7. அன்ராட்டிக்கா

feet

அன்ராட்டிக்கா

 

அன்ராட்டிக்கா வெண்பனி போலே

இன்றேன் குளிரவில்லை டென்மார்க்!

அன்றாடம் அதிக வெப்பத்தில்

நின்றாடிய மலேசியா விடுமுறையால்

டென்மார்க்கிற்கு வெற்றி வந்தார்.  (அன்ராட்டிக்கா)

 

உணரவில்லைத் தனது உடலை

உடல், கால், கைகளிற்கு

உறையிட்டு வாழ்ந்தார் டென்மார்க்கில்.

உல்லாசமாக அம்மா ஊரில்

உணர்ந்தார் ஆடையின்றி ஊடாடி.  (அன்ராட்டிக்கா)

 

கைகள் கால்களை நன்றாக

வைத்த கண் வாங்காது

அவதானித்தாராம். அம்மம்மா கால்களோடும்

அவதானித்தாராம். சிறுநீர் எங்கிருந்து

வருகிறது என்றும் பார்த்தாராம்.  (அன்ராட்டிக்கா)

 

பத்து மூன்று நாட்களங்கு.

சத்தான அனுபவங்கள் மலேசியாவில்

பத்து கோவிலில் முடியிறக்கி

பத்து படிகளிலும் தவழ்ந்தாராம்.

சொத்து எங்கள் வெற்றி.     (அன்ராட்டிக்கா)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

1-3-2013.

 

 

baby-items

 

 

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. bganesh55
  மார்ச் 02, 2013 @ 01:33:38

  வெற்றி உங்கள் கவிதைகளில் உலவுகிறார். உங்கள் அழகுத் தமிழுடன் எங்கள் மனங்களில் இடம் பிடிக்கிறார். பத்துக் கோயில்களில் முடியிறக்கினாரா…? எப்படிங்க? ஒரு கோயில்ல முடி இறக்கினாலே வளர ஒரு மாசமாயிடுமே!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 06, 2013 @ 20:50:18

   சகோதரா கணேஷ் முடிவெட்டிய பின் நான் ஓரு படமும் போடவில்லை. முடியுடன் உள்ள படமே போட்டேன். இனி வளரத்தான் போடுவேன்.
   தங்கள் கருத்திற்கு இனிய நன்றி. இறையருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 2. Rajarajeswari jaghamani
  மார்ச் 02, 2013 @ 02:06:26

  பத்து மூன்று நாட்களங்கு.

  சத்தான அனுபவங்கள் மலேசியாவில்

  பத்து கோவிலில் முடியிறக்கி

  பத்து படிகளிலும் தவழ்ந்தாராம்.

  சொத்து எங்கள் வெற்றி.

  வெற்றிக்கு வாழ்த்துகள்..

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 02, 2013 @ 02:53:27

  எப்படியோ… வெற்றிக்கு வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 02, 2013 @ 04:28:01

  வெற்றிக்கு வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. Dr.M.K.Muruganandan
  மார்ச் 02, 2013 @ 08:27:22

  சுவையான கவிதை

  மறுமொழி

 6. ranjani135
  மார்ச் 02, 2013 @ 11:05:44

  உங்கள் கவிதை மூலம் எங்கள் உள்ளங்களிலும் தவழும் வெற்றிக்கு ஆசிகள்!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 07, 2013 @ 18:16:07

   வெற்றிக்கு எல்லா ஆசியும் செல்லட்டும்.
   பிடித்தபடி நிற்கிறார், நடக்கிறார்.
   5-6 பற்கள் வந்து விட்டன. நறநறவென்று
   பற்களைக் கடிக்கிறார் பொழுது போக்காக.

   கருத்திடலிற்கு இனிய வாழ்த்தும் நன்றியும்.

   மறுமொழி

 7. maathevi
  மார்ச் 02, 2013 @ 12:24:28

  அழகிய கவிதை.

  மறுமொழி

 8. விச்சு
  மார்ச் 03, 2013 @ 01:08:10

  வெற்றிமீது வெற்றி வந்து என்னைச்சேரும்…

  மறுமொழி

 9. T.N.MURALIDHARAN
  மார்ச் 03, 2013 @ 01:51:37

  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.அந்தப் பிஞ்சுப் பாதங்கள் வெற்றியுடையதுதானே?

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 07, 2013 @ 18:20:47

   ”..அந்தப் பிஞ்சுப் பாதங்கள் வெற்றியுடையதுதானே?…”
   ஆம்!…வெற்றிக் குட்டியுடையதே!.
   Murali தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி சகோதரா.
   இறையருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 10. mahalakshmivijayan
  மார்ச் 03, 2013 @ 09:39:02

  குட்டி பையன் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙂

  மறுமொழி

 11. nayaki
  மார்ச் 04, 2013 @ 12:08:46

  குட்டி பையன் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  மறுமொழி

 12. பழனிவேல்
  மார்ச் 04, 2013 @ 13:05:21

  “உல்லாசமாக அம்மா ஊரில்
  உணர்ந்தார் ஆடையின்றி ஊடாடி. ”

  அழகை சொன்னீர்கள்…
  அதிலும் கடை அடி “சொத்து எங்கள் வெற்றி” அழகு.

  வெற்றி தொடரற்றும்…

  மறுமொழி

 13. கோவை கவி
  மார்ச் 07, 2013 @ 18:23:16

  தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி பழனிவேல்.
  இறையருள் கிடைக்கட்டும்

  மறுமொழி

 14. கோவை கவி
  மார்ச் 02, 2018 @ 17:05:51

  2013
  Vetha Langathilakam:- காலை வேளையில் ஊடகங்களில் பாடல்கள் போகும் போது நானும் என் கணவரும் ரசிப்போம். சில வரிகள் ‘பச்’ சென்று மனதில் ஒட்டி நாள் முழுதும் பவனி வரும். நேற்று வெற்றியும் வந்தார். இந்தப் பாடலும் மனதில் ஒட்டியது. அதன் விளைவு இது. அன்ராட்டிக்கா…….வெண்பனி போலே இன்று ஏன்…????? ….

  Verona Sharmila:- அருமை ..வரவேற்கத்தக்க புதிய சிந்தனை ..

  Mari Muthu :- இது வெற்றி பாடலா! அருமை.. //சிறுநீர் எங்கிருந்து
  வருகிறது என்றும் பார்த்தாராம். // இது அவனின் குசும்புதான?

  Vetha Langathilakam :- ஆம் இங்கு பஞ்சுப் பொதியில் சேகரிக்கப் பட்டு மாற்றி விடுகிறோம். நாங்களே தொலைபேசியில் வேண்டினோம் அவரை ஆடையின்றி அலைய விடுங்கள் வீட்டில் என்று. இவை பெறுமதியான அனுபவங்கள் அன்றோ!…

  Abira Raj :- அருமை

  கவிஞர் தாரை கிட்டு :- அருமை

  Ramadhas Muthuswamy:- // பத்து மூன்று நாட்களங்கு.
  சத்தான அனுபவங்கள் மலேசியாவில்
  பத்து கோவிலில் முடியிறக்கி…See more

  Loganadan Ps :- விரும்பி ரசித்தேன். அருமை. நன்றி

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- “பத்து மூன்று நாட்களங்கு.
  சத்தான அனுபவங்கள் மலேசியாவில்
  பத்து கோவிலில் முடியிறக்கி
  பத்து படிகளிலும் தவழ்ந்தாராம்.
  சொத்து எங்கள் வெற்றி!”
  அருமையான பதிவு அம்மா!! வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!

  கவிஞர் தாரை கிட்டு :- ஆன்மிகம்

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- “எங்கிருந்து
  வருகிறது என்றும் பார்த்த…” போது முகத்தில் பன்னீர் அபிசேகம் கிடைத்திருக்கும்.

  Vetha Langathilakam :- mmm…..

  Gowry Nesan :- மிக அழகான பாடல் ஒன்று. வாழ்த்துக்கள்!

  மிதயா கானவி :- நன்றானதே

  கவிஞர் தாரை கிட்டு:- அருமையான கவிதை

  Tharini Raj :- பத்து மூன்று நாட்களங்கு.
  சத்தான அனுபவங்கள் மலேசியாவில்
  பத்து கோவிலில் முடியிறக்கி
  பத்து படிகளிலும் தவழ்ந்தாராம்.
  சொத்து எங்கள் வெற்றி. // ஆஹா.. அருமை .. அருமை..

  Sivasuthan Sivagnanam ******
  // கைகள் கால்களை நன்றாக
  வைத்த கண் வாங்காது
  அவதானித்தாராம். அம்மம்மா கால்களோடும்
  அவதானித்தாராம். //
  ஆஹா … அனுபவித்து ரசித்தேன் .

  Nalayiny Thamarachselvan:- // . சிறுநீர் எங்கிருந்து
  வருகிறது என்றும் பார்த்தாராம்// MM!! haa haa.

  Sakthi Sakthithasan:- வாழ்த்துக்கள் சகோதரி
  2014
  Vetha Langathilakam:- @ nalayini இங்கு பஞ்சுப் பொதியில் சேகரித்து மாற்றுவது தானே!.
  நாங்கள் கேட்டுக் கொண்டோம் அவரை ஆடையின்றி வீட்டுள் திரிய விட.
  சிறுநீர் மனிதனைக் கையால் பிடித்து இழுத்து விளையாடினாராம்.
  மற்றவர்கள் கை கால்களைச் சேர்த்து தனது காலோடு பார்த்தாராம்.
  இங்கு பிறந்ததிலிருந்து காலுறை போட்டு மூடியிருந்ததே!
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: