266. நிறைந்த வாழ்வு

486028_341252872657178_706644495_n

நிறைந்த வாழ்வு

 

வரவாகும் வாழ்க்கை, தரவுகளின் இணைப்பு

இரவு, கனவு, உரவு தரும்.

போராடா வாழ்வால் நீராடா இமைகள்

சீராட்டும் சாராம்சம் ஆராதனைக் குரியது.

 

துணையுடன் நடக்கும் இணையற்ற இலக்கு

அணைக்காத தனிமை பிணைக்காது நெருடலை.

வலியற்ற பாதையின் கிலியற்ற துயில்

கலி தீர்க்குமெனில் கெலிப்பு முதல்.

 

நிறை வாழ்வின் குறையற்ற கணக்கு

இறையாசி யோடினிதாய்த் துறை முகமெட்டும்.

பழக்கமான வாழ்வு, வழக்கு வாதமின்றி

முழிக்கும் வெற்றி! கிழக்கு வெளுக்கும்!.

 

(உரவு – வலிமை. கெலிப்பு –வெற்றி. முழிக்கும் – விழிக்கும்.)

 

 

பா ஆக்கம் பா வானதி

வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

14-3-2013

 

 

 

sunset

 

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  மார்ச் 15, 2013 @ 00:05:56

  நிறைவான கவிதை.

  மறுமொழி

 2. Mageswari Periasamy
  மார்ச் 15, 2013 @ 01:25:59

  அருமையான தமிழ் சொல்லாடல்.. எப்படி சகோதரி? தங்களால் இவ்வளவு நேர்த்தியாக எழுத முடிகின்றது? நானும் முயற்சி செய்துதான் பார்க்கின்றேன் ஆனால் பேச்சு தமிழில் வருவது மரபுத்தமிழில் வருவது இல்லை. வருத்தமாகத் தான் இருக்கின்றது. தங்களின் கவிதைப்பணி மென்மேலும் வளரட்டும்.. வாழ்க..வளமுடன்…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 15, 2013 @ 18:34:51

   மிக்க நன்றி.
   இறையாசி நிறையட்டும்.
   (தங்களது வெளிநாட்டில் வாழும் பிரிந்த மனைவிமாருக்கு சமர்ப்பித்த வரிகள் வாசித்தேன்.
   மிக உரை நடையாகவே இருந்தது. அது தான் நான் ஏதும் எழுதவில்லை.
   பாதிப் பேரும் அப்படித்தான் எழுதுகிறார்கள் கவலையாக உள்ளது. கருத்தைப் பிட்டு வைத்தால் பொல்லாப்புத் தானே வரும்.)

   மறுமொழி

 3. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 15, 2013 @ 02:38:09

  படமும் படைப்பும் அருமை. பாராட்டுக்கள்.

  எழுத்துக்கள் படிக்கும் விதமாக பளிச்சென்று இல்லை. வெள்ளைப் பின்னனியில் கருநீல வண்ணத்திலேயே எழுதினால், படிக்க சுலபமாக இருக்கக்கூடும்.

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 15, 2013 @ 03:03:04

  அருமை…

  நாம் அமைத்துக் கொள்வதைப் பொறுத்து தான் நிறைவான வாழ்க்கை…

  மறுமொழி

 5. ramani
  மார்ச் 15, 2013 @ 05:37:56

  Niraivaana arumaiyaana kavithai

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 15, 2013 @ 07:24:08

  Through E mail :-

  nirantha vaazhvu manathirkku niraivaaga ullathu.
  nandri.

  -sravani.

  மறுமொழி

 7. கோமதி அரசு
  மார்ச் 15, 2013 @ 07:37:25

  நிறை வாழ்வின் குறையற்ற கணக்கு

  இறையாசி யோடினிதாய்த் துறை முகமெட்டும்.

  பழக்கமான வாழ்வு, வழக்கு வாதமின்றி

  முழிக்கும் வெற்றி! கிழக்கு வெளுக்கும்!.//
  கவிதை நன்றாக இருக்கிறது.அருமையான் வரிகள்.
  நிறை வாழ்க்கை கொடுத்த இறைவனுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 8. ranjani135
  மார்ச் 15, 2013 @ 16:18:51

  நிறைவான வாழ்க்கையைப் பற்றிய நிறைவான கவிதை.
  எப்போதும் இதேபோல நிறைவாக இருக்க வாழ்த்துகள்!

  மறுமொழி

 9. rathnavel natarajan
  மார்ச் 18, 2013 @ 07:26:51

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: