32. மரபுப் பாமணி கிரிகாசனுக்கு வாழ்த்து.

823386_511467628892010_1829287175_o

மரபுப் பாமணி கிரிகாசனுக்கு வாழ்த்து.

 

 

பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள்

அரிசு அல்ல, அரிய ஏற்பு.

உரித்து உனக்குன் உரவு தமிழால்.

வரித்திடட்டும் உன் மாதிரியைப் பலர்.

 

 

கரித்திடும் வரிகள் எழுதுவோரும் சிறிது

கரிசனையாயுன் வரிகள் வாசிக்கட்டும்.

தரிப்புடன் தவறாது தம்மை மாற்றட்டும்.

விரிக்கட்டும் நற் தமிழ் – சிறகுகளை.

 

 

உன் கவிதைத் தொகுப்புகள் கவர்ந்தது

என்னை.  என் வலையில் உள்ள

வாழ்வியற் குறட்டாழிசை, வே. ஆத்திசூடி

வேதாவின் மொழிகளென தொகுக்க ஆசை.

 

 

தூண்டுதல் ஆகிறது பிறரிற்கு எழுத்துலகில்

தூவப்படுகையில் இவைகள். முயற்சியுள்ளம்

தூருதல் ஆவதில்லை வாழ்வில் என்றும்.

தூவுகிறேனின்ப வாழ்த்து கவிஞர் கிரிகாசனிற்கு.

 

 

பார்க்கின்சன் நோயில் அவதியுறும் இவர்

கோர்க்கின்ற தமிழ் வரிகள் பிறர்

பார்க்கின்ற வகையில் அமைந்தது சிறப்பு.

வார்க்கட்டும் இறையருள் இவர் நலத்திற்காய்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

21-2-2013.

 

 

(அரிசு –வேம்பு./  உரவு – வலிமை. /தூருதல்- அடைபடுதல்.

தரிப்பு – பொறுமை. / கரித்தல் – எரித்தல், உறுத்தல், வெறுத்தல்)

 

 

இவரின் ஐந்து தொகுப்புகள் இருக்கும் இணைப்புஇதோ….http://www.tamilvimbam.com/kalki2.html

 

 

baloonz

 

 

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 22, 2013 @ 07:34:59

  விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்…

  மறுமொழி

 2. kuttan
  பிப் 22, 2013 @ 09:17:58

  //பார்க்கின்சன் நோயில் அவதியுறும் இவர்

  கோர்க்கின்ற தமிழ் வரிகள் பிறர்

  பார்க்கின்ற வகையில் அமைந்தது சிறப்பு. //

  வியந்து போற்றுகிறேன்,இறை அருள் துணை நிற்கட்டும்!

  மறுமொழி

 3. அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
  பிப் 22, 2013 @ 11:21:22

  தமிழுக்கு நீ சரியாசனம்; தமிழே நீதான் கிரிகாசானாய்; வாழ்த்துகள்

  மறுமொழி

 4. கோமதிஅரசு
  பிப் 22, 2013 @ 14:21:44

  பார்க்கின்சன் நோயில் அவதியுறும் இவர்

  கோர்க்கின்ற தமிழ் வரிகள் பிறர்

  பார்க்கின்ற வகையில் அமைந்தது சிறப்பு.

  வார்க்கட்டும் இறையருள் இவர் நலத்திற்காய்.

  மரபுப் பாமணி கிரிகாசன் அவர்கள் இறைவன் அருளால் விறைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. கவியாழி கண்ணதாசன்
  பிப் 22, 2013 @ 17:08:36

  நானும் வாழ்த்துகிறேன் உங்களைபோல

  மறுமொழி

 6. malathi
  பிப் 23, 2013 @ 09:42:59

  மிகவும் சிறந்த பதிவு பாராட்டுகள்

  மறுமொழி

 7. கோவை கவி
  பிப் 23, 2013 @ 21:07:23

  மிக்க நன்றியும் மகிழ்வும் தங்கள் கருத்திற்கு.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: