19. சந்த மொழியில் தினம்….

murugan5

சந்த மொழியில் தினம்….

 

தந்தைக்குத் தமிழ்  உரைத்த முருகா

சிந்தைக்கு மகிழ்வு தர வருக!

முந்தைப் பழைய தமிழ் உயர

எந்தனுக்கும் தமிழ் செழிப்பு தருக!   (தந்தைக்கு)

 

வந்த இடத்து மொழி சிறப்பு.

சொந்த மொழி மறத்தல் நகைப்பு.

கெந்தும் தமிழ் நிலையால் தவிப்பு

உந்தன் அருள் தனையே நிரப்பு.   ( தந்தைக்கு)

 

சந்த மொழியில் தினம் உன்னை

சிந்து பாடித் தொழ என்னை

சுந்தரத் தமிழ் கடலில் நீந்த

செந்தமிழ் முருகா நீ அருள்வாய்!.   (தந்தைக்கு)

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

2-11-2005.

 

end1

Advertisements

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  பிப் 27, 2013 @ 22:12:46

  அருமையான அழகான சந்த மொழிப்பாடல். பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. மகேந்திரன்
  பிப் 27, 2013 @ 22:43:25

  இனிய வணக்கம் அம்மா..
  நலமா??
  விடுமுறையில் இருந்ததால்
  வலைப்பக்கம் வரவில்லை…

  மெருகான
  முருகக் கடவுளுக்கு
  உருகிப்பாடிய
  இனிய பாமாலை அழகு…

  மறுமொழி

 3. Dr.M.K.Muruganandan
  பிப் 28, 2013 @ 02:42:53

  “வந்த இடத்து மொழி சிறப்பு.
  சொந்த மொழி மறத்தல் நகைப்பு. ”
  நன்றாக இருக்கிறது

  மறுமொழி

 4. தி.தமிழ் இளங்கோ
  பிப் 28, 2013 @ 03:34:26

  // சந்த மொழியில் தினம் உன்னை
  சிந்து பாடித் தொழ என்னை
  சுந்தரத் தமிழ் கடலில் நீந்த
  செந்தமிழ் முருகா நீ அருள்வாய்!. //

  சந்தமொழியில் சிந்துபாடி, சுந்தரத் தமிழில் செந்தமிழ் முருகனைத் துதித்த தமிழ் நெஞ்சமே வாழ்க!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 01, 2013 @ 08:23:45

   மிக்க நன்றி சகோதரா.
   இறையாசி நிறையட்டும்.

   சகோதரா இப்போதும் முயற்சித்தேன் உங்கள் வலையில் கால் வைக்க.
   கிடு கிடுவென ஆடுகிறது. எனக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை.

   மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 28, 2013 @ 06:51:31

  அருமை…

  மறுமொழி

 6. ranjani135
  பிப் 28, 2013 @ 13:36:20

  வெளிநாடு போய் இன்னொரு மொழி கற்றாலும் தாய் மொழி மறவாத உங்களுக்கு நிச்சயம் கந்தனின் அருள் இருக்கும். நீங்கள் எழுதும் செந்தமிழ் கவிதைகளே இதற்கு சாட்சி.

  மறுமொழி

 7. mahalakshmivijayan
  மார்ச் 01, 2013 @ 05:15:20

  என்னையும் சுந்தர தமிழ் கடலில் நீந்த வைத்து விட்டீர்கள் சகோதரி! ‘சொந்த மொழி மறத்தல் நகைப்பு ‘ மிக உண்மையான வரி! வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 8. பூங்குழலி !!!
  மார்ச் 01, 2013 @ 11:34:31

  வந்த இடத்து மொழி சிறப்பு.
  சொந்த மொழி மறத்தல் நகைப்பு. ”
  நன்றாக இருக்கிறது…………………..
  மிக உண்மையான வரி!

  மறுமொழி

 9. raveendran sinnathamby
  மார்ச் 01, 2013 @ 14:24:42

  வந்த இடத்து மொழி சிறப்பு.

  சொந்த மொழி மறத்தல் நகைப்பு.

  கெந்தும் தமிழ் நிலையால் தவிப்பு

  உந்தன் அருள் தனையே நிரப்பு

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 02, 2013 @ 12:16:40

  மிக்க நன்றி சகோதரி…raveendran sinnathamby¨
  ‘இறையாசி நிறையட்டும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: