6. கலையும், கற்பனையும்(கைவினை)

P1040570

மணிகளால் உருவமைப்பு.

இது 3 வயதிற்கு மேற்பட்ட யாரும் செய்யும் கைவினை.

படத்தில் காண்பது பிளாஸ்ரிக் மணிகளால் ஆனது.

வெள்ளையாகத் தெரியும் பிளாஸ்ரிக் தட்டுப் போல பல உருவங்களில் சிறிதும் பெரிதுமாக நட்சத்திரம், முக்கோணம் நீள் சதுரம் என கடையில் விற்கிறார்கள். பிளாஸ்ரிக் மணிகளும் உறைகளில் நிறைத்த பல நிறங்களில் வாங்கலாம்.

விரல்களின் அசைவு – மனதின் கற்பனை  -பொறுமை -– எண்ணத்தின் கூர்மைகளைச் சீராக்கும் பயிற்சி இது.

பிளாஸ்ரிக் தட்டில் சிறு சிறு ஆணி போல நிமிர்ந்து கூர் போன்று நிற்பதில் பிளாஸ்ரிக் மணியை நிறுத்த வேண்டும். விருப்பமான வண்ணங்களில் பிளாஸ்ரிக் மணிகளை அடுக்கிய பின்பு  பிள்ளைகளின் பெயரை ஒரு துண்டில் எழுதி உயரமான இடத்தில் வைப்போம். அடுத்த அடுத்த நாட்களில் இன்னாருடையது என்று அடையாளம் கண்டு வேலையைத்  தொடரலாம். பெரியவர்கள் ஒரு நாளிலேயே முடிப்பர். சிறுவர்களிற்குப் பல நாட்கள் எடுக்கும்.

5 – 6 பேர் ஒன்றாகச் செய்ததும் ஒவ்வொன்றிலும் மேலே பேக்கிங் கடதாசியை வைத்து அயன் பண்ண வேண்டும். பிளாஸ்ரிக் மணியின் மேற் பரப்பு உருகி ஒன்றோடு ஒன்று ஒட்டி செய்த உருவம் அழகாக அமையும். இப்போது அடியில் நீங்கள்  வைத்து அடுக்கிய தட்டிலிருந்து உருவத்தை கீழே இறக்கலாம். உருவம் கையிலெடுக்கக்  கூடியதாக இருக்கும்.

படத்தில் நான் பிள்ளைகளோடு செய்த உருவங்களைப்  பார்க்கலாம். சிறிது 2 ம் சமையறையில் தொங்குகிறது. பெரியவை 2ம் குளியலறையில் தொங்குகிறது.

பிள்ளைகளோடு சேர்ந்து நாமும் செய்வோம் மாதிரியாக. 

பல பல மாதிரிகள் உள்ள சிறு படப் புத்தகம் நிலையங்களிற்கு  வரும்.

P1040571

அதையும் பிள்ளைகள் பார்த்து உரு அமைய ஏற்ற நிறங்களாக மணிகளை அடுக்குவார்கள்.

படத்தில் இதுவும் உள்ளது.

மிக சுலபமானது.

ஆனால் சிறு பிள்ளைகளிற்கு இது மிகப் பெரிய வேலை தானே!….

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

9-3-2013.

12720-22coloured

 

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Packirisamy N
  மார்ச் 10, 2013 @ 02:06:24

  My children used to do these arts, when they were in the childcare. In todays, computer gadgets age, this kind of art is necessary to improve their hand skill and creative skill . Also this makes children, to learn patience. Good post. Thanks

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 10, 2013 @ 02:59:28

  உங்களின் பொறுமைக்கு பாராட்டுக்கள்…

  அழகாக உள்ளது சகோதரி…

  மறுமொழி

 3. தி.தமிழ் இளங்கோ
  மார்ச் 10, 2013 @ 04:38:08

  இதுபோன்ற வேலைகளால் என்ன பயன்? என்று வினவுவோருக்கு உங்களின் பதிவில் ஒரு அருமையான பதில் ….

  // விரல்களின் அசைவு – மனதின் கற்பனை – எண்ணத்தின் கூர்மைகளைச் சீராக்கும் பயிற்சி இது. //

  கைவினைப் பொருட்கள் செய்யும் சுயஉதவிக் (SELF HELF) குழுவினர் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

  மறுமொழி

 4. Rajarajeswari jaghamani
  மார்ச் 10, 2013 @ 04:39:36

  கலையும் கற்பனையும் அபாரம் ..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  மறுமொழி

 5. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 10, 2013 @ 05:55:15

  மிகவும் அருமையான கைவேலைகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.

  மறுமொழி

 6. கோமதிஅரசு
  மார்ச் 10, 2013 @ 08:18:34

  விரல்களின் அசைவு – மனதின் கற்பனை – பொறுமை – எண்ணத்தின் கூர்மைகளைச் சீராக்கும் பயிற்சி இது.//
  நன்மைகள் பல தரும் நல்ல கை வேலை. அருமை.

  மறுமொழி

 7. Mageswari Periasamy
  மார்ச் 10, 2013 @ 19:03:56

  சிறு குழந்தைகளின் சிந்தனைகளை சீர் படுத்த உதவும் இந்த மாதிரியான கைவேலைகள் நாங்கள் நிறைய எங்கள் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றோம் சகோதரி. தங்களின் பதிவு மேலும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. அருமை. தொடருங்கள்.

  மறுமொழி

 8. Dr.M.K.Muruganandan
  மார்ச் 12, 2013 @ 16:35:21

  “விரல்களின் அசைவு – மனதின் கற்பனை -பொறுமை -– எண்ணத்தின் கூர்மைகளைச் சீராக்கும் பயிற்சி இது.”
  அதுதான் அடிப்படை. நன்றாகச் சொல்கிறேன்.

  மறுமொழி

 9. மகேந்திரன்
  மார்ச் 12, 2013 @ 19:18:01

  பொறுமையை இதுபோன்ற
  கலைகளை செய்வதன் மூலம்
  குழந்தைகள் தெரிந்துகொள்ள உதவும்.
  மிகவும் அருமையான பதிவு வேதாம்மா…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: