அழிவு.   உற்சவ – ஆசைப்பெருக்கம்)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

18-2-2013.

barbluea

Advertisements

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவியாழி கண்ணதாசன்
  பிப் 19, 2013 @ 00:36:46

  நன்று

  மறுமொழி

 2. PKandaswamy
  பிப் 19, 2013 @ 00:50:50

  ரசித்தேன்.

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  பிப் 19, 2013 @ 02:38:13

  செய்யும் நீர்தவமே தான்!

  மெய்சிலிர்க்கும் அழகிய நர்த்தனமே!

  உய்தலுலகம் உன் தவப்பலனே!

  அருவியாய் பொழிந்தது
  அருமையான கவிதை ..பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2013 @ 16:05:19

   ”..உய்தலுலகம் உன் தவப்பலனே!

   அருவியாய் பொழிந்தது
   அருமையான கவிதை..”
   சகோதரி மிக நன்றியும், மகிழ்ச்சியும் கருத்திடலிற்கு.
   இறைவன் ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  பிப் 19, 2013 @ 03:55:11

  வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள் ஐயா..

  http://blogintamil.blogspot.in/2013/02/2.html

  மறுமொழி

 5. ranjani135
  பிப் 19, 2013 @ 05:57:34

  //அவிழ்த்துக் கொட்டியுதறும் வயிரமணிகளோ!

  கவிழ்த்துக் கொட்டிய நீர்பாலோ!//

  கவிதை படிக்கும்போதே அருவி நீர் பெருகிப் பாயும் ஓசையும் கேட்கிறது சகோதரி!

  இன்று உங்களுடன் சேர்ந்து நானும் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
  பாராட்டுக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2013 @ 16:29:29

   நன்றியும், மகிழ்ச்சியும் கருத்திடலிற்கு.
   ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

   இன்று உங்களுடன் சேர்ந்து நானும் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
   பாராட்டுக்கள்!

   மறுமொழி

 6. Menaka Subburathinam
  பிப் 19, 2013 @ 08:17:46

  நீர் உளி கொண்டு செதுக்கினீரா !!
  நீவிர் புகல் உரைக்கவேண்டா.
  நீர் ஒலி கொண்டோ செதுக்கி உள்ளீர்கள்.

  அத்துணை மென்மை
  அழகோ அழகு
  அடி எங்கும் சிறப்பு.
  ஆடுவதென் மனசு.

  அப்பு என்றாலே நீர். அதை நீவிர்
  அற்புதமெனவும் உரைத்திடுவீர் என்றால்
  எப்புலம் சென்று அப்புகழ் உரைப்பேன் ?

  நல்லதொரு நீர் வீழ்ச்சி இது.
  நான் இனி தினம் வருவேன்.
  நீராடுவேன்.

  சுப்பு தாத்தா.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 19, 2013 @ 15:48:11

   மிக்க சந்தோசம் சுப்பு தாத்தா, நன்றியும் கூட. என்ன குளப்புறீங்களே! (குளப்புகிறீர்களே! அது பேச்சுத் தமிழ்.)சுப்புத் தாத்தா – மேனகா.
   கருத்துடன் அருமைத் தமிழ் வரிகள்.
   ரசித்தேன். இனிய வாழ்த்து.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

   • Menaka Subburathinam
    பிப் 19, 2013 @ 16:30:28

    இதுவரை குழப்பவில்லை. இனி ஒருவேளை குழப்புவேனா என்றும் தெரியவில்லை.
    மற்றும் குழப்புதல் என்றால். கன்ஃப்யூசிங். குளப்புதல் என்று வார்த்தை தமிழில் இல்லை.
    எனது இயற்பெயர் சுப்பு ரத்தினம். பள்ளிப்பெயர்; சூரி.
    மனைவி யின் வீட்டுப்பெயர்: மேனகா. ( 1940 ம் வருடம் வந்த மேனகா படம் எம்.கே.டி. நடித்தது. அதை பார்த்து விட்டு
    அவள் தந்தை அந்தப்பெயர் தான் வைக்கவேண்டும் என்று அடம் பிடித்தாராம்)
    பள்ளிப்பெயர்: மீனாட்சி. ( இதுவரை எனக்கு ஆட்சிப்பொறுப்பே கிடைக்கவில்லை)
    இரண்டும் சேர்த்து தனது முக நூலில் மேனகா சுப்பு ரத்தினம் என இட்டுள்ளோம்.
    தங்களது வேர்டுப்ரஸ்ஸில் பின்னூட்டம் இடுவதும் விஜய் டி.வி.யில் அவள் தொடர் முடியும் என நம்புவதும்
    ஒன்று தான். இரண்டுமே நடவாதது. ஆதலினால் தான் முக நூல் வழியே வலைக்குள் வந்தேன்.

    சுப்பு தாத்தா. ( நிசமாவே தாத்தா தான். வயது 72 )
    மீனாட்சி பாட்டி. ( வயது 71)

   • கோவை கவி
    பிப் 22, 2013 @ 16:36:45

    @ Menaka,,,,குளப்புதல் என்று வார்த்தை தமிழில் இல்லை.
    சரி 25 வருடங்கள் டெனிசோடு வாழ்ந்த பரிசு இது.
    முன்பு இதெல்லாம் மாறாது. இப்போது அவ்வப்போது அகராதி பார்க்கவும் தேவையாக உள்ளது.குழப்பம் தான். மிக்க நன்றி தாத்தா.

 7. mahalakshmivijayan
  பிப் 19, 2013 @ 10:45:00

  ஒவ்வொரு வார்த்தையையும் கோர்த்து இருக்கும் விதம்,படிப்பதற்கு , குற்றால அருவியில் குளித்தது போல் மெய் சிலிர்ப்பு ஊட்டுகிறது! மெய் மறந்து படித்து ரசித்தேன் 🙂

  மறுமொழி

 8. kuttan
  பிப் 19, 2013 @ 11:14:47

  அருவியின் அழகு கொட்டும் தண்ணீரில் மட்டுமல்ல;பெருகும் சொற்களிலும்!

  மறுமொழி

 9. கவிஞா் கி. பாரதிதாசன்
  பிப் 19, 2013 @ 23:01:37

  வணக்கம்

  நீரும் பாலும் என்ற பொருளில் நீா்பால் என எழுதலாம்

  நீரால் ஆகிய பால்
  நீரை உடைய பால் என்ற பொருளில் நீா்ப்பால் என மிகுத்து எழுதாலாம்

  நீா் என்று சிலா் உயா்நிலையை உரைப்பா்! இங்கு நீா் தவறாகும்
  நீவீா் என்றே உயா்திணையை உரைக்க வேண்டும்

  அன்புடன்

  கவிஞா் கி.பாரதிதாசன்

  மறுமொழி

 10. பூங்குழலி !!!!
  பிப் 20, 2013 @ 13:41:14

  அருவியாய் பொழிகிறது அன்னையே உம் கவிதையும் இதில் நனைந்து கொண்டே இருக்க எமக்கு ஆசையும் கூட அருமையான கவிதை ..பாராட்டுக்கள்..
  பூங்குழலி !!!!

  மறுமொழி

 11. பழனிவேல்
  பிப் 21, 2013 @ 10:03:56

  “மலைக்குன்றில் நீருளி கொண்டு
  விலையின்றிக் கவியோயாது செதுக்குகிறாய்!
  கற்பாறையில் கவின் கவியெழுதும்”

  சொற்களின் அழகால்
  அருவியின் அழகு
  மேலும் அழகு.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2013 @ 17:55:07

   ”..சொற்களின் அழகால்
   அருவியின் அழகு
   மேலும் அழகு….”

   மிக மகிழ்ச்சியும் நன்றியும் பழனிவேல்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 12. sasikala
  பிப் 25, 2013 @ 06:05:15

  கொட்டும் அருவி அழகா ?
  தங்கள் வார்த்தை விழுந்த விதம் அழகா ?
  என்னென்று அறியாமல் விழிக்கிறேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: