46. கற்பகம் – பனை.

458661_314978288606725_1853261243_o[1]

கற்பகம் – பனை.

கற்பகதரு பயனுயர் தரம்.

சொற்பதம் பெயருமுயர் தரம்.

உற்பத்தி புல்லினத் தாவர

அற்புதப் பேரினமாம் – வரம்!

னம் தோப்பினம் அருமை.

தனம் நாட்டின் பெருமை.

நெட்டை முப்பது மீட்டர்.

குட்டை வடலி பெயராம்.

(உண்பவை – பயன்)

பனம் பழம் – கிழங்கு

பனம் குருத்து – புழுக்கொடியல்

பனம் பூரான் – கருப்பட்டி

பனம் நுங்கு – கள்ளு

னை நார் – கயிறு, கடகம்.

பனை மட்டை வரிச்சு.(கருக்கு மட்டை)

பனையோலையால் வேலி – கூரை.

வனையலாம் வீட்டுப் பொருட்களும்.

பனை வளர்ந்து முதிர்ந்து

பயனாக பதினைந்து வருடங்கள்.

பனை முதிரோலை விலங்குணவு.

பனம் பதநீர் சுவையெனப் பல.

ட்டை – வைரம் கனம்(வலிமை).

பெட்டி பின்னும் ஓலை.

பாம்பு, காற்றாடி, விசிறி

பல பின்னி ரசிக்கலாம்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

3-2-2013.

 Nyt billede

 

 

4. கலையும், கற்பனையும்(கைவினை)

DSCF2348

அலங்கார மரக்குற்றி.

1985ம் ஆண்டளவில் றப்பர் மரக்குத்தியில் வர்ணம் பூசிய பூச்சினை (பெயின்ரிங்) இங்கு காண்கிறீர்கள்.

இது எனது தம்பி வீட்டில் அழகுக்காக அடுக்கி வைத்துள்ளார்.

எனது தம்பியும் என்னைப் போல கலை கற்பனைக் கைவண்ணங்களிலும், பாடுவதிலும் என்று பல திறமைகள் நிறைந்தவர்.

அம்மா அப்பாவோடு நாமெல்லாம் 20 வருடங்களுக்கும் மேலாக சித்திரை வருடப்பிறப்பு, தைப் பொங்கல்களிற்கு பொங்கிய சருவக் குடத்தை எடுத்து வந்து மினுக்கி அழகிற்கு வைத்துள்ளதைக் காண்கிறீர்கள். அத்துடன் நாம் ஊரில் சமையலறையில் பாவித்த செம்பு அதன் மேல் வைத்துள்ளார்.

அத்தோடு பூக்கூடையில் பூக்கள் அடுக்கியுள்ளார் இதுவும் அவரது கை வேலையே.

ஊரில் இரவுணவு முடித்து எல்லோரும் கூடியிருப்போம். கூப்பிடும் தூரத்தில் மாமி வீடும் இருக்கிறது. அவர்களும் வந்து விடுவார்கள். பின்பு நேயர் விருப்பம் தான். தம்பி ஆண்குரல் வரிகளும், நான் பெண் குரல் வரிகளுமாகப் பாட்டுக் கச்சேரி தான்.

சரி இவை நிற்க…..நான் விடயத்திற்கு வருகிறேன்.

எனது கணவர் 300 கெக்ரார் தேயிலை றப்பர் தோட்டத்தில் கட்டுப்பாட்டு அதிகாரி அல்லது நிர்வாக உத்தியோகத்தராக  இலங்கையில் பணி செய்தார்.( field officer in state plantatiom corparation- Srilanka ). றப்பர் மரங்களைப் பிடுங்கி விட்டு தேயிலைக் கன்றுகளை நட்டு வளர்த்துப் பயன் பெற்றனர்.

மரங்களைப் பிடுங்கி அதைத் துண்டு போடும் போது ஒரு மரக்குற்றியை  எமது வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.அதன் அழகைப் பார்த்து நான் 5-6 குற்றிகளாகத் தரும்படி கேட்டேன் இப்படி வர்ணம் பூசிப் பாவிக்கலாம் என்று.

rubber stole2

மாதிரியைப் பாருங்கள்.

இப்படி வித விதமான வண்ணம் பூசி வீட்டிற்கு வெளியே பூச்சட்டிகளை அதன் மேல் அடுக்கி வைப்பது, தேவையானால் முற்றத்தில் போட்டு அமர்வது என்று பாவித்தோம்.

பின்னர் கணவர் வேலையை விட்டு டென்மார்க் வரும் போது (1986ல்) நாமும் கொழும்பு வந்தோம்.  அப்போது தங்கை வீட்டில் எல்லாவற்றையும் வைத்தோம. தம்பி தனக்கு 2 போதும் என்று எடுத்துக் கொண்டு போனார். அது மட்டும் தான் இப்போது மிஞ்சியுள்ளது அலங்காரப் பொருளாக. (வர்ணங்கள் களன்றுவிட்டது.)

இது நினைவு வந்த போது தம்பியிடம் கேட்டேன் படம் எடுத்து அனுப்புவாயா என்று. உடனே எடுத்து அனுப்பினார்.

இன்று அதைப் பாவித்து இதை எழுதினேன்.

அவருக்கு மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன். Thank you so much Satha!.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

1-2-2013.

 

163664_469483907911_713827911_5799148_5756063_n

Next Newer Entries