265. தன்னல விரும்பிகள்

its-time-to-be-selfish

 

தன்னல விரும்பிகள்

ஆசி, வாழ்துதலை

நேசிப்பவன் மனிதன்.

யோசிப்பதில்லை பிறரையும்

ஆசிக்க, வாழ்த்திட.

பதவி, பணமேற

உதவாது ஊசும்

இதமான மனம்.

மதமாகிறது இதயம்.

பணிவு சிறந்த

அணிவடமாதல் பெருமை.

கணிப்பில் நழுவுகிறான்

பிணியுடை மனிதன்.

பிறரின் உதவியால்

சிறக்க உயர்பவன்

பிறரை உணர்ந்திடான்.

மறக்கிறான் தர்மம்.

மன்னுயிரின் மகசூல்

மன்னிப்பைக் கருவியாக்கி

தன்னிச்சைச் செயல்கள்

தன்னாலே நகர்கிறது.

பா வரையுமிவள்

பா வானதி  வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

12-3-2013.

(மதம் – செருக்கு, வெறி. அணிவடம் – கழுத்திலணியும் மாலை.)

Nyt billede

 

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  மார்ச் 13, 2013 @ 00:59:55

  ஆசி, வாழ்துதலை

  நேசிப்பவன் மனிதன்.

  யோசிப்பதில்லை பிறரையும்

  ஆசிக்க, வாழ்த்திட./

  அருமை. தன்னலவிரும்பிகள். கவிதை.

  வாழ்த்துதல் நலம் பயக்கும், வாழ்த்துபவருக்கும், வாழ்த்தை பெறுபவருக்கும்..
  இருவருக்கும் ஒரு இணக்கம் வந்து சுமுகமாய் வாழலாம்.
  வாழ்த்தி வாழ்வோம்.
  வாழ்க வளமுடன்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 14, 2013 @ 16:32:41

   சுலபமாகச் சொல்லலாம் நடப்பதில்லையே சகோதரி!.
   ஆதங்கத்தை இப்படி வெளியேற்றுவது மட்டும் தான்.
   நல்ல இயல்போடு பிறந்தவருக்குப் புத்திமதியே தேவையில்லை.

   மிக்க நன்றி சகோதரி கருத்திற்கு. தெய்வக் கிருபை நிறையட்டும்.

   மறுமொழி

 2. fகவிஞா் கி. பாரதிதாசன்
  மார்ச் 13, 2013 @ 01:07:28

  வணக்கம்!

  தன்னல நெஞ்சுள் தமிழ்நலம் வந்திடுமோ?
  நன்னலப் பாபடைத்தீா் நன்று

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 13, 2013 @ 02:15:41

  வரிகள் உண்மை… அவர்கள் எல்லாம் மனதார சந்தோசப்பட தெரியாதவர்கள்…

  மறுமொழி

 4. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 13, 2013 @ 03:13:25

  😉 அருமை.

  மறுமொழி

 5. sasikala
  மார்ச் 13, 2013 @ 08:21:51

  மன்னிப்பைக் கருவியாக்கி

  தன்னிச்சைச் செயல்கள்

  தன்னாலே நகர்கிறது.
  உண்மை உண்மை.

  மறுமொழி

 6. பழனிவேல்
  மார்ச் 13, 2013 @ 09:09:40

  “ஆசி, வாழ்துதலை
  நேசிப்பவன் மனிதன்.
  யோசிப்பதில்லை பிறரையும்
  ஆசிக்க, வாழ்த்திட.”

  அழகிய வரிகள், ஆழமான உண்மைகள்.
  அருமை.

  மறுமொழி

 7. ranjani135
  மார்ச் 13, 2013 @ 15:47:41

  //பணிவு சிறந்த
  அணிவடமாதல் பெருமை.//

  பலருக்கு இந்த அணிவடம் அணியத் தெரிவதில்லை.
  அதனால் வரும் துன்பமே எல்லாம்!

  மறுமொழி

 8. DHAVAPPUDHALVAN
  மார்ச் 14, 2013 @ 11:14:18

  சொற்றொடர்களையும், கருத்தையும் ஆழ்ந்து சுவாசித்தேன். வந்தனம்.

  மறுமொழி

 9. aathira
  மார்ச் 14, 2013 @ 19:46:38

  வாழ்க்கையை வாழத் தெரியாதவர்கள்..நல்ல வரிகள்

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 12, 2017 @ 09:06:20

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- ஆசி, வாழ்துதலை
  நேசிப்பவன் மனிதன்.
  யோசிப்பதில்லை பிறரையும்

  ஆசிக்க, வாழ்த்திட
  **** அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!
  13 March 2013 at 06:00 · Unlike · 3

  Aathi Parthipan :- அருமை அருமை 🙂
  13 March 2013 at 06:10 · Unlike · 3

  Ganesalingam Arumugam :- பிறரின் உதவியால்
  சிறக்க உயர்பவன் …பிறரை உணர்ந்திடான்.
  மறக்கிறான் தர்மம்.
  இனிய காலை வணக்கம்.
  13 March 2013 at 07:30 · Unlike · 1

  Verona Sharmila:- பதவி, பணமேற
  உதவாது ஊசும்
  இதமான மனம்….
  மதமாகிறது இதயம். அருமை
  13 March 2013 at 11:04 · Unlike · 1

  கவிஞர் தாரை கிட்டு:- உயர்ந்த சொல்லாட்சி
  13 March 2013 at 16:12 · Unlike · 1

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 12, 2017 @ 09:10:04

  Loganadan Ps :- சிறப்பான பதிவு. உயிரோட்டம் நிறைந்த வரிகள். மகிழ்ச்சி. நன்றி
  13 March 2013 at 18:24 · Unlike · 2

  Abira Raj :- ஆசி, வாழ்துதலை
  நேசிப்பவன் மனிதன்.
  யோசிப்பதில்லை பிறரையும்
  ஆசிக்க, வாழ்த்திட.////அருமை
  13 March 2013 at 22:11 · Unlike · 1

  Vishnu Rajan:- மன்னுயிரின் மகசூல்
  மன்னிப்பைக் கருவியாக்கி
  தன்னிச்சைச் செயல்கள்
  தன்னாலே நகர்கிறது.
  // அருமை அன்பு சகோ ..
  14 March 2013 at 06:56 · Unlike · 1

  Dhavappudhalvan Badrinarayanan A M:- சொற்றொடர்களையும், கருத்தையும் ஆழ்ந்து சுவாசித்தேன். வந்தனம் Sago.
  14 March 2013 at 12:11 · Unlike · 2

  Sivasuthan Sivagnanam:- // பிறரின் உதவியால்

  சிறக்க உயர்பவன்…See more
  14 March 2013 at 18:10 · Unlike · 2

  Vetha Langathilakam :– Mikka nanry to all of you. God bless you all.
  14 March 2013 at 18:59 · Like · 2

  Ramadhas Muthuswamy :- ஆம்….// பிறரின் உதவியால்
  சிறக்க உயர்பவன்
  பிறரை உணர்ந்திடான்.
  மறக்கிறான் தர்மம்.// … வாழ்த்துக்கள்!!!
  15 March 2013 at 03:22 · Unlike · 2

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: