264. மதிப்பும் மரியாதையும்..

you_give_respect_you_get_respect_by_gbillustrations-d5qzlbk

மதிப்பும் மரியாதையும்..

மதிப்பும் மரியாதையும்

சதிபதியாக உதிக்கும்.

பதிந்திடும் பிறப்போடும்.

வதியும் நல்வளர்ப்போடும்.

துதிக்குமுறவுப் பாதையில்

மதிப்புடை உறவு

போதிக்கும்  வாதிக்கும்

மோதிடும் நீதிக்காய்.

மூத்தோர் என்ற

பாத்தியதை   மரியாதை

பூத்தல் அருகுகிறது.

காத்திரமானவை அழிகிறது.

அதிக்கிரமம் புகுந்ததும்

சோதிக்கும் பாதிக்கும்

சாதித்துத் திட்டமிடும்.

நீதி வழுகிடும்.

கொதிக்கும் சூதை

சோதிக்கச் செய்யாது

சாதிக்க வேண்டும்

சோதியாய் ஒளிர.

(வதியும் – தங்குதல்.  பாத்தியதை  உரிமை.
அதிக்கிரமம் – நெறி தவறல், மீறுதல்.)

பா ஆக்கம் வேதா.இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

5-3-2013.

Nyt billede

Advertisements

36 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ARUNA SELVAME
  மார்ச் 05, 2013 @ 22:38:43

  கடைசி வரி அருமை கோவைக்கவி.

  மறுமொழி

 2. மகேந்திரன்
  மார்ச் 05, 2013 @ 23:28:28

  செல்லும் பாதையினிலே…
  ஒளியென விளங்கும்
  மூத்தோர் சொல்வார்த்தை
  சிரம்கொண்டு நடப்போம்…
  அவர்களின் மீதான
  மரியாதையும் மதிப்பும்..
  வளர்ப்போம்…

  அழகுக் கவிதை வேதாம்மா..

  மறுமொழி

 3. வே.நடனசபாபதி
  மார்ச் 06, 2013 @ 00:16:32

  தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

  மறுமொழி

 4. bganesh55
  மார்ச் 06, 2013 @ 00:47:14

  சாதிக்க வேண்டும் சோதியாய் ஒளிர… அருமை! வலைச்சரத்தில் இன்று உங்களைப் பற்றி பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

  மறுமொழி

 5. venkat
  மார்ச் 06, 2013 @ 01:39:45

  அருமையான கவிதை. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

  மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  மார்ச் 06, 2013 @ 02:21:10

  “கொதிக்கும் சூதை
  சோதிக்கச் செய்யாது
  சாதிக்க வேண்டும்
  சோதியாய் ஒளிர..”

  அருமையான வரிகள்

  மறுமொழி

 7. பழனிவேல்
  மார்ச் 06, 2013 @ 03:49:25

  “மதிப்பும் மரியாதையும்
  சதிபதியாக உதிக்கும்.
  பதிந்திடும் பிறப்போடும்.
  வதியும் நல்வளர்ப்போடும்.”

  “கொதிக்கும் சூதை
  சோதிக்கச் செய்யாது
  சாதிக்க வேண்டும்
  சோதியாய் ஒளிர.”

  அழகிய வரிகளின் அறிவுரை கவிதை அருமை.

  மறுமொழி

 8. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 06, 2013 @ 04:03:56

  அருமை… வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 9. mahalakshmivijayan
  மார்ச் 06, 2013 @ 04:47:42

  உங்கள் கவிதைகளை படித்து படித்து , நம் தமிழ் மொழியின் மேல் , உங்களுக்கு இருக்கும் தீராத காதல் இவற்றை எண்ணி எண்ணி , உங்கள் மேல் எனக்கு இருக்கும், மதிப்பும், மரியாதையும் கூடி கொண்டே போகிறது!!

  மறுமொழி

 10. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 06, 2013 @ 05:03:48

  //கொதிக்கும் சூதை

  சோதிக்கச் செய்யாது

  சாதிக்க வேண்டும்

  சோதியாய் ஒளிர.//

  அருமை. பாராட்டுக்கள்.

  மறுமொழி

 11. Rajarajeswari jaghamani
  மார்ச் 06, 2013 @ 14:22:38

  கொதிக்கும் சூதை

  சோதிக்கச் செய்யாது

  சாதிக்க வேண்டும்

  சோதியாய் ஒளிர.

  சாதிக்கத்தூண்டும் அருமையான வரிகள்..பாராட்டுக்கள்..

  மறுமொழி

 12. T.N.MURALIDHARAN
  மார்ச் 07, 2013 @ 00:35:24

  கவிதை நன்றி. புது வார்த்தைகள் நிறைய பயன்படுத்துவது வித்தியாசமாக உள்ளது

  மறுமொழி

 13. பூங்குழலி
  மார்ச் 07, 2013 @ 03:45:57

  அம்மா தங்களது ஒவ்வொரு

  பதிவை படிக்கும் பொழுது

  உங்கள் மீதான மதிப்பு மலையை போலே

  வளர்ந்து கொண்டே இருக்கிறது …….

  தங்களது தமிழ் வளர்ப்பு பணி தொடர வேண்டும்

  மறுமொழி

 14. கோவை கவி
  மார்ச் 07, 2013 @ 06:21:05

  In FB:—-
  Mageswari Periasamy wrote:-

  மிக நன்று.. வலிமை மிக்க தமிழ் வரிகள்.

  மறுமொழி

 15. கோமதிஅரசு
  மார்ச் 07, 2013 @ 13:08:45

  கொதிக்கும் சூதை

  சோதிக்கச் செய்யாது

  சாதிக்க வேண்டும்

  சோதியாய் ஒளிர.//

  அருமையான வரிகள்.

  என் வலைத்தளத்திற்குள் போக முடியவில்லை என்று சொன்னீர்கள் அல்லவா ! அதற்கு ஒரு வழி சொன்னார்கள் பதிவர் ஹுஸைனம்மா.
  அந்தவழிக்கு ஒரு லிங் அனுப்பி இருக்கிறேன் பாருங்கள். கீழே.முடிந்த போது என் வலை தளம் வாருங்கள்.

  http://mathysblog.blogspot.com/ncr

  மறுமொழி

 16. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 09, 2013 @ 16:40:17

  வணக்கம்
  வேதா,இலங்காதிலகம்

  துதிக்குமுறவுப் பாதையில்
  மதிப்புடை உறவு
  போதிக்கும் வாதிக்கும்
  மோதிடும் நீதிக்காய்.

  அருமையான வரிகள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 17. கோவை கவி
  மார்ச் 09, 2013 @ 17:30:33

  மிகுந்த நன்றியும், மகிழ்ச்சியும்
  ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

  மறுமொழி

 18. கோவை கவி
  மார்ச் 05, 2016 @ 14:30:26

  மகேந்திரன் பன்னீர்செல்வம்:- செல்லும் பாதையினிலே…
  ஒளியென விளங்கும்
  மூத்தோர் சொல்வார்த்தை
  சிரம்கொண்டு நடப்போம்…
  அவர்களின் மீதான
  மரியாதையும் மதிப்பும்..
  வளர்ப்போம்…

  அழகுக் கவிதை வேதாம்மா..
  March 6, 2013 at 12:25am · Unlike · 3

  அம்பாளடியாள் அம்பாளடியாள் :- சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் அம்மா .மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .
  March 6, 2013 at 12:53am · Unlike · 2

  தாரை கிட்டு :- அருமையான கவிதை
  March 6, 2013 at 3:25am · Unlike · 2

  Kalaimahel Hidaya Risvi :- கொதிக்கும் சூதை
  சோதிக்கச் செய்யாது
  சாதிக்க வேண்டும்
  சோதியாய் ஒளிர.அருமை
  March 6, 2013 at 6:15am · Unlike · 2

  மறுமொழி

 19. கோவை கவி
  மார்ச் 05, 2016 @ 14:33:19

  Ganesalingam Ganes Arumugam :- மூத்தோர் என்ற
  பாத்தியதை மரியாதை
  பூத்தல் அருகுகிறது.
  காத்திரமானவை அழிகிறது.
  March 6, 2013 at 8:52am · Unlike · 2

  Vetha Langathilakam:- @ மகேந்திரன் பன்னீர்செல்வம் I saw your Words in my blog .Thank you sssooooo…much. I am glad. God bless you.
  March 6, 2013 at 8:55am · Like · 1

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- “மதிப்பும் மரியாதையும்
  சதிபதியாக உதிக்கும்.
  பதிந்திடும் பிறப்போடும்.
  .வதியும் நல்வளர்ப்போடும்.
  அருமையான பதிவு!! வாழ்த்துக்கள் அம்மா!!
  March 6, 2013 at 9:51am · Unlike · 3

  Nadaa Sivarajah :- சாதிக்க வேண்டும்
  சோதியாய் ஒளிர….வாழ்த்துக்கள் !!
  March 6, 2013 at 10:28am · Unlike · 2

  Gowry Nesan :- மூத்தோர் என்ற
  பாத்தியதை மரியாதை
  பூத்தல் அருகுகிறது.
  காத்திரமானவை அழிகிறது.
  மிக அருமை!

  மறுமொழி

 20. கோவை கவி
  மார்ச் 05, 2016 @ 14:35:50

  Loganadan Ps :- எங்கள் பெற்றோரும், ஆசிரியர்களும் கொடுத்த பயிற்சியின் பலனை இன்று நாங்கள் அனுபவிக்கக் காரணமாக இருப்பது இந்த ‘மரியாதை’தான். அற்புதமான பதிவு. நன்றி
  March 6, 2013 at 6:48pm · Unlike · 2

  Kethesh Suresh:- · Friends with காதல்இளவரசன் பிரஷாந்த்
  மதிப்பும் மரியாதையும்-give and take.
  March 6, 2013 at 7:29pm · Unlike · 2

  Sakthi Sakthithasan :- அன்பினிய சகோதரியின் அருமையான படைப்பிற்கும், பகிர்விற்கும் நன்ரியோடு கூடிய வாழ்த்துக்கள்
  March 7, 2013 at 5:41am · Unlike · 2
  Suthan Sivasuthan *****:-
  மரியாதை என்பது இன்று தேடவேண்டியுள்ளது .
  அதை கொடுக்க முயல்பவர்கள் கூட கடைசியில் தாழ்த்தப்படுகிறார்கள் ….See More
  March 7, 2013 at 4:33pm · Unlike · 2

  Mageswari Periasamy :- அருமையான பதிவு சகோதரி. அனைவரும் இதன்படி வாழ கற்றுக் கொண்டால், வன்முறைக்கு இடம் இல்லாமல் போய் விடும். வாழ்த்துகள்… மேலும் தொடரட்டும்.
  March 8, 2013 at 4:36pm · Unlike · 1

  தாரை கிட்டு :- அருமையான் கவிதை

  மறுமொழி

 21. கோவை கவி
  மார்ச் 05, 2016 @ 14:37:33

  Ramadhas Muthuswamy :- மிகவும் அருமை!!!
  March 9, 2013 at 9:08am · Unlike · 1

  Vetha Langathilakam :- கருத்திட்டும், வாழ்த்தய அனைத்து உள்ளங்களிற்கும் இனிய நன்றியும். வாழ்த்துகளும்.
  இறையாசி நிறையட்டும்.
  March 9, 2013 at 9:46am · Like

  Venkatasubramanian Sankaranarayanan :- Vazhakkampol arumai
  March 9, 2013 at 10:15am · Unlike · 1

  Ramadhas Muthuswamy // துதிக்குமுறவுப் பாதையில்

  மதிப்புடை உறவு…போதிக்கும் வாதிக்கும்

  மோதிடும் நீதிக்காய்.// … மிகவும் அருமை!!!
  March 11, 2013 at 3:18am · Unlike · 1

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: