33. திருமண வாழ்த்து.

திருமண வாழ்த்து.

 

” அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்  

பிறன் பழிப்பதில்லாயின் நன்று ”  (திருக்குறள்)

 

 

காதல் வானில் தூதாகிய தாரகைகளின்

காதல் தூது திருமணக் கூட்டிற்குள் சரணம்.

மோதலின்றிச் சாதல் வரை கூடல் இனிக்கூடல்!

ஈதல் எடுத்தலேயினி வாலிபக் கடைசித் துளிவரை.

காதல் வாழ்க ஆடல் பாடலுடன் நோதலின்றி.

 

சுனையென ஆசைகள்  இணைந்து முளைத்தது.

நனைந்த இதயங்கள் காதலாகிக் கனிந்தது.

முனைவர் விடுதலை மயிலாடுதுறை இளைஞனுக்கும்

முனைவர் உமாதேவி கோயம்புத்தார் மங்கைக்கும்

வினையாகிய காதல் திருமணக் கிரீடம் சூட்டுகிறது.

 

இனப்பற்றாளன் இனிய பண்பாளன் விடுதலை

தினம் பிறருக்கு உதவுவதில் பிரியமானவன்.

மனம் பெரியாரியலில் மூழ்கி நீந்துகிறான்.

தனம் இவன் ஈழத்தமிழரோடு இணைந்தவன்.

இனசனத்துடன்; 18-1-2013ல் திருமணம் கொள்கிறான்.

 

எங்களால் மறக்கவியலாத அன்புத் தோழனின்

மணநாளிது மனதார வாழ்த்துகிறோம் வாழ்க!

மங்கை உமாதேவியுடன் பதினாறும் பெறுக!

மங்கலமென்பது கணவனும் மனைவியும் இணைந்து

திங்கள் போல் ஒளிவீச உயர்ந்து வாழ்தலே!

 

 

வாழ்க! பல்லாண்டு வாழியவே!

ஓகுஸ் வாழ் தமிழ் மக்கள் டென்மார்க்.

9-1-2013

 

 

 

 

Invitation

P1040590

 

இந்தியாவில் நடந்த திருமணத்தில் வாசித்து கொடுக்கப்பட்டது.

16.3.2013ல் ஓர வரவேற்பில் மறுபடி என்னால் வாசிக்கப்பட்டது.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

16-3-2013.

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 16, 2013 @ 22:56:31

  அன்பான இனிய நல்வாழ்த்துகள்..

  மறுமொழி

 2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 17, 2013 @ 00:28:18

  வணக்கம்
  சகோதரி

  இருஉள்ளங்களும் இல்லறம் என்ற புனித பாதையில் பயணிக்க எனது அன்பான திருமணவாழ்த்துக்கள் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு மலரட்டும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 3. இளமதி
  மார்ச் 17, 2013 @ 00:53:12

  அன்புச் சகோதரி!
  இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்.அருமை.
  மங்கள வாழ்த்துப்பா படித்திருக்கின்றீர்கள் மணமக்களுக்கு…
  நல்ல தருணத்தில்தான் நானும் வந்துள்ளேன்…:)

  மணமக்களுக்கும் உங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 17, 2013 @ 07:35:45

   மிக நன்றி இளமதி.
   தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
   ஓரு சிறு சந்தேகத்தோடு தான் கருத்திட்டேன்.
   சிலர் நான் சென்று கருத்திட்டாலும் இங்கு வரமாட்டார்கள்.
   நானே களைத்துப் போவதும் உண்டு.
   அதிட்ட லாபச்சீட்டு வாங்குவது போலத்தான் எனக்கு கருத்திடுவது உள்ளது.
   தங்கள் இலக்கம் வந்துள்ளது மிக மகிழ்ச்சி.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 17, 2013 @ 01:46:42

  மனமார்ந்த வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. ranjani135
  மார்ச் 17, 2013 @ 05:34:09

  கணவனும் மனைவியும் இணைந்து
  திங்கள் போல் ஒளிவீசி உயர்ந்து வாழ எங்களின் ஆசிகளையும் கூறுங்கள்!

  மறுமொழி

 6. raveendran sinnathamby
  மார்ச் 17, 2013 @ 08:18:58

  இனிய கவியாறு இணைத்ததுவே புது மணத்தம்பதியை
  இனிக்கூடல் வருமென்றீர்கள் இனிக்கும் கூடல் வரும்
  வாழ்த்து பாடிய வேதா திலகமே!வாழ்த்துகள் வாழ்க!
  வதிரி சி.ரவீந்திரன் தரும் வாழ்த்து இக் கவியாற்றுக்கு!

  மறுமொழி

 7. Viduthalai Mayiladuthurai
  மார்ச் 17, 2013 @ 11:22:27

  ஓகூஸ் தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்தெழுதிய கவிதாயினி வேதா அம்மா அவர்களுக்கு எங்கள் இனிய வணக்கங்களும் நன்றிகளும். வாழ்த்து எழுதியவர் வாயாலேயே வாழ்த்து கேட்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி! அதற்கும் நன்றி! பின்னூட்டம் வழி வாழ்த்திய அன்பர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  மறுமொழி

 8. kowsy
  மார்ச் 17, 2013 @ 11:34:15

  நல்ல கவிதை வாழ்த்து. புதுமணத் தம்பதிகள் வாழ்க பல்லாண்டு

  மறுமொழி

 9. கோமதி அரசு
  மார்ச் 17, 2013 @ 13:16:26

  முனைவர் விடுதலை மயிலாடுதுறை இளைஞனுக்கும்

  முனைவர் உமாதேவி கோயம்புத்தார் மங்கைக்கும்

  வினையாகிய காதல் திருமணக் கிரீடம் சூட்டுகிறது.//

  மணமக்களுக்கு வாழ்த்துக்கள் வாழக் வளமுடன்!
  வாழ்க பல்லாண்டு!
  வாழ்க நலமுடன்!

  உங்கள் கவிதை மிக நன்றாக இருக்கிறது.

  மறுமொழி

 10. nayaki
  மார்ச் 18, 2013 @ 04:00:31

  நல்ல கவிதை வாழ்த்து. புதுமணத் தம்பதிகள் வாழ்க பல்லாண்டு

  மறுமொழி

 11. பழனிவேல்
  மார்ச் 18, 2013 @ 04:08:53

  “சுனையென ஆசைகள் இணைந்து முளைத்தது.
  நனைந்த இதயங்கள் காதலாகிக் கனிந்தது.
  முனைவர் விடுதலை மயிலாடுதுறை இளைஞனுக்கும்
  முனைவர் உமாதேவி கோயம்புத்தார் மங்கைக்கும்
  வினையாகிய காதல் திருமணக் கிரீடம் சூட்டுகிறது.”

  வாழ்த்துக் கவிதை மிக அருமை.
  குலம் சிறக்க வாழி
  நலம் குறையா வாழி
  வளம் பெருக வாழி
  புகழ் நிலைக்க வாழி

  மறுமொழி

 12. rathnavel natarajan
  மார்ச் 18, 2013 @ 07:19:18

  அருமை. வாழ்த்துகள்.

  மறுமொழி

 13. Rajarajeswari jaghamani
  மார்ச் 18, 2013 @ 14:44:15

  மணநாளிது மனதார வாழ்த்துகிறோம் வாழ்க!

  மறுமொழி

 14. இறைகற்பனைஇலான்
  மார்ச் 29, 2013 @ 11:02:04

  தமிழ் நெஞ்சங்களுக்கு ந்ன்றி.புதுமணம்க்கள் வாழ்க, வாழ்க.என் மகனை தமிழ்கூறும் நல்லுல்கில் பயனிக்கக் காணுகையில் சிந்தை நிறைவு கொள்கிறது.என்னை என் துணைவியாரும் குழந்தைகளும் சுயர்த்திக் காட்டிவிட்டார்கள். உலகில் தமிழ்ரில்லா நாடில்லை. தமிழருக்கென்று ஒரு நாடில்லையே. வெல்லட்டும் தமிழீழம்,த்மிழகம். வாய்ப்ப:ளித்த கவி அம்மைக்கு மிக்கந்ன்றி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: